கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊரடங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊரடங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி (LKG, UKG) மற்றும் மழலையர் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு(Curfew restrictions in Tamil Nadu extended till 02-03-2022 - Permission to open Nursery and Kindergartens from 16-02-2022 - Chief Minister Mr. M.K.Stalin's announcement) செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...



தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு.


வரும் 16ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி.


மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும். 


திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி.


>>> தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை & 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் - அரசுப் பணியாளர்கள் 9ஆம் தேதிக்குள் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் - 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:026, நாள்: 05-01-2022 (Ban on live classes from 1st to 9th Standard & Direct classes for 10th, 11th and 12th Standard students - Government servants must submit vaccination certificate by 9th - Night curfew from 06-01-2022 - Tamil Nadu Government Press Release)...

>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:026, நாள்: 05-01-2022...






⭕தமிழகத்தில் நாளை  (06.01.2021) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.


⭕அரசு சார்பாக நடைபெறும் பொங்கல் விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.


⭕இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும்.


⭕ஜனவரி 9ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.


⭕பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.


⭕1 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு. ஆன்லைன் வகுப்புகளுக்கு மட்டுமே அனுமதி


⭕கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு.


⭕வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களில் வழிபாடு நடத்த தடை.


⭕திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.


⭕திருமண நிகழ்வுகளில் 100 பேரும் துக்க நிகழ்வுகளிலும் 50 பேருக்கும் அனுமதி.


இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு.


அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி.


ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.


1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. 


பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்.


கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுப்பு (Study Leave).


பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.


அரசு, தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல், கலை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.


பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.


வழிபாட்டுதலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனுமதி இல்லை.


அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி.

ஜனவரி 10ஆம் தேதி வரை 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1468, நாள்: 31-12-2021...



>>> ஜனவரி 10ஆம் தேதி வரை 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1468, நாள்: 31-12-2021...






*தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவு*


*1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.*


*2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை


*3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.


*4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.*


*ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்,


*1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.*


*2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ளவழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.*


*3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.


*4) பொழுதுபோக்கு  கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/Amusement Park) 50% வாடிக்கையாளர்களு டன் செயல்பட அனுமதிக்கப்படுகிது*


*5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம்100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.*


*6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.*


*7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.*


*8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.*


*9) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் உத்தரவு(Chief Minister orders various relaxations in curfew)...



 ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் உத்தரவு(Chief Minister orders various relaxations in curfew)...






💒🛕🕋  வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு...

அனைத்து வழிபாட்டு தலங்களும், அனைத்து வார நாட்களிலும் திறக்கப்படும்...

🎒👩🏻‍🦲🧑🏻‍🦳👩🏻‍🦳 *மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி கள் முழுமையாக செயல்பட அனுமதி..

📢📢 *கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் செல்ல அனுமதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

*1️⃣1️⃣ மணிவரை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் செயல்பட அனுமதி

💛❤️ *நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருமண நிகழ்ச்சியில் 1️⃣0️⃣0️⃣ பேர் வரை கலந்து கொள்ளலாம்!

❌❌ *அரசியல், கலாச்சார நிகழ்ச்சி களுக்கு தொடர்ந்து தடை






தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31-10-2021 வரை நீட்டிப்பு - 01-11-2021 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு(Curfew with relaxation extended in Tamilnadu till 31-10-2021 - Opening of schools from 01-11-2021 to Class I to VIII) - செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...



 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31-10-2021 வரை நீட்டிப்பு - 01-11-2021 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு(Curfew with relaxation extended in Tamilnadu till 31-10-2021 - Opening of schools from 01-11-2021 to Class I to VIII) - செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...


1️⃣ மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் குறைதீர் கூட்டங்களுக்கு அனுமதி


2️⃣ விவசாயிகள் கூட்டங்கள் நடத்த அனுமதி


3️⃣ வழிபாட்டு தலங்களுக்கான வார இறுதி நாட்கள் தடை தொடரும்


அரசியல் கூட்டங்கள்,திருவிழா, குடமுழுக்கு,கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்


4️⃣ பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுரை...


>>> செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...


தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும்(Schools will be Reopen on 01-09-2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு(செய்தி வெளியீடு எண்: 640, நாள்: 21-08-2021)...



தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு - கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு...


செய்தி வெளியீடு எண்: 640, நாள்: 21-08-2021...


💥செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


💥1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 15ஆம் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.


கூடுதல் விவரம்...👇🏻👇🏻👇🏻






முன்பே அறிவித்தவாறு , இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன :

* 1.9.2021 முதல் பள்ளிகளில் 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , செயல்படும். 
இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

* மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் , மழலையர் வகுப்புகள் , 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021 - க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் மேலும் , ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.
அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

 • அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் ( Diploma Courses , Polytechnic Colleges ) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.



"தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு(Lockdown extended to two weeks) - செப்டம்பர் 1ஆம் தேதி(01-09-2021) முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது(Schools Open from September 1st)" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு(செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 06-08-2021)...



செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 06-08-2021...


 "தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு...


வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை.


  "செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" 


ஆகஸ்ட் 16 முதல் மருத்துவ படிப்பு கல்லூரிகளைத் திறக்க அனுமதி...


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..






>>> செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 06-08-2021...



மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எச்சரிக்கை...

 


மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை வீடியோ.


கொரோனா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வதைத்து வருகிறது. 


அரசின் நடவடிக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையால் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியுள்ளோம். 


ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகிறது. 


முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் எச்சரிக்கை இன்றி இருப்பது வேதனையளிக்கிறது. 


அதனால் அதிக கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.


மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட கூடாது என்றே கடைகளை திறக்க உத்தவிட்டுள்ளோம், ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது.


மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம் என்று கடுமையாகவே சொல்கிறேன். 


மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வல்லமையும், உட்கட்டமைப்பும் தமிழக அரசுக்கு உண்டு, அதனால் கொரோனாவை விலை கொடுத்து வாங்க வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள்.


மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என வல்லுனர்கள் சொல்வதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நாம் மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினியை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் காப்போம் என தெரிவித்திருக்கிறார்.

31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்...



 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்...


>>> Click here to Download G.O.Ms.No.466, Dated: 30-07-2021...


தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் (ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை) நீட்டிப்பு...



செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021...


தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்.


தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு.


தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9ஆம் தேதி வரை நீட்டிப்பு.


விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை. 


அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால், குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம் - அரசு உத்தரவு.


>>> செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021...


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு (Lockdown extended with Relaxations) - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021)...

 


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


 திரையங்குகள், மதுக்கூடங்கள் திறக்கத் தடை தொடரும். 


பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை...


புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தொடர்ந்து தடை.


மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர்த்து இதர சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை.


திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை.


பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு.


திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி.


பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, பாடப்புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப்பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.


தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி.


>>> செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021...


”தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-2021வரை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...









 ”தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-2021வரை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

செய்தி வெளியீடு எண்: 421, நாள்: 10-07-2021ன் படி 

 பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடர்கிறது.


>>> செய்தி வெளியீடு எண்: 421, நாள்: 10-07-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பொதுமக்கள் கவனமுடன் கையாள முதலமைச்சர் அவர்கள் விழிப்புணர்வு செய்தி அறிக்கை வெளியீடு...

 


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பொதுமக்கள் கவனமுடன் கையாள முதலமைச்சர் அவர்கள் விழிப்புணர்வு செய்தி அறிக்கை வெளியீடு...


>>> செய்திக்குறிப்பு எண்: 27, நாள்: 04-07-2021...


தமிழ்நாட்டில், 12-07-2021வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 * தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு.


*அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி.


*தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து


*அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.


*பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.



*டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி


*அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி


*மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


*அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க  தமிழக அரசு அனுமதி 


*உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள்  அமர்ந்து உண்ண அனுமதி




*பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி


*அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி


*கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை 


*நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும்




*அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.


*வணிக நிறுவனங்கள் இரவு 8மணிவரை செயல்படஅனுமதி.


 * தேநீர்கடைகள் உணவகங்களில் 50%பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி


>>> செய்தி வெளியீடு எண்: 370, நாள்: 02-07-2021...


வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்:

வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஜவுளி, நகை கடைகள் திறக்க அனுமதி. 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7மணிவரை இயங்க அனுமதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...





தொழிற்சாலைகள் கொரோனா நிலையான கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி மருத்துவத்துறை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பின் கீழ் செயல்பட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...



Public health and preventive medicine - COVID 19 PANDEMIC - Ease of lockdown - Monitoring industries and Services establishments by Local Authorities - Instructions issued - Regarding


>>> கோவிட் 19 தளர்வுகள் - உள்ளூர் சுகாதார அலுவலர்களால் தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள் கண்காணிக்கப்படுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு...

 


தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது  போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு...


செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021..


 தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.


பள்ளி,  கல்லூரிகளில் நிர்வாகப் பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம்.


23 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி.


4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி.


அனைத்து மாவட்ட கடற்கடைகளும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறப்பு.


>>> செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...