🌹நம் வாழ்க்கையை மற்றவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிடாமல் நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைக்கொண்டு திருப்தி அடைந்தால் நம்மை விட சந்தோசமானவர்கள் யாரும் இல்லை.!
🌹🌹வார்த்தை என்பது ஏணியைப் போன்றது.நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து ஏற்றியும் விடும்.
இறக்கியும் விடும்.!!
🌹🌹🌹நம்மை யாரும் காயப்படுத்துவதில்லை,
தேவைக்கு அதிகமாக மற்றவர்க்கு முக்கியத்துவம் கொடுத்து நாமே நம்மை காயப்படுத்திக் கொள்கிறோம்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📚📚தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட்
📚📚கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் சுவரொட்டியால் பெற்றோர்கள் அதிர்ச்சி
📚📚தேர்தல் தேதி: CBSE தேர்வை மனதில் வைத்து முடிவு எடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர்
📚📚பள்ளிக்கு வந்த மாணவர்கள் விவரங்கள் சேகரிக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு
📚📚அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்: தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
📚📚UGC நெறிமுறை 2018-ஐ அமல்படுத்தும் அரசாணை: அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர் வரை பதவி உயர்வு பெற வாய்ப்பு
📚📚அரசுப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்க வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
📚📚NEET நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு; கல்வித் தரத்தைப் பாதிக்கும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
📚📚பள்ளிகள் வாரத்தில் 6 நாள்கள் செயல்படும்: மாண்புமிகு கல்வி அமைச்சர்
📚📚அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் ஆய்வகங்களுக்கு புதிய பொறியாளர்கள் நியமனம்
📚📚TN-EMIS APP-ல்,பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுகிறார்களா என்பதை தினமும் இணையதளத்தில் தகவல்களை பதிவிட உத்தரவு
📚📚10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் கேள்வித்தாள் அமையும்
📚📚மருத்துவ படிப்புகளுக்கான 576 காலியிடங்கள் – விரைவில் கலந்தாய்வு
📚📚கற்போம் எழுதுவோம் இயக்கம்--கற்பித்தல் செயல்பாடுகள், வருகைப் பதிவு, பார்வைக்குறிப்பு -- TN EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் சார்பு --இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
📚📚10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு :EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்பு -- இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
📚📚பணிபுரியும் இடத்தில் முகக் கவசம் (Face Mask)அணியாத ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசு முதன்மைச் செயலாளர்
📚📚10 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
📚📚ஜனவரி 27ஆம் தேதி ஆயத்த மாநாடு- அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
📚📚தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
📚📚தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்க நடவடிக்கை கோரி வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க - உயர் நீதிமன்றம் உத்தரவு
📚📚11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - கல்வித்துறை அதிகாரி தகவல்.
📚📚பழைய பஸ் பாஸ் இல்லை என்றாலும் பள்ளி சீருடையில் மாணவர்கள் வந்தாலே பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் சீருடையில் வரும் மாணவர்களை டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர்கள் வற்புறுத்த கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு.
📚📚பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானம் மற்றும் செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்ய மானியத் தொகையைப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
📚📚உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவது குறித்து பரிசீலனை - தொல்.திருமாவளவன்.
📚📚வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷம்.
📚📚நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் மற்ற மாநிலங்களை விட கர்நாடகம் அதிகளவில் தடுப்பூசி செலுத்தி முதல் இடத்தில் உள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் கடைசி இடத்தில் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
📚📚அடுத்த சுற்று தடுப்பூசி போடப்படும் நிகழ்வில் பிரதமர், மாநில முதல்வர்கள் முக்கிய அமைச்சர்கள் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்பதாக தகவல்
📚📚முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஜன. 23, 24, 25ல் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூரில் சுற்றுப்பயணம்.
📚📚திரிபுரா,மேகாலயா, மணிப்பூர் மாநிலங்கள் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
📚📚அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் அது நீட் தேர்வின் தேர்வின் தகுதியை நீர்த்து போகச்செய்யும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
📚📚பியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் குழுமத்துக்கு சுமார் 24ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்க செபி ஒப்புதல் அளித்துள்ளது.
இது டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமேசான் தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
📚📚டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கவும், விலைப்பட்டியலை கடை முன் வைக்க உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரை கிளை.
📚📚மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (ஆர்.எம்.எம்.சி.எச்) மற்றும் பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை காலவரையின்றி மூட அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு
📚📚பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 30ஆம் தேதி தமிழகம் வருகிறார்
2 நாள் பயணமாக தமிழகம் வரும் ஜே.பி.நட்டா
சட்டமன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை
30 மற்றும் 31 தேதிகளில், மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்
📚📚தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18ம் தேதி திறப்பு; 2 ஆம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பிப். 18- மே 21 வரை வகுப்புகள் நடக்கும். அடுத்த ஆண்டுக்கான புதிய வகுப்புகள் ஜுலை 1 முதல் தொடங்கும் - அண்ணா பல்கலை அறிவிப்பு.
📚📚தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கப்பற்படையால் கொல்லப்பட்ட நிகழ்விற்கு, இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம்
📚📚IPL2021 | ஐபிஎல் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் மூலம் ராஜஸ்தான் அணி வீரர் ராபின் உத்தப்பா சென்னை அணியில் இணைந்துள்ளார்.
📚📚சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளதால் பார்வையாளர்கள் இல்லாத போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
📚📚பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தகவல் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது மீது ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார். இந்நிலையில், ஆளுநர் தாமதம் செய்வதால் உச்சநீதிமன்றமே தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது
📚📚இது தான் இந்தியா..! இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல அதற்கும் மேல் என விரேந்தர் சேவாக் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் உற்சாக வரவேற்பு அதற்கு சான்று. நடராஜனின் வெற்றி நம்பிக்கையளிக்கும் கதை எனவும் கூறினார்
📚📚இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி விசைப்படகோடு மீனவர்களை மூழ்கடித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
📚📚பேரறிவாளனின் விடுதலையை மாநில அரசு செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
📚📚கொரோனா உறுதியான மாணவருக்கு பள்ளியில் இருந்து பரவவில்லை
கொரோனா பரிசோதனை கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட மாணவர் பள்ளிக்கு வந்துள்ளார்-
சேலம் ஆட்சியர்
📚📚தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2ஆம் தேதி கூடுகிறது: சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும்.
கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும்
📚📚ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்த இருந்த டிராக்டர் பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுப்பு
📚📚அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.
நுரையீரல் பாதிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எக்மோ கருவி பொருத்த தேவையில்லை என மருத்துவர்கள் தகவல்.
📚📚சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
என வழக்கறிஞர் ராஜராஜன் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
📚📚மறைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தா அவர்களின் உருவ படத்திற்கு ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
📚📚நவம்பர், டிசம்பர், ஜனவரியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையில் ரூ.2,855 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் கடைசி நேரத்தில் கையெழுத்து போட்டு கஜானாவை காலி செய்ய திட்டமிட்டுள்ளனர். கமிஷனுக்காக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
📚📚அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன், புதிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.*தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் அமெரிக்காவுக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியிருக்கிறார். அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள் என்றும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
📚📚அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்றிருக்கும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திருக்கிறார். இருநாடுகளின் உறவு பகிர்ந்துகொள்ளப்பட்ட மதிப்புகளால் ஆனது என்றும் வரும் ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மேம்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
📚📚நடிகர் ரஜினிக்காக கட்சி தொடங்கியவரும், ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகவும் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது!
📚📚நீட் தேர்வு தொடர்பாக உண்மைக்கு
புறம்பான தகவல்களைக் கூறுவதா; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.
📚📚மதச்சார்பின்மை என்கிற ஒற்றை
நேர்கோட்டில் இணைய திமுக கூட்டணிக்கு வாருங்கள்; மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு, கே.எஸ். அழகிரி அழைப்பு.
📚📚பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது - திருமாவளவன் திட்டவட்டம்.
📚📚தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்திருக்கிறது. கடந்த ஐ.பி.எல்-ல் மோசமாக ஆடி கடும் விமர்சனத்திற்குள்ளான கேதர் ஜாதவ், முரளிவிஜய், பியுஷ் சாவ்லா மற்றும் ஹர்பஜன்சிங், மோனுகுமார் சிங், ஷேன் வாட்சன் (இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்) ஆகிய 6 பேரை சென்னை அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.
📚📚📚📚📚📚📚📚📚📚
🌹🌹வருமான வரி பிடித்தம் இந்த வருடம் 2020-2021 ல்
இரண்டு விதமாக கணக்கீடு செய்து கொள்ளலாம்.
🌹Option-1🌹
OLD METHOD
சென்ற வருடம் போலவே கணக்கீடு செய்து வரி பிடித்தம் செய்து கொள்ளலாம்.
இதில்
HRA ,
Standard deduction,
housing loan interest,
Professional Tax,
80C(1,50,000/=),
80D*( *NHIS* )
One day salary
போன்றவற்றை கழித்த பின்னர் வரும் தொகைக்கு வரி பிடித்தம் செய்யும் முறையாகும்.
இது அனைவருக்கும் தெரிந்ததே.
👉Tax கணக்கிடும் முறை
👉2,50,000 lakhs - Nil
👉2,50,000 to 5,00,000- 5%
👉5,00,001 to 10,00,000 -20%
👉10,00,000 above - 30%
-----------------------------------------------------
🌹Option-2🌹
NEW METHOD
இந்த புதிய முறையிலும் கணக்கீடு செய்து கொள்ள மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
இந்த புதிய முறையில்
மொத்த வருமானத்தில் எந்த கழிவும் செய்யக் கூடாது.
Tax கணக்கிடும் முறை
👉2,50,000 lakhs - Nil
👉2,50,001 to 5,00,000- 5%
👉5,00,001 to 7,50,000 -10%
👉7,50,001 to 10,00,000- 15%
👉10,00,001 to 12,00,000 - 20%
👉12,50,001 to 15,00,000 -25%
👉15,00,000 Above- 30%
மேற்கண்ட இரண்டு முறையிலும் கணக்கீடு செய்து பாருங்கள். எதில் வரி குறைவாக வருகிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.
(பழைய முறையே சிறந்தது)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926