கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 09.12.2020 (புதன்)...

 

🌹பிரச்சனைக்கு சிறந்த ஆயுதம் பொறுமை தான்

பொறுமை அனைத்திற்கும் பதில் தரும்

அதற்கு காலதாமதம் ஆகும் ஆனால்

ஒருபோதும் தோற்றுப்போகாது.!

🌹🌹எல்லோர் மனதிலும் காயங்கள் உண்டு

அதை வெளிப்படுத்தும் விதம் தான் வித்தியாசம்

சிலர் கண்ணீரால்

சிலர் புன்னகையால்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிவேக ஃபைபர் ஆப்டிக் தகவல் இணைப்பு பெறும்.

இந்தியா மிகவும் விருப்பமான மொபைல் உற்பத்தி தளமாக வளர்ந்து வருகிறது.

- பிரதமர் மோடி.

ᷤ🌈🌈எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர்.

- நேபாளம் மற்றும் சீனா கூட்டாக அறிவிப்பு.

🌈🌈ஆன்லைன் கல்வி மூலம் அதிக கட்டணம் வசூலித்த 14 கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை 

👉மாணவர்களும், பெற்றோர்களும் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவு 

- அமைச்சர் செங்கோட்டையன் 

🌈🌈தமிழ்வழி படித்த மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் 

ஒன்று முதல் பட்டப் படிப்பு வரை தமிழ்வழியில் படித்தோருக்கு குரூப்-1, 2 தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும்

🌈🌈தடையை மீறி வேல்யாத்திரை சென்றதாக  பாஜகவினர் மீது தமிழகம் முழுவதும் 135 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

🌈🌈2013ஆம் ஆண்டு   TET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்கள்

த‌மிழக‌ முதல்வர் பழனிசாமியிடம் மனு. உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி

🌈🌈ஆயுர்வேதா,சித்தா, யுனானி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்

🌈🌈அரசுப்பணிகளில் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. 

👉இதன்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை முழுவதுமாக தமிழ் வழியில் பெற்றிருந்தால் மட்டுமே பயன் அடைய முடியும்.

👉10ம் வகுப்பு கல்வித் தகுதி உள்ள வேலைக்கு 1 முதல் 10 வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

👉12 ம் வகுப்பு கல்வித் தகுதி எனில் 10, 12 தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

👉இளங்கலை கல்வித் தகுதி எனில்

10, 12, இளங்கலை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

👉முதுகலை கல்வித் தகுதி எனில்10, 12, இளங்கலை, முதுகலை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

🌈🌈10-ம் வகுப்பு  மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள்  மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்-DGE

🌈🌈அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் எம்பிபிஎஸ் படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கோரிய மனு-தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

🌈🌈இக்னோ மாணவர் சேர்க்கை அவகாசம் டிச.15 வரை நீட்டிப்பு

🌈🌈சிறை அலுவலர், ஒருங்கிணைந்த பொறியியல் பதவி தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

🌈🌈பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுமூப்பு ஆசிரியர்கள் வேண்டுகோள்

🌈🌈சிபிஎஸ்இ:  தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி

🌈🌈மருத்துவப் பொதுக் கலந்தாய்வு: இதுவரை 2,965 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு

🌈🌈கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் - தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் மைய வருகையை EMIS Attendance App மூலம் பதிவு செய்ய வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு 

🌈🌈தமிழகத்தில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையம் தயார் - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.

🌈🌈டிசம்பர் 14-ம் தேதி ஓபிஎஸ்-இபிஏஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.👉சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

🌈🌈மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி; 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது இந்தியா

🌈🌈கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளன? 

இதில் சிபிஐ எத்தனை வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்- 

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.

🌈🌈ஒரே புத்தகம் பல பெயர்களில் அச்சிடப்பட்டு நூலகத்துறைக்கு வாங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நூலகத்துறை சார்பில் அண்மையில் வாங்கப்பட்ட நூல்கள் உள்ளிட்டவை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தங்கம் தென்னரசு, திமுக.

🌈🌈சேலம் - சென்னை 8 வழிப்பாதை திட்டம் புதிய அரசாணையுடன் தொடரலாம்

👉நிலம் கையகப்படுத்த வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவைதான் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது

 👉8 வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும்

👉சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும், மக்களிடன் கருத்துக் கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாம்!            உச்சநீதிமன்றம் தீர்ப்பு

🌈🌈மத்திய அரசின் வாதத்தால், 8 வழிச்சாலை வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ரத்தாகக் காரணமாகி விட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

🌈🌈8 வழிச்சாலை திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தை தொடர திட்டம்: சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

🌈🌈2021 பிற்பாதியில் 5ஜி சேவையை ஜியோ வழங்கும்!" - முகேஷ் அம்பானி உறுதி

🌈🌈ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அனுமதி குறித்து மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் பேச்சு:

இந்தியாவில் 250 ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டுவர திட்டம்

🌈🌈வேளாண் சட்டங்களுக்கு எதிராக 14வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

🌈🌈10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, மாநில இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தமிழகத்தில் CBSE பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கோரியுள்ளது. 

🌈🌈சூரப்பாவை விசாரிக்க குழு அமைத்தது நியாமற்றது; விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் கடிதம்.

🌈🌈மத சுதந்திரத்தின் அடிப்படையில் மிக மோசமான மீறல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கும் கவலை தரக்கூடிய நாடுகளாக சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, பர்மா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை அறிவித்தது அமெரிக்கா.

🌈🌈சீனாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக சான்க்சி மாகாணத்தில் அமைந்துள்ள Hukou நீர்வீழ்ச்சி உறைந்து பனிக்கட்டியாக மாறி உள்ளது.

🌈🌈வாஷிங்டன்: கொரோனா நோய்த்தொற்று பரிசோதனையை செல்லிடப்பேசி வாயிலாக 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா்.                                                            

🌈🌈DSE - பேரிடர் மேலாண்மை - "FAST" Mobile App - பதிவிறக்கம் செய்ய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உத்தரவு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🌈🌈புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு. 

🌈🌈சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு அடுத்த ஆண்டு (2021) பொதுத் தேர்வுக்காக விண்ணப்பிக்க நவ.11-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது டிசம்பர் 9-ம் தேதிக்குள் அவற்றை சிபிஎஸ்இ இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, அதில் திருத்தம் செய்ய விரும்புவோர் டிச.10 முதல் டிச.14-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

🌈🌈CPS- சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் CPS சந்தா தொகையை உடனடியாக நிறுத்தம் செய்ய அரசு தகவல் தொகுப்பு ஆணையர் உத்தரவு                                                                      

🌈🌈முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த 18  பணியிடங்களுக்கு   பணியிட மாறுதல் ஆணை நேற்று  வெளியிடப்பட்டது. 

🌈🌈CPS-ஆல் ஆண்டிற்கு ரூ.1000 கோடி நிதிச்சுமையைச் சந்திக்கும் தமிழக அரசு, CPS-ஐ ரத்து செய்வதால் ரூ.20,000 கோடி உபரி நிதியைப் பெறமுடியும்! CPS-ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?

🌈🌈CPS வல்லுநர் குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையானது பரிசீலனையில் உள்ளது : மேலும் அது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - நிதித் துறை சார்புச் செயலாளர் RTIஇல்  தகவல்.

🌈🌈அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு. 

🌈🌈CPS திட்டத்தை ரத்து செய்தால் அரசின் நிதிச்சுமை குறைய வாய்ப்பு - நாளிதழ் செய்தி. 

🌈🌈இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு  டிசம்பர் 15 வரை அவகாசம்  நீட்டிப்பு. 

🌈🌈அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தமை புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் பட்டியல் தயாரித்துள்ளமை - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...