கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Unemployment Allowance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Unemployment Allowance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் (Educated Unemployed Youth can apply Online for Loan assistance with Subsidy to start Self-employment)...




படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


இணையதளத்தில் விண்ணப்பிக்க வலைதள முகவரி(Website Address):


https://www.msmeonline.tn.gov.in/uyegp/application_without_upload.php?id=New%20Application


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள கரூர் மாவட்ட முகவரி:

பொது மேலாளர்,

மாவட்ட தொழில் மையம்,

எண்.69 சத்தியமூர்த்தி நகர்,

தாந்தோணிமலை அஞ்சல்,

கரூர் – 639007.

தொலைபேசி: 04324- 255179

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்கலாம்...

 தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு, அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மாதந்தோறும் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.200 உதவித்தொகையும், 10 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.300 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.400 உதவித்தொகையும் , பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கும் ரூ.750 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அதனை புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் 31.12.2020 ஆண்டுக்கான உதவித்தொகை பெற தகுதி முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டிற்கு தகுதி உள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் SC/ST பிரிவினர்கள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை 40 வயதிற்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பவர்கள் பள்ளி, கல்லூரிகளில் நேரடியாக பயில கூடாது. மாறாக அஞ்சல் முறையில் படித்திருக்க வேண்டும்.

அஞ்சல் வழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. இந்த உதவித்தொகை பெற முதன்முதலாக விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் வங்கி கணக்கு புத்தக நகலை இணைத்தது வருகிற 31-ஆம் தேதிகுள் அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே 3 ஆண்டுகளாக இந்த உதவித்தொகை பெறுவோர், 2020-21 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை பெற சுயஉதவி ஆவணத்தை வருகிற 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>> வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை - அறிவிப்பு,  விண்ணப்பம் மற்றும் தகுதிகள்...


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை - அறிவிப்பு, விண்ணப்பம் மற்றும் தகுதிகள்...

 


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை - அறிவிப்பு,  விண்ணப்பம் மற்றும் தகுதிகள்...(Allowance for Unemployed Youth - Notice, Application and Eligibility ...)


10, 12ஆம் வகுப்பு, Diploma, Degree படித்து முடித்துவிட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை...


10, 12ஆம் வகுப்பு மற்றும் Diploma, Degree படித்து முடித்துவிட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவ அரசு வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு தரும் மாதாந்திர உதவித்தொகை பற்றி உங்களுக்கு தெரியுமா? எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான முழுமையான விளக்கங்களை கொண்ட PDF...


 ⏩ஒவ்வொரு நிலைக்கும் எவ்வளவு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.?


⏩உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் என்ன ?


⏩வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வளவு காலம் இருக்க வேண்டும்.?


⏩உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்...


⏩வருவாய்த்துறை சான்று எவ்வாறு பெறுவது? மாதிரி படிவம்...



>>> வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை - அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை - விண்ணப்பம் மற்றும் தகுதிகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...