கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 25.12.2020 (வெள்ளி)...

 


🌹உண்மைகள் எப்போதும் நிராகரிக்கப்படும் வெறுக்கப்படும் ஒதுக்கப்படும் மறைக்கப்படும் ஆனால் நிச்சயம் ஒரு நாள் வெளிப்படும்.!

🌹🌹தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட

தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்.!!

🌹🌹🌹கிறிஸ்துமஸ் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும்  கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈இன்று 25.12.2020 முற்பகல் 11.00 மணியளவில் ஜனநாயக முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு  தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  மாநில பொதுச் செயலாளர்  மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் தன் முதல் நிகழ்ச்சியாக நாகை மாவட்டத்தில் தலைஞாயிறில் உள்ள "ஆசிரியரினக் காவலர்"- பாவலர் அவர்களின் இல்லத்திற்கு சென்று பாவலரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து விட்டு  பொதுச் செயலாளராக தன் பணியைத் தொடங்குகிறார்.பிற்பகல் 2 மணி அளவில் திருமருகலில் உள்ள பாவலர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு

இயக்க முன்னோடிகளை சந்திக்கிறார்.

🌈🌈தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு தள்ளிவைக்க கோரிக்கை

🌈🌈அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் (Hi-Tech Labs) மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு.

🌈🌈சமக்ர சிக்ஷா மாநில திட்ட கூடுதல் இயக்குநராக திருமதி.அமீர்தா ஜோதி IAS நியமனம்

🌈🌈தமிழக அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

🌈🌈தமிழ்நாடு அமைச்சுப் பணி- இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை(3)பணியாளர்களுக்கு 15.03.2020 அன்றைய நிலவரப்படி உதவியாளராக பதவி உயர்வு/பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி ஆணை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

🌈🌈90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையம் - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியது

🌈🌈CPS யை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 28, 29 & 30 தேதிகளில் CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் அறிவிப்பு.

🌈🌈அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்ட ரூ.89 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

🌈🌈தேசிய திறனாய்வுத் தேர்வு வரும், டிச.27-ம் தேதி நடைபெறுகிறது.                                              🌈🌈Safety & Security பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த Secondary & Elementary பள்ளிகளுக்கு ரூ.500 நிதி விடுவிப்பு

🌈🌈நேற்று 24/12/2020 அன்று  மாநில திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இ - மெயில் மூலம் ஒரு செய்தி வந்து உள்ளது.

அந்த செய்தி என்னவென்றால் பகுதிநேர ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் இடத்திற்கு பணியிட மாறுதல் பெறுவது குறித்தது அதாவது இந்த பணியிட மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் அதே மாவட்டத்திலேயே என்ற வகையில் பணி மாறுதல் பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மேலும்

இந்த பணியிட மாறுதல் பெறவேண்டும் என்றால் பணியிட மாறுதல் கோரும் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் எண்ணிக்கை 100 ஆக இருக்க வேண்டும் மற்றும் அந்த பள்ளியில் தங்களின் பணி இடம் காலியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

🌈🌈வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அதிமுக பிரச்சார பொதுக்கூட்ட தொடக்க நிகழ்வுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் யாரையும் அழைக்கவில்லை என தகவல்

பேரவை தேர்தலுக்கான கூட்டணி முறையாக இறுதி செய்யப்பட்ட பிறகே அனைத்து தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்த திட்டம்

🌈🌈கொரோனா தடுப்பு விதிகளுடன் சனிப்பெயர்ச்சி திருவிழாவை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.

🌈🌈'பூமி' திரைப்படம் நேரடியாக HotStar OTT தளத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது என ஜெயம் ரவி அறிவிப்பு

🌈🌈வன்னியர் தனி இட ஒதுக்கீடு கோரி வரும் 30-ம் தேதி ஊராட்சி ஒன்றியம் அளவில் பாமக சார்பில் போராட்டம் அறிவிப்பு

🌈🌈வரும் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- இடது சாரி கட்சிகள் கூட்டணி உறுதியானது

🌈🌈ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்கப்படும் 

2022ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் விளையாடும் 

- பிசிசிஐ

🌈🌈நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைவில் அரசால் உரிய நிவாரணம் வழங்கப்படும் 

- தலைமை செயலாளர்

🌈🌈தமிழகத்தில் ஆறு ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

🌈🌈மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும்,  வரலாற்று ஆய்வாளருமான தொ.பரமசிவன் காலமானார்.

🌈🌈யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணியில் பாதிப்பு இருக்காது

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அடுத்து நடைபெறும் விவசாய போராட்டம் தீவிரமாக இருக்கும்

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்

🌈🌈தேர்தலில் போட்டியிடுவதை விட இந்த மண்ணில் காலூன்ற துடிக்கும் சனாதனிகளை எதிர்ப்பதே நம் தலையாய கடமை.

ஆன்மிகம் என்பது மதத்தோடு தொடர்புடையது; யாருடைய முகமாக இவர்கள் களத்தில் இருக்கிறார்கள்?

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி

🌈🌈எம்.ஜி.ஆர். செய்ததை வேறொருவர் செய்ய முடியாது என சீமானுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.

எம்.ஜி.ஆர். பெரியாரின் எழுத்துகளை சட்டமாக்கினார், பசித்த வயிறுக்கு உணவளித்தார் என வைகோ புகழாரம்.

பிரபாகரனுக்கு அரணாக இருந்து ஈழத்தமிழர் மனதில் எப்போதும் இடம்பெற்றவர் எம்.ஜி.ஆர்

🌈🌈குப்பை செலுத்த கட்டணம் விதிக்கப்பட்டதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்கட்சியினர் எதிர்ப்பை அடுத்து குப்பை கொட்டுவதற்கான கட்டணத்தை நிறுத்துவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

🌈🌈ஜனவரி 1ம் தேதி முதல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயரும் அபாயம்; எரிவாயு விலையை வாரம் ஒருமுறை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு என தகவல்.

🌈🌈வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 30வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்.

🌈🌈ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வு

நடத்தப்படும்; ஜனவரி 2ம் தேதி முதல் 20ம்

தேதி வரை தேர்வு நடைபெறும் என

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🌈🌈பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை -தமிழக அரசு

🌈🌈மத்திய அரசின் நான்கு திரைப்பட ஊடக

அமைப்புகள்; தேசிய திரைப்பட மேம்பாட்டு

வளர்ச்சிக்கழகத்துடன் இணைக்க மத்திய

அமைச்சரவை ஒப்புதல்.

🌈🌈இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனாவால் தடுப்பூசிகள் வீணாகாது: விஞ்ஞானிகள் நம்பிக்கை.

🌈🌈கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடித்த மாடர்னா என்ற நிறுவனம் புதிய வகை கொரோனாவையும் எங்கள் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என அறிவித்துள்ளது.

🌈🌈தென்னாப்பிரிக்காவில் வெளிவந்த கோவிட் -19 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இரண்டு தொற்றுக்கள் பிரிட்டனிலும் பதிவாகியுள்ளதாக பிரிட்டனின் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் புதன்கிழமை தெரிவித்தார்.

🌈🌈ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். 

🌈🌈மேற்கு வங்கத்தில் +2 மாணவர்களுக்கு செல்போன் மற்றும் டேப்லெட் வாங்குவதற்கு அரசு சார்பில் ரூ.10000 வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

🌈🌈ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் புதிய விடைத்தாளைப் பயன்படுத்துவது குறித்த விளக்கங்களைப் பெற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை ஜனவரி 8-ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  அறிவித்துள்ளது

🌈🌈10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வுத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது 

🌈🌈Inspired award - 2020 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 

🌈🌈சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  கூறியுள்ளார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns