கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு...10.02.2021 (புதன்)...

 


🌹உரியவர்கள் காட்டாத அக்கறையை உரிமை இல்லாதவர்கள் காட்டும்போதுதான் உணர்கிறோம்.

அன்புகாட்டவும், அக்கறைகாட்டவும் உறவுகள் தேவையில்லை                                                                      நல்ல உள்ளங்கள் இருந்தாலே போதுமென்று.!

🌹🌹எதைப் பற்றியும்

எவரைப் பற்றியும் தேவைக்கு அதிகமாக தெரிந்து கொள்ளாமல்

இருப்பதே நிம்மதிக்கான ஒரே வழி.!!

🌹🌹🌹வாழ்க்கையில் நாம் செய்யும் இரு தவறுகள்.

பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பது.

மெளனமாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈தமிழகத்தில் 10 மாதத்திற்கு பிறகு தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்ட வரும் நிலையில் , தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை வெளியிட்டிருந்தது . இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  குறைக்கப்பட்ட  பாடத்திட்டத்தினை  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.                                           

🌈🌈நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு – யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

🌈🌈விரைவில் 2021 ஆம் ஆண்டு சென்சஸ் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்படவுள்ளது.

🌈🌈வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை” -மத்திய அரசு விரைவில் கொண்டுவர திட்டம்

🌈🌈ஜாக்டோ ஜியோ போராட்டம் - அரசுக்கு நெருக்கடி

🌈🌈பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

🌈🌈12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை - ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

🌈🌈ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி - 23 ஆண்டுகளாக பணிபுரியும் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணிஆணை , ஊதிய உயர்வு , அடிப்படை பணிச்சலுகைகள் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை.

🌈🌈சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் அவதி

🌈🌈பகுதிநேர ஆசிரியர்களைச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

🌈🌈மத்திய அரசு பணிகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டின் கீழ் 21 புதிய பிரிவுகள் சேர்ப்பு

🌈🌈தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 90% மாணவர்கள் வருகை

🌈🌈9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை

🌈🌈ஜன.3-ம் தேதி நடைபெற்ற  குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகளை  வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

🌈🌈ஜாக்டோஜியோ மாநில நிர்வாகிகளின் கைது, விடுவிப்பு, மருத்துவ சிகிச்சை இவற்றை கடந்தும் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் இன்றும்  தொடர்கிறது.

🌈🌈தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்க வசதியாக  தொகுதி தேர்தல் அலுவலகங்களில்  தனிவாக்குச் சாவடி மையம் அமைக்க கோரிக்கை - மத்திய தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

🌈🌈விண்வெளித்துறையில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 50 கிராமுக்கும் குறைவான எடையுள்ள மிகச்சிறிய 100 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. 

🌈🌈TNPSC- தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள் ,அரசாணைகள் & தேர்வாணைய நடைமுறை விதிகள்- போன்றவற்றை உள்ளடக்கிய விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் தற்போது 31.01.2021 அன்று முதல் திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

🌈🌈ராமநாதபுரம் மாவட்டத்தில்  வகுப்பறையில் போதிய இடவசதியில்லாத பள்ளியில் 9, பிளஸ் 1 மாணவர்களை அருகே உள்ள ஆரம்ப பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

🌈🌈மத்திய அரசின் நிதியில், சென்னை உட்பட, நான்கு மாவட்டங்களில் உள்ள, 127 அரசு பள்ளிகளில், குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சம் தரக்கூடிய, 'எல்.இ.டி., பல்பு, டியூப் லைட்' பொருத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

🌈🌈அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்க அரசாணை வெளியீடு

🌈🌈அவகாசம் வழங்க வாய்ப்பில்லை: பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு பாஸ்டேக் கட்டாயம்

🌈🌈மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான வழக்கில் சீனாவுக்கு உதவும் வகையில் பாஜகவை சேர்ந்த வி.கே.சிங் பேசியது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

🌈🌈தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா தலைமையிலான குழு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு சென்னையில் ஆய்வு மேற்கொள்கிறது.

🌈🌈அதிமுக பொதுக் குழுவை கூட்ட பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாவுக்கே உரிமை உண்டு

ஜெ. நினைவிடம் திறந்ததும், சசிகலா செல்வார்- டிடிவி தினகரன்

அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இன்னமும் இருக்கின்றனர்- தினகரன்

சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் -  டிடிவி தினகரன்.

சசிகலா உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் விசாரித்தார்- தினகரன்.

சட்டசபை தேர்தலில் ஆர்.கே. நகர், தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதி என 2 இடங்களில் போட்டி: தினகரன்.

🌈🌈மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெரும் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத்துக்காக பிரதமர் மோடி கண்கலங்கினார்.

நாட்டின் மீது அக்கறை கொண்டவர் குலாம் நபி ஆசாத் என்று மோடி புகழாரம் சூட்டினார்.

🌈🌈தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்படுவதாக திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தி, சமஸ்கிருதம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திணிக்கப்படுவதாக மாநிலங்களவையில் திருச்சி சிவா கூறியுள்ளார். தமிழை புறக்கணிக்கும் மத்திய அரசின் முடிவுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.

🌈🌈வட மாநில இளைஞர்களை நெய்வேலி என்.எல்.சி. பணியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது : 

வைகோ கண்டனம்

🌈🌈ஐ.ஐ.டி முனைவர் பட்ட அனுமதிகளில் இடஒதுக்கீடு மீறப்படுவதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

🌈🌈அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம்;

அதற்காக சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்படும்: 

அமைச்சர் சி.வி சண்முகம் பேட்டி

🌈🌈அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அவகாசம் கோரி கலையரசன் குழு தமிழக அரசிற்கு கடிதம்.

விசாரணை நடத்துவதற்கு மேலும் 3 மாதம் காலஅவகாசம் கோரி தமிழக அரசிற்கு கடிதம்

ஊதியம் வழங்கியதில் முரண்பாடு உள்ளதாக விசாரணை குழு குற்றச்சாட்டு

🌈🌈சசிகலாவின் வருகை ஆளும் கட்சியினருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி உறுதியாக உள்ளது

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்

🌈🌈சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தேதியை இறுதி செய்யும் வகையில் மாநில, உள்ளூர் விடுமுறை தேதிகள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது.

தேர்தலுக்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

🌈🌈மினி கிளினிக்கில் பணியாற்ற 2,000 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஓரிரு நாட்களில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர் - 

அமைச்சர் விஜயபாஸ்கர்

🌈🌈ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த 20 நாள்களில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி என்ற அறக்கட்டளை நிதித்திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுமானத்திற்காக பல்வேறு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 20 நாள்களில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ஆம் தேதி வரை நிதித்திரட்டும் பணி நடைபெறும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

🌈🌈இராணுவ ஆட்சியின் பிடியில் உள்ள மியான்மருடன், அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை நிறுத்தி வைக்க முடிவு.

- நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு.

🌈🌈சசிகலா, தேர்தலில் போட்டியிட சட்டவாய்ப்பு இருப்பதால், நிச்சயம் அவர் போட்டியிடுவார் என நம்பிக்கை உள்ளது 

- தினகரன்

🌈🌈குஜராத் ஒருபோதும் மேற்கு வங்காளத்தை ஆள முடியாது -மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

🌈🌈குடியரசுத் தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறையை துாண்டிவிட்டதாக பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டெல்லி தனிப்படை காவல் துறை கைது செய்துள்ளது.

🌈🌈அப்பாவு கோஸ்வாமி" என்று பெயர் வைத்திருந்தால் தனக்கு நீதி கிடைத்திருக்குமா என்று முன்னாள் எம்எல்ஏ அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார்?

ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில் கேள்வி

🌈🌈ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.

புள்ளிபட்டியலில் நான்காவது இடத்திற்கு பின் தங்கியது இந்திய அணி.

🌈🌈2019 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

🌈🌈இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் இலங்கை குடிமகன்.

தொடர்ந்து இந்தியாவிலேயே இருந்து, போராட்டத்தில் வெற்றியடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

🌈🌈கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆக.25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் - வேலூரில் நடந்த பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி.

🌈🌈மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கம்.

🌈🌈சீனாவின் வூஹானில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: உலக சுகாதார நிறுவனம் தகவல்.

🌈🌈மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 77வது நாளாக விவசாயிகள் போராட்டம்

🌈🌈நிதிப் பற்றாக்குறையைக் கண்காணிக்க அரசு நடவடிக்கை.. கடன் வாங்கவோ செலவு செய்யவோ அரசு தயாராக உள்ளது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌈🌈சமையல் எரிவாயுக்கு வழங்கப்படும் மானியம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

🌈🌈உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து உருவான வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களின் மீட்புப் பணிகளில் பங்களிப்பு அளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளாா்.

🌈🌈தென் ஆப்பிரிக்காவில் அஸ்ட்ரா ஸெனகாவின் தடுப்பூசி திட்டம் உலக அளவில் அதன் செயல் திறன் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஜுவெலி மெக்கிஸ் தெரிவித்தாா்.

🌈🌈மியான்மரில் மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

🌈🌈அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு; பிராந்திய பிரச்சனைகள், காலநிலை மாற்றம் தொடர்பாக பேசியதாக தகவல்.                                                           

🌈🌈பி.எஸ்சி நா்சிங், பி.பாா்ம்., உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

🌈🌈இளநிலை மருத்துவப் படிப்புகள் (எம்பிபிஎஸ்) சோக்கைக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு (நீட்) நிகழாண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட உள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

🌈🌈தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...