கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 30.01.2021 (சனி)...

 


🌹ஒரு காலத்தில் நேர்மை தவறாமல் வாழ்ந்தவர்களைக் கண்டோம்.ஆனால் 

இப்போது நேரத்திற்கு தகுந்தாற் போல் வாழ்பவர்களையே அதிகமாக காண்கிறோம்.!

🌹🌹பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான ஒரே வழி அல்ல,ஆனால் 

பெரும்பாலான சூழ்நிலையில் பணத்தை வைத்தே மனிதன் மதிப்பிடப்படுகிறான் என்பது தவிர்க்க முடியாத உண்மை.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2% ஒதுக்கீட்டின்படி அமைச்சுப் பணியில் இருந்து முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பணியாளர்களின் பட்டியல் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள்! குறிப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020 ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு

📕📘சமக்ர சிக்க்ஷா - பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தின் (Hi Tech Lab) தற்போதைய நிலை குறித்த விவரம் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம் வெளியீடு

📕📘31.12.2020 நிலவரப்படி பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு                                           

📕📘பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள – முன்னாள் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் உள்கட்டமைப்பு, சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – 2016  ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி (இணை இயக்குநர் இடைநிலைக் கல்வி) உத்தரவு

📕📘ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோ ஆலோசனை

📕📘தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்

அனைத்து மாவட்டங்களிலும் பிப்.3ம் தேதி முதல்கட்ட சோதனைகள் நிறைவடையும்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

📕📘உதவி பேராசிரியருக்கு முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை வாபஸ் பெறுக-சீமான்

📕📘நகர்ப்புற வளர்ச்சி - 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 28.02.2021 வரை கால நீட்டிப்பு செய்தல் - ஆணை வெளியீடு

📕📘பிப்ரவரி 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா? கலெக்டர்களுடன் முதல்வர் நேற்று ஆலோசனை: கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு

📕📘காலி மருத்துவ இடங்களுக்கு இன்றுக்குள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம்: மருத்துவ கல்வி கூடுதல் இயக்குநர் அறிவிப்பு

📕📘மிக்சோபதி மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 1ல் 50 இடங்களில் தொடர் உண்ணாவிரதம்: இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

📕📘ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றினால் போதாது; அரசுக் கட்டணம் அமலாக வேண்டும்: டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்

📕📘மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பூதிய ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழக அரசு மருத்துவமனைகளில் அரசு செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்.

📕📘அடுத்த 10 ஆண்டுகள் இந்தியா செல்லவுள்ள ஒளிமயமான பாதைக்கு தங்கமயமான வாய்ப்பு தான் இந்த கூட்டத்தொடர்

-பிரதமர் மோடி

📕📘பெரும் தொற்று சமயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது

எப்பொழுதெல்லாம் இந்தியா ஒன்றிணைந்ததோ அப்பொழுதெல்லாம் கடினமான இலக்குகளையும் நாம் சாதித்து இருக்கிறோம் இந்த முறையும் அதுதான் நடந்துள்ளது

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பல உயிர்களையும் காப்பாற்றியுள்ளது

ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் இந்த பெரும் தொற்று காலத்தில் பெரும் பலனை அளித்தது.

-குடியரசுத் தலைவர்

📕📘இந்தியாவின் இலக்கு என்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்ல உலகளாவிய அளவில் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துச் செல்வது தான்.

சுயசார்பு இந்தியா என்பது தான் நமது தாரக மந்திரம் 

-குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

📕📘கொரோனா சமயத்திலும் கூட உலக முதலீட்டாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் இந்தியா உருவெடுத்து இருக்கிறது: குடியரசு தலைவர்

📕📘சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

உங்கள்தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் நேற்று திருவண்ணாமலையில் பிரச்சாரம்

📕📘நாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது 

-குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

📕📘எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற மக்களவை பிப்ரவரி 1-ம்  தேதி காலை 11 மணி வரை ஒத்திவைப்பு.

📕📘திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை.வலிமையாகவே உள்ளது!

- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

📕📘தமிழக மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில், புதுச்சேரி மாணவருக்கு சேர்க்கை வழங்க முடியாது

புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த விழுப்புரம் மாணவரின் மேல் முறையீட்டு வழக்கை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.

📕📘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிசந்திரன், நளினி ஆகிய ஏழு பேரை விடுப்பது குறித்து இன்று ஆளுநர் முடிவெடுத்து அறிவிப்பார் என தகவல்

📕📘அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வலியுறுத்தி சென்னையிலுள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பிப்ரவரி 5ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும். 

- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் அறிவிப்பு

📕📘போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் 

சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை கழுவுதல் கட்டாயம் 

- சுகாதாரத்துறை

📕📘நாட்டில் ஐந்திலிருந்து ஏழு பணக்காரர்கள்  மட்டும்தான் தங்களது செல்வத்தை பெருக்கிக் கொண்டே போகிறார்கள் மற்றவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை விவசாயிகளின் போராட்டம் கூட இந்த கோபத்தின் வெளிப்பாடுதான்

-ராகுல் காந்தி

📕📘பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

2021ஆம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் -7.7% ஆக இருக்கும்.

2022 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 11.5 % ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📕📘34 முக்கிய முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் 34 திட்டங்களுக்கு ரூ.52,257 கோடியில் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையான தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 வெளியிட அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.                                                          

📕📘ஜனவரி 31-ம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

📕📘3 புதிய வேளாண் சட்டங்களை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள் என ராகுல்காந்தி ஆவேசம் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் மண்டிகள் நடைமுறையை அழிக்கும் வகையில் உள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களால் இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என்று பிரதமருக்கு எச்சரிக்கிறேன் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.                             

 📕📘வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலையின் முன் போராடிய காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்                      

📕📘விவசாயிகள் போராட்டத்தில் பிரதமர் மோடி சரியாக நடந்து கொள்ளவில்லை என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என அவையில் கோரிக்கை வைத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

📕📘உள் ஒதுக்கீடு விவகாரத்தில் காலதாமதம் செய்தால், அதிமுக கூட்டணியில் நீடிப்பதா என்பது குறித்து ராமதாஸ் முடிவெடுப்பார் - 

ஜி.கே.மணி

📕📘பிரேமலதா விஜயகாந்த் கருத்து வரவேற்க கூடியது எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதை யாரும் மறைக்க முடியாது

டி.டி.வி.தினகரன்                                                                       

📕📘'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கினார்.

முதல்கட்டமாக திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.

அந்தந்த மாவட்டத்தின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி ஸ்டாலின் பேச உள்ளார்.

திருவண்ணாமலையில் மக்களின் குறைகள் கேட்டு ஸ்டாலின் பேசி வருகிறார்.

ஒவ்வொருவராக தங்களின் குறைகளை ஸ்டாலினிடம்  சொல்லி வருகிறார்கள்.

📕📘சசிகலா அரசியலுக்கு வந்த பிறகுதான் கூட்டணிகள் முழுமை பெறும் 

முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி

📕📘சசிகலா உடல்நிலை சீராக உள்ளது:

ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது;வியாழன் ரத்த அழுத்த மாறுபாடு இருந்த நிலையில்,நேற்று உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் 

விக்டோரியா மருத்துவமனை

📕📘குடியரசுத்தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது; வேளாண் சட்டம் தொடர்பான தவறான கருத்துக்களை அரசு முறியடிக்கும் - 

குடியரசுத்தலைவர் உரை

📕📘12 நாட்களில் 23 லட்சம் சுகாதாரபணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்.

📕📘இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் உலகில் மிகச் சிறந்த சொத்தாக கருதுவதாக ஐ.நா பாராட்டு.

📕📘ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

📕📘கொரோனா தொற்றை கண்டுபிடிக்க மல துவாரத்தில் இருந்து மாதிரிகள் எடுக்கும் சீன அரசின் செயலுக்கு, அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

📕📘இந்தியா வழங்கிய கொரோனா தடுப்பு ஊசியை மக்களுக்கு வழங்கத்தொடங்கியது நேபாளம்.

📕📘உலகிலேயே முதல் முறையாக அதிவிரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

📕📘இந்த வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக மீண்டும் பழைய ஸ்பான்சர் விவோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.                                                           

📕📘தொடக்கக் கல்வித் துறையில் 2009-10ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட (15.09.2010ல் பணியில் சேர்ந்தவர்கள்) ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 29.01.2021.

📕📘ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 31.01.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும்.

கூட்டம் நடைபெறும் இடம்

கவிதா ரெஸ்டாரண்டு அஸ்வின் ஸ்வீட்ஸ்( மாடி).  கூட்ட அரங்கம். ராக்கின்ஸ் ரோடு மத்தியபேருந்து நிலையம் அருகில்.திருச்சி.1.

மு. அன்பரசு

மாநில ஒருங்கிணைப்பாளர்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...