கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Announcement லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CM Announcement லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 மணி நேர வேலை - தொழிலாளர் சட்ட முன்வடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது _"திரும்பப் பெறப்பட்டதாக"_ முதலமைச்சர் அறிவிப்பு(12 Hour Work - The Chief Minister's announcement that the draft Labour Law had been put on hold and now "withdrawn")...



>>> 12 மணி நேர வேலை - தொழிலாளர் சட்ட முன்வடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது _"திரும்பப் பெறப்பட்டதாக"_ முதலமைச்சர் அறிவிப்பு (12 Hour Work - The Chief Minister's announcement that the draft Labour Law had been put on hold and now "withdrawn")...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு சட்டமன்ற மற்றும் மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு - த.நா.ச.பே.எண்: 023, நாள்: 19-04-2023 (Increase in pension and medical benefits for ex-members of Tamil Nadu Legislative Assembly and Legislative Council (Upper House) - Chief Minister Announcement - T.N.L.A.No: 023, Dated: 19-04-2023)...


>>> தமிழ்நாடு சட்டமன்ற மற்றும் மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு -  த.நா.ச.பே.எண்: 023, நாள்: 19-04-2023 (Increase in pension and medical benefits for ex-members of Tamil Nadu Legislative Assembly and Legislative Council (Upper House) - Chief Minister Announcement - T.N.L.A.No: 023, Dated: 19-04-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ₹25,000ல் இருந்து ₹30,000-ஆக, கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும்.


முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.


முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மேலவை உறுப்பினர்கள் மருத்துவபடி ரூ.75,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

யாருக்கெல்லாம் ₹1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் த.நா.ச.பே. எண்: 011, நாள்: 27-03-2023 (Who will get ₹1000 Women's Rights Allowance - Chief Minister's explanation in the Legislative Assembly TNLA No: 011, Date: 27-03-2023)...



>>> யாருக்கெல்லாம் ₹1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் த.நா.ச.பே. எண்: 011, நாள்: 27-03-2023 (Who will get ₹1000 Women's Rights Allowance - Chief Minister's explanation in the Legislative Assembly TNLA No: 011, Date: 27-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வருகின்ற நிதிநிலை அறிக்கையில் (Budget) பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் அவர்கள் தகவல் (In the upcoming financial statement, the announcement about giving 1000 rupees per month entitlement to women - Chief Minister's message on International Women's Day)...


>>> வருகின்ற நிதிநிலை அறிக்கையில் (Budget) பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் அவர்கள் தகவல் (In the upcoming financial statement, the announcement about giving 1000 rupees per month entitlement to women - Chief Minister's message on International Women's Day)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் நாளில் கையொப்பமிட்ட ஐந்து கோப்புகள்...

 தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் நாளில் கையொப்பமிட்ட ஐந்து அறிவிப்புகள்...


  1. ரேஷன் அட்டைக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய்...
  2. ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு...
  3. அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்...
  4. கொரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாக சிகிச்சை...
  5. மக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்"  என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறை... 









அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...

 "உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் கொண்டும், ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள் - துறைகளின் பெயர் மாற்றம்"


- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.


✍️👉தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


1.         தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்றத் துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும்.


2.         வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின்  நோக்கம் சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்ல, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.


3.         சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என்று பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்.


4.         மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது.


5.         மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது.


6.         தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது.


7.         செய்தி - மக்கள் தொடர்புத் துறை ‘செய்தித் துறை’யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கட்தொடர்பும் அடங்கியிருக்கிறது.


8.         சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ‘சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை’  என்று வழங்கப்படவுள்ளது.


9.         பணியாளர் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவர்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ‘மனித வள மேலாண்மைத் துறை’ என்று அழைக்கப்பட உள்ளது.


10. வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களிடமும் அவர்கள்தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டுச் சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனித் தமிழும் தமிழகமும் வெல்லும்.


உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் வைத்தும், தமிழக அரசு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்.




அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்...



அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், தனியார் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட தொழிற்சாலை நிர்வாகம் முன்வந்தால் உதவிட அரசு தயாராக உள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

 

தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சென்னைத் தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். 

 

சென்னை நகரில் காய்ச்சல் முகாம்களை 200லிருந்து 400 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். வீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். 

 

அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர், தகுதியான பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தனியார் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட தொழிற்சாலை நிர்வாகம் முன்வந்தால் உதவிட அரசு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு....

 தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.


கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.


கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திறக்கப்பட்டன. குறிப்பாக பொதுத் தேர்வெழுதும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.


இந்த நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை மாணவர்களும் பள்ளிகளும் அதிகம் எதிர்பார்த்திருந்தன.


இது குறித்த இறுதி முடிவை தமிழக முதல்வர்தான் எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் கடந்த வாரம் கூறியிருந்தார்.


இது தொடர்பான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள்  தேர்வெழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.




அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...

 அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், இதனை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் பட்டியல் கொண்ட அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு... முதலமைச்சரின் அறிக்கை - 20-03-2020...

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் போது 13.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையின் படி 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக 25 தொடக்கப் பள்ளிகள் தொடங்கிடவும், 10 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்திடவும் ஆணையிட்டார். மேலும் 15 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்றும் ஆணையிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 20.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் 15 நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 28.12.2020 அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியான அரசாணையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 25 தொடக்கப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியானது. எனவே 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் பட்டியல் கொண்ட அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இணைப்பு: 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கை - 20-03-2020...

>>> 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கை - நாள்: 20-03-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வரும் 19 தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு...

 வரும் 19 தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு...







>>>அனைத்து குறைகளையும் ஒரே தளத்தில் முறையிட "முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்" உருவாக்கம்...

பல்வேறு அரசுத் துறைகள் தொடர்பான குறைகளை ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யும் புதிய திட்டம் -  முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் விரைவில் செயல்படுத்தப்படும்.

- 110விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு.!!

>>> Click here to Download CM Announcement ....

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...