கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 10.12.2020 (வியாழன்)...

 

🌹சிலரை மறந்து விடுங்கள்

சிலரை மன்னித்து விடுங்கள்

சிலரை கடந்து விடுங்கள்

சிலரை வெறுத்து விடுங்கள்

எவரையும் தூக்கி சுமக்காதீர்கள் 

உங்கள் வாழ்க்கை சுமையாகி விடும்.!

🌹🌹வாழ்க்கையில் பிடித்தது எல்லாமே கிடைப்பதும் இல்லை

கிடைத்த எல்லாவற்றையும் பிடித்தது போல் மாற்றவும் முடிவதில்லை

ஆனாலும் வாழ்கிறோம் ஆயுள் முடியும் வரை வாழவேண்டும் என்பதற்காக.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀NMMS தேர்வில் 2016 முதல் 2020 ஆண்டு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை National Scholarship Portalல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு 

🎀🎀BT TO PG PANEL LIST 2020 - 2021 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு.

🎀🎀DSE - NMMS - பள்ளிக்கல்வி திட்ட ஆண்டு 2020-21 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means-cum-Merit Scholarship) தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 31 டிசம்பர் 2020க்குள் முழுமையாக முடித்தல் - சார்பு -  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🎀🎀அரசிதழ் எண் 36, நாள்: 30.01.2020ன் படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரே பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம்  பெற்றிருக்க வேண்டும் - பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையரின் சுற்றறிக்கை

🎀🎀மாணவர்களின் எடையில் 10% மட்டுமே புத்தகப் பையின் எடை; 2-ம் வகுப்பு வரை நோ வீட்டுப்பாடம்- மத்தியக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு

🎀🎀அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு

🎀🎀இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  வீட்டுப்பாடம் தரக் கூடாது, உள்ளிட்ட  மேலும் பல கட்டுப்பாடுகள் விதிப்பு- மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

🎀🎀வேளாண் பல்கலைக்கழக முதுநிலை மாணவா் சோ்க்கை: டிசம்பா் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

🎀🎀பொது இடங்களில் இலவச வைஃபை WIFI சேவை-மத்திய அமைச்சரவை ஒப்புதல்

🎀🎀கட்டாய கல்வி உரிமைச் சட்டம்; மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணம்: உயர்த்தி தரக்கோரி தனியார் பள்ளிகள் வழக்கு

🎀🎀எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுக்கு 11ல் மருத்துவ கவுன்சிலிங்

🎀🎀வேலை வாய்ப்புப் பயிற்சியுடன் இணைந்த பட்டப் படிப்புகளை ஊக்கப்படுத்துங்கள்: அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு.

🎀🎀வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அந்த நாட்டு சீக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

🎀🎀மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என்று ரஷிய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அன்னா போபோவா தெரிவித்துள்ளார்.

🎀🎀அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கொரோனா தடுப்பு ஊசியை பெறுவதற்கான தங்களின் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

🎀🎀கொரோனா தடுப்பூசி குறித்து அறிவியல்பூர்வமான வழிகாட்டுதல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வந்தபின், பிரேசில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் - பிரேசில் அதிபர்.

🎀🎀மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஈப்பு வாகனத்தை (Jeep) உரிய அலுவலர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்.

🎀🎀பெண் குழந்தைகள் கல்விக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.10 கோடி நன்கொடை

🎀🎀நிவர்புயல் பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக 74 கோடி ரூபாயை ஒதுக்கியது தமிழக அரசு 

🎀🎀அம்பானியின் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்கப்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு

ஜியோ,ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலைபேசி சிம்கார்டுகள், பொட்டி கடையிலிருந்து பெட்ரோல் பங்குகள் வரை அனைத்தையும் புறக்கணிக்கப்படும் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு

🎀🎀செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ₨7 கோடி பறிமுதல்

🎀🎀பா.ரஞ்சித் இயக்கி ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்

🎀🎀சென்னை தீவுத்திடல் அருகே வசிக்கும் குடிசைவாழ்  மக்களை வெளியேற்ற கூடாது 

- தமிழக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வலியுறுத்தல்

🎀🎀கொரோனா காலத்தில் மருத்துவர்களின் தன்னலமற்ற பணிகளை நினைவில் கொண்டு அவர்களின்  நீண்டகாலக் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்றவேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, போன்ற கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

🎀🎀அதிகாரிகளின் அலட்சியத்தால் 3 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை மாநகரில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ள சாலை பள்ளங்களில் தவறி விழுந்து இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறினார்.

🎀🎀3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது என்பது இயலாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது

வேளாண் சட்டங்களில் ஏதேனும் திருத்தங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறியுள்ளது.                                 

 🎀🎀தமிழ்நாடு முழுவதும் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 45 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

🎀🎀2 -ஜி வழக்கில் எந்தக்குற்றசாட்டையும் அரசுத் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் என கூறிய ஆ.ராசா, கோட்டையில் இருந்து இது குறித்துவிவாதிக்க தயார் என கூறினேன், ஆனால் முதல்வரிடம் இருந்து எனக்கு அழைப்பும் இல்லை, பதிலும் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

🎀🎀தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியா மைதானத்தில் தமிழில் உரையாற்றியுள்ளார்.சேலம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜனின் தாய் சில்லி சிக்கன் விற்கிறார்.

🎀🎀நாகை: வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை செய்தார். பிராத்தனை செய்த முதல்வர் பழனிசாமிக்கு மாதா கோயில் பாதிரியார் ஆசி வழங்கினார்.

🎀🎀இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மிக எளிமையாக தொடங்கியுள்ளது.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில், சுவீடன் தூதரகத்தில் நடந்த எளிய விழாவில், இமானுவேல் சார்பென்டருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதேபோல், வாஷிங்டனில் ஜெனிபர் தவுத்னாவுக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🎀🎀மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

🎀🎀வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல்வரிடம் மனு

🎀🎀CBSE - 10 & 12 வகுப்பு தனித்தேர்வர்கள்  தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று முதல் 14.12. 20 வரை மேற்கொள்ளலாம். விவரங்களுக்கு : cbse.nic.in

🎀🎀பள்ளிகளை திறக்க முடியாததால்  அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு - விரைவில் முறையான  அறிவிப்பு வெளியிடப்படும்.

🎀🎀செமஸ்டர் தேர்வுகளில், அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும், மீண்டும் தேர்வை எழுதலாம் - தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் அறிவிப்பு. 

🎀🎀எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரித்துள்ளது - மறுமதிப்பீட்டில்  புதிய அளவு நேபாளம் அறிவிப்பு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...