ஜன.3-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.
குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியானது:
3,752 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி.
கடந்த ஜன.3 அன்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் தேர்வெழுதினர். இதில் நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 3,752 பேர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு, மே. 28,29,30 தேதிகளில் நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்காகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) அரசு கேபிள் டிவி நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய நாட்கள் என வரும் 16-ம் (16/2/2021) தேதி முதல் மார்ச் 15 (மாலை 5.45 வரை) பதிவேற்றலாம்”.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>> Click here to Download TNPSC Group I Result...