கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEET தேர்வு OMR விடைத்தாளில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளதா? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, NTAக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

 


நீட் தேர்வு ஒ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளதா? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கோவைச் சேர்ந்த மாணவர் மனோஜ் தாக்கல் செய்த வழக்கில், அக்டோபர் 11 ஆம் தேதி இணையத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் தாம் 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17 ம் தேதி திடீரென 248 மதிப்பெண் பெற்றதாக காட்டப்பட்டது என புகார் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரே மாணவருக்கு இரண்டு விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, எப்படி என விரிவாக விசாரணை நடத்தி சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...