கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shaala Siddhi படிவம் நிரப்புவது எப்படி...?

 


Shaala Siddhi படிவம் நிரப்புவது எப்படி...?

How to complete shalaa siddhi Format...?

 Shaala Siddhi பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றிய பதிவு.

 1. Students Profiles

இந்த பகுதியில் நாம் 2020-2021 கல்வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக SC,  ST,  OBC, General,  Minority,  Total.

இதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .

2. Classwise Annual attendance rate

இந்த பகுதியில் 2020-2021 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் என தனித்தனியாகக் கணக்கிட வேண்டும் . இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில், மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .

இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனித்தனியாகக் கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும்.

3. Learning outcomes Annual report

இங்கு 2020-2021  கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் 2020-2021  ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40, 41-50, 51-60,61-70, 71-80, 81-90, 91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. Teachers Profiles

 இதில் 2021-2022 கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher. நடுநிலைப் பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது High , Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.

 5. Teachers Attendance

இந்த பகுதியில் 2020-2021  கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும். விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள், ஒரு வாரத்திற்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனித்தனியாகக் கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். CL தவிர பிற விடுப்புகள்...


>>> சாலாசித்தி - படிவம் (Shaalasiddhi - Format) - தேசிய அளவிலான பள்ளி தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் (NPSSE)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...