மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் போது 13.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையின் படி 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக 25 தொடக்கப் பள்ளிகள் தொடங்கிடவும், 10 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்திடவும் ஆணையிட்டார். மேலும் 15 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்றும் ஆணையிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 20.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் 15 நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 28.12.2020 அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியான அரசாணையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 25 தொடக்கப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியானது. எனவே 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் பட்டியல் கொண்ட அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
இணைப்பு: 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கை - 20-03-2020...