கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் – அமைச்சர் பேட்டி...



 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு அவர்களது குழந்தைகள் போல் கருதி நீண்ட நேரம் பாடங்கள் எடுக்க வேண்டும். ஒரு வகுப்பை 1 மணி நேரம் எடுத்து விரைவில் பாடங்களை முடிக்க வேண்டும். 


 மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தலுக்கு பின் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு அரசு ஆய்வு செய்து வருகிறது” என்று கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tamilnadu Government Schools Centenary Celebration - District wise Launch Schools List

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழா - தொடக்கவிழா நடைபெறும் பள்ளிகள் பட்டியல் - மாவட்ட வாரியாக  Tamilnadu Government Schools Centenar...