கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆறு மாதங்களில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டாம் – இந்திய தேர்தல் ஆணையம்...

 


இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் அதற்கான ஒதுக்கீடுகளை முன்கூட்டியே செய்யத் தொடங்கிவிட்டது. தமிழக தேர்தல் ஆணையமும் வாக்குச்சாவடிகள், வாக்குப்பட்டியல் மற்றும் இயந்திரங்களை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். மார்ச் மாதத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யும் வேலைகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் தமிழகத்தில் ஓய்வுபெறவிருக்கும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை வழங்க வேண்டாம் என தெரிவித்துருந்தது. தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்ற கூடாது என்றும் முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் சிக்கிய அதிகாரிகளை தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலில் நடைபெறும் குழப்பங்களை தவிர்க்க தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...