கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 28.12.2020 (திங்கள்)...

 


🌹நினைத்ததை எல்லாம் சொல்ல நினைத்தால்,

உதடுகள் வருவது இல்லை

சொல்லவில்லை என்றால்

உறக்கம் வருவது இல்லை.

மீறி சொன்னால் உறவுகள் நிலைப்பது இல்லை.

அதுதான் வாழ்க்கை.!

🌹🌹உண்மை இல்லாத இடத்தில்

உரிமை கேட்பது தவறு.

உரிமை இல்லாத இடத்தில்

பாசம் வைப்பது தவறு.

பாசம் இல்லாத இடத்தில் பழகுவதும் தவறே.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                                                        

⛑⛑பள்ளிப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான NTSE தேர்வு.

கொரோனா அச்சத்துக்கிடையே மாநிலம் முழுவதும் 800 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

1 லட்சத்துக்கும் அதிகமான 10-ம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள்.

⛑⛑தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை இன்று முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.

⛑⛑இங்கிலாந்திலிருந்து உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் இந்தியாவில் சிகிச்சை முறையில் எந்த மாற்றமும் தேவையில்லை என்று தேசிய பணிக்குழு முடிவு செய்துள்ளது.

⛑⛑இன்று நான் முதலமைச்சராக இருக்கிறேன்.

நாளை ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக ஆகலாம்.

அதன்பின் தொண்டர்கள் கூட முதலமைச்சராகலாம்.

தொண்டன் முதலமைச்சராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான்.

- எடப்பாடி பழனிசாமி

⛑⛑யார் வந்தாலும் அதிமுக தலைமையில் தான் ஆட்சி

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை, தேவையுமில்லை

கூட்டணி மந்திரி சபை அமைக்கும் நினைப்பு யாருக்கும் வேண்டாம்

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொள்கையின்படி தான் அதிமுக ஆட்சி அமைக்கும்

- பிரச்சார கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு

⛑⛑பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் செலுத்த வேண்டும்  

-மு.க.ஸ்டாலின் அறிக்கை

⛑⛑கடந்த 10 ஆண்டின் சிறந்த வீரர்களை கொண்ட ஐசிசி டி 20 அணி அறிவிப்பு!

கேப்டனாக தோனி தேர்வு.

இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, கோலி, பும்ரா, தோனி இடம்பெற்றுள்ளனர்.

⛑⛑தேமுதிக -41 தொகுதிகள்? 

தேமுதிக சார்பில் 2011-ல் 29 எம்.எல்.ஏ-க்கள் பெற்றோம், இந்த தேர்தலில் 35 முதல் 40 பேர் தேமுதிக எம்.எல்.ஏ-க்களாக  கோட்டைக்கு செல்வார்கள் 

- தேமுதிக துணை செயலாளர் LK.சுதிஷ் பேச்சு

⛑⛑காவி உடையில் திருவள்ளுவர்.கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் சர்ச்சை.

 - முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்.

⛑⛑நடிகர் ரஜினிகாந்த்  மருத்துவமனையிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ். 

ஒரு வாரத்திற்கு முழு ஓய்வு எடுக்க அறிவுரை 

- அப்போலோ மருத்துவர்கள்

⛑⛑அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை

⛑⛑வாகனங்களில் 'சாதி பெயர்கள்' எழுதப் பட்டிருந்தால் பறிமுதல் செய்யப்படும் என உத்திரப்பிரதேச அரசு அறிவிப்பு

⛑⛑மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

⛑⛑எம்ஜிஆர் என்பவர் பொது மனிதர்; அவரின் பெயரை ஒருசிலர் தேர்தலுக்கு பயன்படுத்துவது தவறில்லை 

அதிமுகவினர் மீதான ஊழல் புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிடில், நீதிமன்றத்தை நாடுவோம் 

- திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு

⛑⛑இன்று காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா 

தியானம் செய்யவும், உடைமைகளை எடுக்கவும் நீதிமன்றம் அனுமதித்த நிலையில் இன்று ஸ்டுடியோ செல்கிறார்

⛑⛑பல்வேறு தரப்பு எதிர்ப்புக்கு மத்தியில் ஆதரவை திரட்ட மீண்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கோஷம்: 25 இணைய கருத்தரங்கு நடத்த பாஜக முடிவு

⛑⛑மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.01.2021

⛑⛑'தேசிய வேதியியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

⛑⛑பிப் 10-முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்ய வலியுறுத்தல்.

⛑⛑மாவட்ட நீதிபதிகள் தேர்வு முறை மாற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

⛑⛑மத்திய அரசின் இன்ஸ்பையர் விருது - தமிழகத்தில் இருந்து 1,371 மாணவர்கள் தேர்வு

⛑⛑36 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்                                                   

⛑⛑TNPSC : குரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய ஆதார் எண் தேவையில்லை; ஆதாரை இணைக்கக் காலக்கெடு நீட்டிப்பு

⛑⛑வரும் சட்டமன்ற தேர்தலில், ஒரு வாக்குச்சாவடியில் 1000 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு

⛑⛑SMC/SMDC TRAINING ONLINE இல் CHROME BROWSER மூலமாக பயிற்சி எடுக்கும் பொழுது GROUP ACTIVITY GREEN TICK காட்டப்படவில்லை! இதில் முடிக்கப்பட முடியவில்லை என்றால் DIKSHA APP இல் சென்று முடித்துக் கொள்ளலாம்.

(குறிப்பு SMC/SMDC TRAINING ONLINE பயிற்சியில் videos சம்பந்தப்பட்ட தலைப்புகளை மட்டும் CHROME BROWSERயை தேர்ந்தெடுத்து அதன் மூலமாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம், மீதி இருக்கிற தலைப்புகள் அத்தனையும் DIKSHA APP மூலமாக எடுத்துக்கொள்ளலாம் ஆகமொத்தம் எந்த தலைப்புகள் எதில் பயிற்சியை நிறைவு செய்ய முடியுமோ அதில் எடுத்துக்கொண்டு சிறப்பான முறையில் இந்த பயிற்சியை முடித்து விடலாம்.)

⛑⛑தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு பூஜ்யம் ஆண்டாக அறிவிக்கப்பட்டால் மாணவர்களின் ஒரு ஆண்டு வீணாகும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

⛑⛑இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட ஆன்லைன், திறந்தநிலைப் படிப்புகளை எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

⛑⛑கோவிட்-19 காலகட்டத்தில் பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகாத நிலையில், மாணவர்களின் பயம், குழப்பம், அழுத்தத்தைப் போக்க ஆலோசகர்கள் உளவியல் ஆலோசனை அளிக்கும் வகையில் மத்தியக் கல்வி அமைச்சகம் இலவசத் தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

⛑⛑மத்திய அரசு ஊழியர்கள் பணி விவரங்களை ஒரே தளத்தில் (E-HRMS) அறிந்து கொள்ள ஏற்பாடு

⛑⛑தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகியும்,  ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏவுமான டி.யசோதா நேற்று காலை காலமானார்.

⛑⛑முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

என் அன்பிற்குரிய அக்காவுமான திருமதி.யசோதா திடீரென்று மறைவெய்திய செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

⛑⛑ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட தி.நகர் பல் அடுக்கு வாகன நிறுத்த திட்டம் ஜனவரி மாதம் தொடக்கம்: 550 பைக், 250 கார்களை நிறுத்தலாம்.

⛑⛑திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு                                          

⛑⛑முதல்வரின் உத்தரவை தொடர்ந்து வேகமெடுக்கும் பணிகள் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை ஜன.15-க்குள் முடிக்க திட்டம்.

⛑⛑அடுத்த 3 நாட்களுக்கு ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

⛑⛑டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு (2021) மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்றிதழ்கள், பெர்மிட்கள் ஆகியவை செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 வரை செல்லும் என கருத வேண்டும். பிப்.,2020 முதல் காலாவதியான சான்றிதழ்களுக்கு இது பொருந்தும். சமூக இடைவெளியை பின்பற்றும் இந்த நேரத்தில், இது பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

⛑⛑அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க முடிவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை சமாளிக்க தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012-ஆம் ஆண்டு முதல் பணிநியமனம் செய்யப்படுகின்றனா். அதன்படி தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்று வருகின்றனா்.

இவா்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாள்கள் பாடம் நடத்துவா். இதற்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஊதிய உயா்வு, பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை பகுதிநேர ஆசிரியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

அதேநேரம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பகுதிநேர ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டதால் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை சாா்பில் விளக்கம் தரப்பட்டது. தற்போது பகுதிநேர ஆசிரியா்களுக்கு இடமாறுதல் வழங்க கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

அதற்கேற்ப பணியிட மாறுதல் கேட்ட பகுதிநேர ஆசிரியா்களின் விவரங்கள் தற்போது மாவட்டவாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விவரங்கள் கிடைத்தபின் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிட மாறுதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

⛑⛑அரசாணை எண் 101 - நாள் 22-2-2020 - பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு

⛑⛑இதுவரை கடிதம் எழுதி அதன் மூலமாகவே பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் 2005  தற்போது தமிழ்நாடு அரசு  Online இல் கொண்டுவந்துள்ளது.  ஆகவே இனி நமக்கு தேவையான தகவல்களை  வலைதளத்தை பயன்படுத்தி விண்ணப்பம் அனுப்பலாம்.

⛑⛑பொதுவெளியில் விவசாயத் தலைவர்களுடன் விவாதிக்க மத்திய அரசு தயாரா? - அரவிந்த் கெஜ்ரிவால் சவால்.

👉மத்திய அரசு விவசாயிகளுக்கு எதுவும் தெரியாது என்கிறது, விவாதம் நடந்தால் யாருக்கு அதிகம் தெரியும் என்பது நிருபணமாகிவிடும். விவாதத்துக்கு தயாரா என சவால் விடுத்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்..

👉வேளாண் சட்டங்கள் குறித்து அதிகமாக தெரியும் என்று கூறும் மத்திய அரசு, பொதுவெளியில் விவசாயத் தலைவர்களுடன் விவாதம் செய்வதற்கு தயாராக இருக்கிறதா என கேள்வி எழுப்பியிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதுவும் தெரியாது என்கிறது, விவாதம் நடந்தால் யாருக்கு அதிகம் தெரியும் என்பது நிருபணமாகிவிடும். விவாதத்துக்கு தயாரா என சவால் விடுத்துள்ளார்.

👉புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த வேண்டுகோளில், விவசாயிகள் வாழ்வாதாரத்துக்காக, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிவித்தார். கடந்த வாரம் நவம்பர் முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கு எல்லைக்கு இரண்டாவது முறையாக வருகை தந்த கெஜ்ரிவால், "எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் விவசாயிகளுடன் வெளிப்படையான விவாதம் நடத்துவதற்கு நான் சவால் விடுகிறேன், வேளாண் சட்டங்கள் எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பது யாருக்கு தெரியும் என்பது நிரூபணமாகிவிடும்” என பேசினார்.

👉விவசாயிகள் தங்களின் வாழ்க்கைக்காக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடமிருந்து பறித்துவிடும். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுமாறு கூப்பிய கரங்களுடன் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், டெல்லி துணை முதல்வரான மனீஷ் சிசோடியா, "நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், நீங்கள் (விவசாயிகள்) தாங்கிக்கொள்ளும் வலியைக் குறைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதை என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்" என்று கூறினார்.

👉புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக, கெஜ்ரிவாலும், அவரது ஆம் ஆத்மி கட்சியும் உறுதியாக முன்வந்துள்ளன. சிங்கு பகுதி மட்டுமின்றி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைப் புள்ளிகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...