தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் முக கவசம் கட்டாயம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Face Masks are mandatory for all inpatients, outpatients, doctors and nurses in government hospitals in Tamil Nadu. People coming to Government Medical College Hospitals must also wear masks - Minister M.Subramanian)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் முக கவசம் கட்டாயம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Face Masks are mandatory for all inpatients, outpatients, doctors and nurses in government hospitals in Tamil Nadu. People coming to Government Medical College Hospitals must also wear masks - Minister M.Subramanian)...
நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம் - அணியாவிட்டால் அபராதம் - சுகாதாரத்துறை (Face Mask Compulsory - Fine to be imposed for violating COVID restrictions - Health and Family Welfare Department) செய்தி வெளியீடு எண் :1048, நாள்: 26-06-2022...
😷😷😷😷😷😷😷 தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - கொரோனோ தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவு...
😷😷முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு...
💥 சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு...
💥 கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு...
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...
கடந்த 7 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 34,002 வழக்குகள் பதிவு - ரூ.68 லட்சம் அபராதம் (34,002 cases registered for not wearing face mask in last 7 days - Rs 68 lakh fine)...
சென்னையில் கடந்த 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 34,002 வழக்குகள் பதிவு செய்து ரூ.68 லட்சம் அபராதம் வசூலிப்பு - மாநகர காவல்துறை...
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.23, Dated 12-01-2022) வெளியீடு (Penalty for not wearing Mask in public places increased from Rs 200 to Rs 500)...
முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்.
முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ 200-ல் இருந்து ரூ 500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்...
ஐந்து வயது வரை குழந்தைகள் முகக்கவசம் (Mask) அணிய தேவையில்லை - சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்...
ஐந்து வயது வரை குழந்தைகள் முகக்கவசம் (Mask) அணிய தேவையில்லை - சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்... இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது . தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயம் அதிகரித்துள்ளது . மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி உள்ளனர் . இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) வெளியிட்டுள்ளது. அதில் , 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம் . 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை . தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது .
கோவிட்19 பெருந்தொற்று - Hand Sanitizer, N95 & Surgical Mask, Gloves உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து விலை நிர்ணயித்து அரசாணை வெளியீடு...
கோவிட்19 பெருந்தொற்று - Hand Sanitizer, N95 & Surgical Mask, Gloves உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து விலை நிர்ணயித்து அரசாணை ( G.O.(D) No.:695, Dated: 04-06-2021 ) வெளியீடு...
கிருமிநாசினி, சர்ஜிகல் மாஸ்க், பிபிஇ கிட், N95 மாஸ்க் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு அதிகபட்ச (MRP) விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. அதாவது N95 மாஸ்க் 22 ரூபாய், சர்ஜிக்கல் மாஸ்க் 4.50 ரூபாய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும், அதற்கான உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்துள்ளது.
விலை விவரங்கள்:
கிருமிநாசினி 200 மில்லி லிட்டர் ரூ.110
N95 முககவசம் 22 ரூபாய்
கையுறை 15 ரூபாய்
பிபிஇ கிட் 273 ரூபாய்
இரண்டு அடுக்கு முககவசம் 3 ரூபாய்
மூன்று அடுக்கு முககவசத்தின் விலை 4 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12
அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும்.
சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
>>> Click here to Download G.O.(D) No.:695, Dated: 04-06-2021...
இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரே மாஸ்க் அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம் - எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை...
"இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரே மாஸ்க் அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம்" - எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை!
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து இந்த நோயை அறிவிக்கப்படவேண்டிய நோயாக பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசும் இந்த நோயை கையாளுவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முகக்கவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம் என எய்ம்ஸின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் பி சரத் சந்திரா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "பூஞ்சை தொற்று பாதிப்புகள் புதிதல்ல. இருப்பினும் தொற்று நோய் என கூறக்கூடிய அளவிற்கு பூஞ்சை பாதிப்புகள் ஏற்பட்டதில்லை.
ஆனால் அதுபோல் வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். கட்டுப்பாடற்ற நீரிழிவு, டோசிலிசுமாப் மருந்துடன் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு, வென்டிலேட்டர்களில் இருப்பவர்கள் கூடுதல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வது ஆகிய காரணிகளில் எதாவது ஒன்று இருந்தாலும் கருப்பு பூஞ்சை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது" என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், "சிலிண்டரிலிருந்து நேரடியாக குளிர்ந்த ஆக்சிஜனைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது. அதேபோல் 2-3 வாரங்களுக்கு ஒரே முகக்கவசத்தை அணிவது கருப்பு பூஞ்சை ஏற்பட வழிவகுக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தானியங்கி முக கவசம் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தானியங்கி முக கவசம் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது...
நடைப்பயிற்சியின் பொழுது முகக்கவசம் (Mask) அணிவது நல்லதா?
பொதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்வது ஒவ்வொருவருடைய உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால், கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அடர்த்தியான முகக்கவசங்கள் அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான செயலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உடல் நலனைக் கவனத்தில்கொண்டு நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஒருபகுதியினர்தான் என்றாலும் அவர்களை இந்தக் கரோனா காலத்திலும் யாராலும் தடுக்கமுடியவில்லை. பூங்காக்கள் பூட்டப்பட்டிருந்தாலும் கடற்கரையில் அனுமதி மறுக்கப்பட்டாலும் காலை அல்லது மாலை வேளைகளில் சாலைகளில் நடைப்பயிற்சி, ஜாகிங் மேற்கொள்பவர்களை இப்போதும் பார்க்கமுடிகிறது.
‘N95’ முகக்கவசம் நல்லதா?
இவர்களில் சாதாரண நடைப்பயிற்சியை மேற்கொள்பவர்கள் ஒருசிலர் என்றால் தினமும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அதிகரித்துக்கொண்டே ஜாகிங்கில் ஈடுபடுபவர்கள் மற்றொரு பிரிவினர். பொதுவாக உடல்நலனைக் கவனத்தில் கொள்பவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு சென்றாலும் பாதுகாப்புக்காக அணியும் முகக்கவசமே பலருக்குப் பிரச்சினையாக உள்ளது. நடைப்பயிற்சி, ஜாகிங் செய்வதன் பிரதான நோக்கமே உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை அதிகரிப்பதற்கும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கவும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும்தான்.
ஆனால், நடைப்பயிற்சின்போது அடர்த்தி அதிகமுள்ள N95 போன்ற முகக்கவசங்களை அணிவதால் மூச்சு இரைப்பு அதிகரிப்பதுடன் நுரையீரல் பாதிக்கப்படும் என்கிறார் ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையின் முன்னாள் இயக்குநர், மருத்துவர் ஜி.மனோகரன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வீட்டில் உள்ள நடைப்பயிற்சி மிஷினில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் அல்லது மொட்டை மாடி, கனரக வாகனங்களை நிறுத்துமிடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகும். ஆனால் வீட்டிற்கு வெளியே சென்று மேற்கொள்ளப்படும் எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் அடர்த்தி குறைவாக உள்ள முகக்கவசம் அணிந்துகொண்டு, 10 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
பொதுவாக நாம் நடக்கும்போது ஒரு நிமிடத்திற்கு பதினைந்து முதல் பதினாறு முறை சாதாரணமாக மூச்சுவிடுவோம். இதுவே நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களுக்கும் அதிகளவு ஆக்ஸிஜன் தேவைப்படும். இதனால் அதிக அளவு மூச்சுவிடத் தொடங்குவோம். அதேபோல் சாதாரணமாக இருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு எழுபத்து இரண்டு முறை இதயத் துடிப்பின் அளவு இருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடும் அளவைப் பொறுத்து இதயத் துடிப்பின் அளவும் ஒரு நிமிடத்திற்கு தொண்ணூறு முதல் நூறு முறை துடிக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடும்போது ஹீமோகுளோபின் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளும். பொதுவாக குழந்தைகளுக்கு இந்தச் செயல்பாடு நூறு சதவீதம் இருக்கும். பெரியவர்களுக்கு சற்று குறைவாக 96, 97 என்ற அளவில் இருக்கும். இது சாதாரணமாக ஒருவருக்கு இருக்கக்கூடிய அளவுதான்.
நோயாளிகளைக் கையாளும் மருத்துவர்கள் அணியும் நான்கு, ஐந்து லேயர்களைக் கொண்ட N95 முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை. அடர்த்தி அதிகமுள்ள இந்த வகை முகக்கவசங்களை அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, ஜாகிங் செய்வதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு உடல் திசுக்களுக்கு அதிகளவு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும். இந்தச் செயல் காரணமாக நுரையீரல் தேவையில்லாத சிரமத்திற்கு உள்ளாகும். நாம் எந்த நோக்கத்திற்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோமே அந்த நோக்கத்தையே இந்த முகக்கவசம் கெடுத்துவிடுகிறது.
தண்ணீரின் அடியில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூச்சை அடக்க முடியாமல் திணறி வெளியே வருவதுபோல் அடர்த்தி அதிகமுள்ள முகக்கவசங்களை அணிந்துகொண்டு நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஒருகட்டத்திற்கு மேல் மூச்சு இரைப்பு அதிகமாகி மூச்சுவிட முடியாமல் சிரமத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும். மேலும் N95 முகக்கவசம் அணிந்துகொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உண்டாகும் வியார்வைத் துளிகள் எல்லாம் அந்த முகக்கவசத்தில் ஊறி முகக்கவசத்தை மற்றொரு முறை பயன்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். வியர்வையுடன் உள்ள முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிந்துகொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மூச்சுக்குழாயில் வேறு சில பிரச்சினைகள் உண்டாகும். சாதாரண முகக்கவசங்களை அணிந்துகொண்டு மக்கள் கூட்டம் அதிகமில்லாத காலை வேளைகளில் ஒருவர் நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இந்தக் கரோனா காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்” என வலியுறுத்துகிறார் மருத்துவர் ஜி.மனோகரன்.
பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை...
தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விதிகளை பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் சில மாணவர்கள் இந்த அறிவிப்பை மீறி முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாகவும், சிலர் முகக்கவசத்திற்கு பதிலாக கை குட்டைகளை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மிக முக்கிய நடவடிக்கையான முகக்கவசம் அணிவது மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் அந்த விதியை மீறி முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் முகக்கவசத்திற்கு பதிலாக கை குட்டைகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பெரம்பலூர் அரசு உயர்நிலை பள்ளிகள், மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் முகக்கவசம் அணியாமல் மாணவர்கள் பள்ளிக்கு வருவதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது.
எனவே அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் கொரோனா விதிகள் சரியான முறையில் பபின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பணிபுரியும் இடத்தில் முகக் கவசம் (Face Mask) அணியாத ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசு முதன்மைச் செயலாளர்...
U.O.Note No.13914/Buildings/2020-2. Dated: 20.01.2021
Sub: Buildings — COVID-19 — Guidelines on Preventive measures to contain the spread of COVID -19 — Mandatory to wear Face Masks in work place-Instructions — Regarding.
Ref: U.O.Note.No.13914/Buildings/2020-1, Dated:1.06.2020.
In the U.0 Note cited certain instructions have been issued to follow the Guidelines issued by the Government of India. Ministry of Health and Family Welfare on preventive measures to contain the spread of COVID-19 in workplace I Public place. Among others. It has been instructed that the use of face mask by all the Staff and visitors of Secretarial is Mandatory. 2. However, it has been observed that few of the staff/visitors are not wearing lace masks in the Secretarial premises which is in violation of the SOP/Guidelines on preventive measures to contain the spread of COVID-19 in Workplace / Public place. Hence, all the OP Sections of the Departments of Secretariat are hereby instructed as follows:
- To strictly enforce proper wearing of face Masks by all the Staff Members in workplace/Office Premises.
- Staff/ Visitors shall not be allowed to enter office premises/ workplace without properly wearing face masks.
- To take necessary departmental action against the Staff who do not wear lace masks inside office premises/ workplace.
The above instructions may be adhered to scrupulously.
P. SENTHILKUMAR, PRINCIPAL SECRETARY TO GOVERNMENT (FAC)
>>> Click here to Download Principal Secretary Letter...
🍁🍁🍁 முக கவசம் (Mask) அணிவது சிரமமாக உள்ளது என நினைப்பவர்கள் இந்த செய்தியை அவசியம் படியுங்கள்...
மாஸ்க் போடுவது கஷ்டம் என்று நினைப்பவர்கள் இதைப் படியுங்கள்
வென்டிலேட்டரில் இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியாதவர்களுக்கு:
கோவிட் -19 க்கான வென்டிலேட்டர் என்பது உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது - அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.
இதனால் நீங்கள் உணரும் அசௌகரியம் மற்றும் வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்கள் மயக்க மருந்துகள் மற்றும் வலி மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த சிகிச்சையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு வெளிவரும் ஒரு இளம் நோயாளி, 40% உடல் தசையை இழக்கிறார். வாய் மற்றும் குரல்வளைகளில் காயங்களை பெறுகிறார், அத்துடன் நுரையீரல் அல்லது இதய சிக்கல்கள் ஏற்படலாம். இந்த காரணத்தினால்தான் வயதானவர்கள் அல்லது ஏற்கனவே பலவீனமானவர்கள் இந்த சிகிச்சையில் தாக்குப்பிடிக்க இயலாமல் இறந்து விடுகிறார்கள்.
திரவ உணவைச் செலுத்துவதற்காக உங்கள் வயிற்றில் மூக்கு வழியாகவோ அல்லது தோல் வழியாகவோ ஒரு குழாய் வைக்கப்படும். கழிவுகளைச் சேகரிக்க உங்களின் பின்பகுதியைச் சுற்றி ஒரு ஒட்டும் பை, சிறுநீர் சேகரிக்க ஒரு பை, திரவங்கள் மற்றும் மெட்ஸுக்கு ஒரு IV கருவி பொருத்தப்பட்டிருக்கும்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்களின் கை கால்களை செவிலியர்கள் குழு நகர்த்தி வைப்பார்கள். உங்களின் உடல் வெப்பநிலையை 40° டிகிரிக்கு குறைக்கும் வகையில் ஒரு குளிர்ந்த நீர் படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பீர்கள்.
உங்கள் அன்புக்குரியவர்கள் கூட உங்களைப் பார்க்க வர முடியாது. உங்கள் இயந்திரத்துடன் ஒரு அறையில் நீங்கள் தனியாக இருப்பீர்கள்.
ஆனால் சிலர் முக கவசம் (Mask) அணிவது சங்கடமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்!
>>> சரியான முறையில் முகக்கவசம் அணியும் வழிமுறைகள்....
உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் # COVID19லிருந்து பாதுகாக்க, பருத்தி துணியினால் ஆன முகக்கவசத்தை சரியாக அணிய எட்டு எளிய படிநிலைகள் உள்ளன.
உங்கள் முகக்கவசத்தை அணிந்ததற்கு நன்றி.
#TogetherAgainstCOVID19
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...