கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Group I லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Group I லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Group 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...

 


குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...


15-day time to file detailed inquiry report on Group 1 exam malpractices: High Court directs anti-bribery vigilance department...


குரூப் 1 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டோர் குறித்த விரிவான விசாரணை அறிக்கையை 15 நாட்களில் தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2021ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான சலுகையை பலர் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், ‘‘2019ல் நடந்த குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. போலியாக சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக 4 பேர் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் மூன்று பேர் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மட்டும் இந்த முறைகேடு நடந்ததா இல்லை வேறு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘2019ல் நடந்த குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்? அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? ஏன் இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட் கிளை 2021ல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாக செயல்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பதால் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை ஒவ்வொரு முறையும் பழைய விஷயங்களையே நீதிமன்றத்தில் கூறுகிறது. புதிது, புதிதாக கண்டுபிடித்து ஒவ்வொன்றாக காரணங்களை கூறுகின்றனர். நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளுக்கு துளியும் அச்ச உணர்வு கிடையாது. இது அரசு அலுவலர்கள் தவறுக்கு துணையாக இருப்பதையே காட்டுகிறது. அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையே நிறைவேற்றுவதில்லை’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இறுதியாக 15 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடும் உத்தரவுகளை பிறப்பிக்கப்படும். வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க நேரிடும்.

குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ் வழியில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டது? எத்தனை பேர் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்றனர். அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தற்போது வரை தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறித்த விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


* டிஎஸ்பி, ஆர்டிஓ உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு


குரூப் 1 தேர்வில் போலியாக தமிழ் வழி சான்று கொடுத்த விவகாரத்தில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த உதவி கமிஷனர் (மாநில வரிகள்) திருநங்கை ஸ்வப்னா (34), திருப்பாலையைச் சேர்ந்த கோவை கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் சங்கீதா (40), சேலம் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் (40), காஞ்சிபுரம் ஆர்டிஓ கலைவாணி (37), மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூத்த கண்காணிப்பாளர் சத்யமூர்த்தி (62 – சஸ்பெண்ட்), பல்கலைக்கழக தொலைதூர கல்வித் திட்ட கண்காணிப்பாளர் புருஷோத்தமன் (59), தேனி மாவட்டம் பங்களாப்பட்டியைச் சேர்ந்த லைப் கல்வி அறக்கட்டளை நிர்வாகி முரளி (40), அறக்கட்டளை திட்ட அலுவலர் நாராயணபிரபு (41), கோவையைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.


குரூப் 1 முறைகேட்டில் 7 பேர் மீது வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை...



குரூப் 1 முறைகேட்டில் 7 பேர் மீது வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை...


Case against 7 people in Group 1 Malpractice - Anti-bribery vigilance department...


கடந்த  ஆட்சியில் குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் வழிக் கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


TNPSC Group-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு...

 

TNPSC Group-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு...



>>> தேர்வு முடிவுகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



*டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.


தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கு ஜூலை 13ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. 


தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் பேர் எழுதியதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்திருந்தது. 


துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட குரூப்-1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன. 


குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். 


குரூப்-1 முதன்மைத் தேர்வு டிச.10 முதல் டிச.13 வரை நடைபெறவுள்ளது. 


இந்நிலையில், குரூப்-1 முதல்நிலை தேர்வு நடந்த 50 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டது. 


தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/04_2024_GR_I_PRLM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.


ஒருங்‌கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு - I (தொகுதி- I) விண்ணப்பதாரர்கள்‌ 21.07.2023 மாலை 05.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்ய இறுதி வாய்ப்பு (Last chance for Combined Civil Services Examination - I (Group- I) candidates to upload missing and complete certificates by 05.45 PM on 21.07.2023)...

ஒருங்‌கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு - I (தொகுதி- I) விண்ணப்பதாரர்கள்‌ 21.07.2023 மாலை 05.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்ய இறுதி வாய்ப்பு (Last chance for Combined Civil Services Examination - I (Group- I) candidates to upload missing and complete certificates by 05.45 PM on 21.07.2023)...


செய்‌தி வெளியீட்டு எண்‌: 50/2023, நாள்‌: 07.07.2023

செய்திக்குறிப்பு


தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அறிவிக்கை எண்‌:16/2022, நாள்‌ 21.07.2022 இன்‌ வாயிலாக ஒருங்‌கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு - I (தொகுதி- I) இல்‌ அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு விண்ணப்பதாரர்களால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌, சரிபார்ப்புக்கு பின்னர்‌ சில சான்றிதழ்கள்‌ முழுமையாக சரியாக பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள்‌ 21.07.2023 மாலை 05.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல்‌ அவ்விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்‌ மற்றும்‌ குறிப்பாணை (தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும்‌, அவ்விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும்‌ குறிப்பாணையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்கள்‌ வாயிலாக பதிவேற்றம்‌ செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. அவ்வாறு தவறும்‌ பட்சத்தில்‌, அத்தகைய விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்பம்‌ முழுவதுமாக நிராகரிக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.


அஜய்‌ யாதவ்‌, இ.ஆ.ப.,

தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்‌




TNPSC consequent to the verification of certificates uploaded by the candidates in respect of the posts included in Combined Civil Services Examination – I (Group – I Services), notified vide Commissions Notification No.16/2022, dated 21.07.2022, it is found that some of the candidates have not uploaded / partially uploaded / certain defects in the certificates.

In order to provide final opportunity to the respective candidates they are informed through sms, e-mail and Memorandum (available on the Commission website) to upload the crucial certificates/ documents mentioned in the Memorandum through the e-seva centres mentioned in the Commission’s website, upto 21.07.2023 (5.45 PM). Failure to upload the certificates will result in summarily rejection of such applications.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாளில் கணக்கு பாடத்திலிருந்து கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் உத்தேச விடைகள் (Maths Related Questions in TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...

 



தனியார் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்...


5% விடை மாற்றங்கள் இருக்கலாம்...


>>> 19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு வினாத்தாளில் கணக்கு பாடத்திலிருந்து கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் உத்தேச விடைகள் (Maths Related Questions in TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...



>>> 19-11-2022 அன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு முழுமையான வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (TNPSC Group-I Exam 19-11-2022 Question Paper & Tentative Answer Key)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு ( TNPSC - Group 1 Preliminary Exam ) முடிவுகள் வெளியீடு...

 


ஜன.3-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியானது: 

3,752 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி.

கடந்த ஜன.3 அன்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் தேர்வெழுதினர். இதில் நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 3,752 பேர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு, மே. 28,29,30 தேதிகளில் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்காகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) அரசு கேபிள் டிவி நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய நாட்கள் என வரும் 16-ம் (16/2/2021) தேதி முதல் மார்ச் 15 (மாலை 5.45 வரை) பதிவேற்றலாம்”.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>> Click here to Download TNPSC Group I Result...


COMBINED CIVIL SERVICES 1 EXAMINATION (GROUP I SERVICES) - Tentative Answer Keys...

Tentative Answer Keys - Posts included in COMBINED CIVIL SERVICES 1 EXAMINATION (GROUP I SERVICES) 

Date of Preliminary Examination : 03.01.2021 FN

TENTATIVE KEYS HOSTED ON 07.01.2021

>>> Click here to Download Tentative Answer Key...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...