கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தரம் உயர்த்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தரம் உயர்த்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாட்டில் புதிதாக 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024...



 புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகள்  மாநகராட்சிகளாக தரம் உயர்வு...


தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சி...


தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் அறிவிப்பு...


🛑புதுக்கோட்டை

🛑நாமக்கல்

🛑திருவண்ணாமலை

🛑காரைக்குடி


4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு



>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்கவும், அது தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.




இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:


நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.



இதனடிப்படையில், அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கி வருகிறது.


இதன்படி, இவ்வரசு கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.


இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்குதற்கான நடைமுறைகளை தொடங்கிட தற்போது ஆணையிடப்பட்டிருக்கிறது.


இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.


1998-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்படும். இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம் (Form to upgrade school)...



>>> பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம் (Form to upgrade school)...

2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளை தரம் உயர்த்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 257/ B3/ 2021, நாள்: 10-01-2022 (இணைப்பு: 2019-20ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த கோரும் பள்ளிகளின் பட்டியல்) [Proceedings of the State Project Director for Upgrading Schools for the academic year 2022-23 (Attachment: List of schools seeking upgrading for the academic year 2019-20)]...



>>> 2022-23 ஆம் கல்வியாண்டில்  பள்ளிகளை தரம் உயர்த்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 257/ B3/ 2021, நாள்: 10-01-2022 (இணைப்பு: 2019-20ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த கோரும் பள்ளிகளின் பட்டியல்) [Proceedings of the State Project Director for Upgrading Schools for the academic year 2022-23 (Attachment: List of schools seeking upgrading for the academic year 2019-20)]...


>>>  பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம்...


புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education based on the opening of new Elementary schools and the upgrading of Elementary schools to Middle schools) ந.க.எண்: 000444/கே4/2021, நாள்: 10-01-2022...

 


>>> புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education based on the opening of new Elementary schools and the upgrading of Elementary schools to Middle schools) ந.க.எண்: 000444/கே4/2021, நாள்: 10-01-2022...

திருவள்ளூர்‌ மாவட்டம்‌- பொன்னேரி, திருநின்றவூர்‌, கடலூர்‌ மாவட்டம்‌-திட்டக்குடி, வடலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌- அதிராம்பட்டினம்‌, தூத்துக்குடி மாவட்டம்‌ - திருச்செந்தூர்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌- கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர்‌ மற்றும்‌ மதுக்கரை, கரூர்‌ மாவட்டம்‌ - பள்ளப்பட்டி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌ - திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்குதல்‌ - உத்தேச முடிவு - ஆணைகள்‌ வெளியிடப்படுகிறது (Tiruvallur District - Ponneri, Thiruninravur, Cuddalore District - Thittakkudi, Vadalur, Thanjavur District - Adirampattinam, Thoothukudi District - Tiruchendur, Coimbatore District - Karumatthampatti, Karamadai, Kudalur & Madhukkarai, Karur District Pallapatti & Tiruppur District - Thirumurugan Poondi - Establishment of 12 Town Panchayats as Municipalities - Proposed decision - Orders issued)- நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ (தேர்தல்‌) துறை அரசாணை (நிலை) எண்‌.81, நாள்‌: 14.10.2021...



 திருவள்ளூர்‌ மாவட்டம்‌- பொன்னேரி, திருநின்றவூர்‌, கடலூர்‌ மாவட்டம்‌-திட்டக்குடி, வடலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌- அதிராம்பட்டினம்‌, தூத்துக்குடி மாவட்டம்‌ - திருச்செந்தூர்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌- கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர்‌ மற்றும்‌ மதுக்கரை, கரூர்‌ மாவட்டம்‌ - பள்ளப்பட்டி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌ - திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்குதல்‌ - உத்தேச முடிவு - ஆணைகள்‌ வெளியிடப்படுகிறது (Tiruvallur District - Ponneri, Thiruninravur, Cuddalore District - Thittakkudi, Vadalur, Thanjavur District - Adirampattinam, Thoothukudi District - Tiruchendur, Coimbatore District - Karumatthampatti, Karamadai, Kudalur & Madhukkarai, Karur District Pallapatti & Tiruppur District - Thirumurugan Poondi - Establishment of 12 Town Panchayats as Municipalities - Proposed decision - Orders issued)- நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ (தேர்தல்‌) துறை அரசாணை (நிலை) எண்‌.81, நாள்‌: 14.10.2021...


>>> அரசாணை (நிலை) எண்‌.81, நாள்‌: 14.10.2021...


கரூர் மாவட்டம் புகளூர் பேரூராட்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சி, நகராட்சிகளாக தரம் உயர்வு - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை அரசாணை(நிலை) எண்: 83, நாள்: 14-10-2021 வெளியீடு (Karur District Pugalur Town Panchayat and Kanyakumari District Kollangode Town Panchayat, Upgradation as Municipalities - Department of Municipal Administration and Drinking Water Supply (Election) G.O. Released)...



 கரூர் மாவட்டம் புகளூர் பேரூராட்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சி, நகராட்சிகளாக தரம் உயர்வு - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை அரசாணை(நிலை) எண்: 83, நாள்: 14-10-2021 வெளியீடு (Karur District Pugalur Town Panchayat and Kanyakumari District Kollangode Town Panchayat, Upgradation as Municipalities - Department of Municipal Administration and Drinking Water Supply (Election) G.O. Released)...


>>> அரசாணை(நிலை) எண்: 83, நாள்: 14-10-2021...


33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், கரூர் மாவட்டம் பள்ளபட்டி உள்ளிட்ட 33 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிகளாக தரம் உயர்வு...

 33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், கரூர் மாவட்டம் பள்ளபட்டி உள்ளிட்ட 33 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிகளாக தரம் உயர்வு...



வரும் கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு...

 பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆண்டு வரைவுத் திட்டத்துக்காக ( 2021-22 ) , தரம் உயர்த்த வேண்டிய அரசுப் பள்ளிகளின் பட்டியல் தேவைப்படுகிறது. எனவே , தர உயர்வுக்குத் தகுதியான நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்து , இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும். 



மேலும் , தேர்வான பள்ளிகளில் , நிர்ணயிக்கப்பட்ட நிலப் பரப்பு உள்ளிட்ட தகுதிகளைப் பரிசீலித்து , கருத்துரு அடங்கிய அறிக்கையையும் காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும் . இதில் , எவ்விதப் புகார்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு....

 


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை  எண்: 23, நாள்: 08-02-2021 வெளியீடு...

>>> அரசாணை (நிலை) எண்: 23, நாள்: 08-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 19 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு...

 


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 19 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை எண்: 22, நாள்: 08-02-2021 வெளியீடு...

>>> அரசாணை (நிலை) எண்: 22, நாள்: 08-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்...


 மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 5918/ சி1/ இ1/ 2021, நாள்: 04-02-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 5918/ சி1/ இ1/ 2021, நாள்: 04-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




2020-21ஆம் ஆண்டில் 40 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது... அரசாணை (நிலை) எண்: 11, நாள்: 18-01-2021...

 2020-21ஆம் ஆண்டில் 40 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது...

40 High Schools to Hr Sec Schools Upgradation - Schools List Published...

GO NO : 11 , DATE : 18.01.2021

ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 13.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் : 

" 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும் " 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 20.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் . " ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக , 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , மேலும் , 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் , வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும் ".

 பள்ளிக் கல்வி இயக்குநர் தனது கடிதத்தில் , தமிழகத்தில் உள்ள அனைத்து வயது பள்ளி குழந்தைகளும் மேல்நிலைக் கல்வி வரை தொடர்ந்து படிப்பதை உறுதி செய்யவும் , பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தவும் , 2020-2021 - ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி 50 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி ஆணை வழங்குமாறும் , அப்பள்ளிகளுக்குத் தேவையான பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து , முதற்கண் 40 உயர்நிலைப் பள்ளிகளை , மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்திடலாம் என முடிவு செய்து அவ்வாறே பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது : 

2020-21 - ஆம் கல்வியாண்டில் இவ்வாணையின் இணைப்பில் உள்ள / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படுகிறது.

>>> அரசாணை (நிலை) எண்: 11, நாள்: 18-01-2021 மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது... அரசாணை (நிலை) எண்: 10, நாள்: 18-01-2021...


 2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது...

35 Middle Schools to High School Upgradation - Schools List Published...

ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - ன் கீழ் 13.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது . " வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். ” மேலும் , இவ்விதியின் கீழ் 20.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . " தற்போது ஏற்கெனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்.

2020-21 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளை தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யவும் மற்றும் இப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தவும் / தோற்றுவிக்கவும் ஆணை வழங்குமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்து , மாணவ / மாணவியர் நலன் கருதி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் அனுமதித்தல் குறித்து கீழ்க்காணுமாறு அரசு ஆணையிடுகிறது .

2020-21ஆம் ஆண்டில் முதற்கண் இணைப்பில் உள்ள 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

தரம் உயர்த்தப்படும் 35 நடுநிலைப் பள்ளிகளில் , 1-5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுகிறது.

>>> அரசாணை (நிலை) எண்: 10, நாள்: 18-01-2021 மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் பட்டியல் கொண்ட அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு... முதலமைச்சரின் அறிக்கை - 20-03-2020...

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் போது 13.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையின் படி 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக 25 தொடக்கப் பள்ளிகள் தொடங்கிடவும், 10 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்திடவும் ஆணையிட்டார். மேலும் 15 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்றும் ஆணையிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 20.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் 15 நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 28.12.2020 அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியான அரசாணையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 25 தொடக்கப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியானது. எனவே 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் பட்டியல் கொண்ட அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இணைப்பு: 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கை - 20-03-2020...

>>> 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கை - நாள்: 20-03-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக 25 பள்ளிகள் தொடங்கப்பட்டமை, 10 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டமைக்கான அறிக்கை...


>>> 2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக 25 பள்ளிகள் தொடங்கப்பட்டமை, 10 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டமைக்கான அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்படும் 25 புதிய தொடக்கப்பள்ளிகள், தொடக்கப்பள்ளியிலிருந்துநடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் 10 பள்ளிகளின் பட்டியல்...

 அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020ன் படி  2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்படும் 25 புதிய தொடக்கப் பள்ளிகள், தொடக்கப்பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல்...

>>>  2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்படும் 25 புதிய தொடக்கப் பள்ளிகள், தொடக்கப்பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசாணை 134ன் படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...

 


தொடக்கக்கல்வி 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் தொடங்கவும், 10 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020ன் படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020989/ கே4/ 2019, நாள்: 08-01-2021...

>>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020989/ கே4/ 2019, நாள்: 08-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...