கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7.5% இடஒதுக்கீடு: மருத்துவ இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் - தேசிய மருத்துவ ஆணையம்...

 தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சீட் பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்க கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலாண்டுத் தேர்வு - திறன் (THIRAN) திட்டத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அடிப்படை கற்றல் முடிவுகள் (BLOs) அடிப்படையிலான தனிப்பட்ட வினாத்தாள்கள்

  தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை - காலாண்டுத் தேர்வு - திறன் (THIRAN) திட்டத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு ம...