கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களுக்கு 01-02-2021 முதல் இலவச 2ஜிபி டேட்டா...

 


தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆன்லைன் வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உதவிடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.9,69,047 மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குவதற்கான சிம்கார்டுகள் எல்காட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.இந்நிலையில் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு

  அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு  அரியலூர் அருகே உள்ள வெற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உண...