கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீடிப்பு - மத்திய அரசு...

 


கொரோனா வைரஸ்  பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.


இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, 


பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.


இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கண்டெய்ன்மெண்ட் சோன் எனப்படும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  


இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், உருமாறிய கொரோனா அச்சுறுத்தலாலே முன்னெச்சரிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


>>> தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீடிப்பு - மத்திய அரசு திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் புதிய தளர்வு அறிவிப்பு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns