கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்கலாம்...

 தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு, அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மாதந்தோறும் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.200 உதவித்தொகையும், 10 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.300 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.400 உதவித்தொகையும் , பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கும் ரூ.750 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அதனை புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் 31.12.2020 ஆண்டுக்கான உதவித்தொகை பெற தகுதி முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டிற்கு தகுதி உள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் SC/ST பிரிவினர்கள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை 40 வயதிற்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பவர்கள் பள்ளி, கல்லூரிகளில் நேரடியாக பயில கூடாது. மாறாக அஞ்சல் முறையில் படித்திருக்க வேண்டும்.

அஞ்சல் வழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. இந்த உதவித்தொகை பெற முதன்முதலாக விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் வங்கி கணக்கு புத்தக நகலை இணைத்தது வருகிற 31-ஆம் தேதிகுள் அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே 3 ஆண்டுகளாக இந்த உதவித்தொகை பெறுவோர், 2020-21 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை பெற சுயஉதவி ஆவணத்தை வருகிற 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>> வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை - அறிவிப்பு,  விண்ணப்பம் மற்றும் தகுதிகள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...