கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை...

 தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விதிகளை பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் சில மாணவர்கள் இந்த அறிவிப்பை மீறி முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாகவும், சிலர் முகக்கவசத்திற்கு பதிலாக கை குட்டைகளை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மிக முக்கிய நடவடிக்கையான முகக்கவசம் அணிவது மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் அந்த விதியை மீறி முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் முகக்கவசத்திற்கு பதிலாக கை குட்டைகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பெரம்பலூர் அரசு உயர்நிலை பள்ளிகள், மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் முகக்கவசம் அணியாமல் மாணவர்கள் பள்ளிக்கு வருவதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது.

எனவே அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் கொரோனா விதிகள் சரியான முறையில் பபின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம்

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி உலகப் பிரசி...