கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 31.01.2021(ஞாயிறு)...

 


🌹பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கமும்,செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பக்குவமும் உள்ளவர்கள் எல்லோருடைய இதயத்திலும் நிரந்தரமாக குடியிருப்பார்கள்.!

🌹🌹பிடிவாதமும்,வறட்டு கவுரவமும் இருக்கும் வரை எந்த உறவும் உண்மையாக இருக்காது.

இருந்தாலும் நிலைக்காது.!!

🌹🌹🌹அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை.

அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ள நிலையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட வேண்டும்

🌈🌈9 &11, மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்காக கல்வித்துறை ஆயத்தப்பணிகள் துவக்கம்.                                               🌈🌈பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: பிப்.1 முதல் ஆன்லைனில் ஆய்வு

🌈🌈தொலைதூர டிப்ளமோ முறையில் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கற்பிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை

🌈🌈தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு.

👉BT to PG Chemistry 

👉BT to PG Panel Botany.                                     👉BT to PG Panel Economics 

👉BT to PG Panel Physics 

👉BT to PG Panel Zoology.                                     👉BT to PG Panel history.                                    👉BT to PG Panel Commerce 

👉PET II to PET I Panel

🌈🌈தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் முக கவசம் அணிவது உறுதிசெய்ய வேண்டும் -பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

🌈🌈தமிழகத்தில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகளுக்காகத் தேர்வுக் கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

🌈🌈ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், இன்று திருச்சியில்  நடக்கிறது.

🌈🌈தில்லியில் பிப்ரவரி 5 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை அறிவித்தார் 

🌈🌈பிளஸ் 2 வகுப்பில் கற்றல் சுமை குறையவில்லை.  மாணவர்களுக்கு  மன உளைச்சல்; ஆசிரியர்கள் புகார் - நாளிதழ் செய்தி 

🌈🌈ஜம்மு பிராந்தியத்தில் பிப்ரவரி 1 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன

🌈🌈பிப்.13-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

🌈🌈ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

🌈🌈பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களுக்கு 2 % ஒதுக்கீட்டு அடைப்படையில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக நியமனம் வழங்குவது தொடர்பாக பணியாளர்களின் பெயர் பட்டியர் வெளியீடு.இப்பெயர் பட்டியலில் உள்ள பணியாளர்களின் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்திடவும் , இப்பெயர் பட்டியலில் சேர்க்கை , நீக்கம் மற்றும் திருத்தம் ஏதும் இருப்பின் பார்வையில் காண் அரசிதழின்படி வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி அளித்திடவும் மற்றும் இவ்விதியில் " Must have obtained a Bachelor's degree and Master's degree in the same subjects or their equivalent in respect of which recruitment is made. " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு எந்தப்பாடத்திற்கு முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பட்டியலில் சேர்க்கப்படுகிறாரோ அப்பணியாளர் அப்பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலையில் முதன்மைப் பாடமும் மற்றும் பி.எட் . பயின்றிருக்க வேண்டும்.

🌈🌈பாஜக - அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கும்

தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் 

- ஜே.பி.நட்டா

🌈🌈கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் நேற்று மாலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

🌈🌈சசிகலா விவகாரம், ஓபிஎஸ் மகன்க்கு ஒரு நியாயமம் எங்களுக்கு ஒரு நியாயமா? நீக்கப்பட்டோர் கேள்வி

சசிகலாக்கு ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சமூக வலைத்தளத்தில் பூங்கொத்து படத்துடன் வாழ்த்து கொடுத்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பங்காளி சண்டை முடிந்து இணைந்துவிடுவோம் என்று கருத்து தெரிவித்தார். 

கோகுல இந்திரா சின்னம்மா என வரவேற்றுள்ளார்.

இப்படி பல்வேறு வகையில் ஆதரித்த மற்றவர்களை விட்டுவிட்டு எம்ஜிஆரின் உண்மை தொண்டர்களான என்னை போன்றோரை மட்டும் கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். தலைவர்களுக்கு ஒரு நியாயம், தொண்டர்களுக்கு ஒரு நியாயமா?  இவ்வாறு அவர்கள் கூறினர்.

🌈🌈அமெரிக்க அரசு, ஐ.நா.,விற்கான தூதரக குழுவில், இந்திய வம்சாவளியினர் இருவரை முக்கிய பொறுப்புகளுக்கு நியமனம் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அரசின் பல்வேறு துறைகளில் அதிக அளவில், இந்திய வம்சாவளியினரை நியமித்து வருகிறார். அமெரிக்காவிற்கான ஐ.நா., தூதரின் மூத்த கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹினி சட்டர்ஜி, அதிதி கோரூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🌈🌈இஸ்ரோவுக்காக கோவை மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்: பிப். 22-ல் விண்ணில் பாய்கிறது.

🌈🌈44 ஆவது சென்னை புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 9 ஆம் தேதி வரை மொத்தம் 14  நாட்கள் நடைபெறும் என பபாசி அறிவிப்பு

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெறும்

🌈🌈திமுகவிடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது, நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும்

திருவண்ணாமலையில்,தாயை இழந்த பெண் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் மனு கொடுத்திருந்தார்

பெண்ணின் மனுவிற்கு உடனடியாக திமுக உதவும் என உறுதியளித்த நிலையில் பதறிய அரசு ₨2 லட்சம் வழங்கியுள்ளது.

ஸ்டாலின்

🌈🌈பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா.

கடந்த 3 நாட்களாக சசிகலாவின் உடல்நிலை சீராக இருந்தது

மருத்துவமனை அறிக்கை

🌈🌈வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவார்கள் என நம்பிக்கை இல்லை என்று டெல்லியில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை அமல்படுத்தியதில் கார்ப்பரேட் நிறுவனங்களே பின்புலமாக உள்ளன என்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

🌈🌈சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் இருக்கைகள்,மேஜை மற்றும் நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

🌈🌈திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்

🌈🌈இந்தியாவில் கொரோனா கண்டறியப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு

சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவர் நாடு திரும்பியதும் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

🌈🌈சசிகலா மருத்துவமனையில் இருந்து வந்த உடனே அவரை பார்ப்பேன்; அதுதான் தார்மீகம்"   

கருணாஸ் எம்.எல்.ஏ

🌈🌈தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தயக்கம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது

ராதாகிருஷ்ணன்

சுகாதார செயலாளர்

🌈🌈இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

🌈🌈திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் 

வேலூர் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் உறுதி

🌈🌈சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை

சட்டசபை தேர்தல் குறித்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  உள்ளிட்டோர் பங்கேற்பு

🌈🌈கடந்த 10 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

🌈🌈நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிடத் தயார் என்று பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் சவால் விடுத்துள்ளார்.

🌈🌈சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப் போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் கருத்து.

🌈🌈அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என நமது எம்ஜிஆரில் வெளியான கட்டுரை குறித்த கேள்விக்கு ஜெயகுமார் பதிலளிக்கையில், அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ 100 சதவீதம் வாய்ப்பில்லை.

அதிமுக இரும்பு கோட்டை என்பதால் யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது.  என்று ஜெயகுமார் கூறினார்

🌈🌈ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

🌈🌈சசிகலா குறித்து ஜெயபிரதீப் மனிதாபிமான அடிப்படையில் அரசியலுக்கு வராமல் அறவழியில் செல்ல வேண்டும் என்று தான் கூறியுள்ளார், இதை அரசியலாக பார்க்க வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமார்.

🌈🌈சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் 

போட்டியிட தயார் - "கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி"

- பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக தகவல்

🌈🌈தேமுதிக கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு என தகவல்

அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராகுங்கள் : பிரேமலதா விஜயகாந்த்.

🌈🌈தொலைதூரக்கல்வியில் 1980-81 முதல் சேர்ந்த மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளை மே 2021, டிசம்பர் 2021 ஆகிய மாதங்களில் எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🌈🌈கொரோனா பாதுகாப்புகள் காரணமாக 87 ஆண்டுகளில் முதன்முறையாக ரஞ்சி டிராபியை இந்த ஆண்டு நடத்தப்போவதில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரஞ்சி டிராபி 1934 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

🌈🌈சுகாதாரத்துறை  அமைச்சர்  விஜயபாஸ்கரை  தொடர்ந்து,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உடன் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ சந்திப்பு

🌈🌈கோவிஷில்ட் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்த சீரம் நிறுவனம், மற்றொரு கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனையை தொடங்க விண்ணப்பித்துள்ளது.

🌈🌈பிப்.1 முதல் பிறதுறையை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி; இதுவரை

97,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

🌈🌈மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தல்.

🌈🌈பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா ஒதுக்கப்படும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

🌈🌈இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தித்திறன் உலகிற்கே கடவுள் கொடுத்துள்ள மிகப்பெரிய சொத்து என ஐநா புகழாரம் பேசியுள்ளது.

🌈🌈ஹாங்காங் குடிமக்களுக்கு பிரிட்டன் வழங்கியிருந்து 'வெளிநாட்டு' கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) செல்லாது என சீனா அறிவித்துள்ளது.

🌈🌈அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற நாளிலிருந்து, அவா் எதிா்க்கட்சிகளை கலந்தாலோசிக்காமல் தொடா்ச்சியாக அரசாணைகளில் கையெழுத்திட்டு வருவது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

🌈🌈அமெரிக்காவில் வசிக்கும் இந்திய அமெரிக்க குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 1.20 லட்சம் டாலராக (ரூ.87 லட்சம்) உள்ளது என ஆசிய பசிபிக் அமெரிக்க சமூக மேம்பாட்டுக்கான கூட்டணியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌈🌈தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...