கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 24.02.2021 (புதன்)...

 


🌹வாழ்க்கை நேர்மையாக உள்ளவர்களை அழ வைக்கிறது.

நேரத்திற்கு ஏற்ப மாத்தி 

பேசுபவர்களை வாழ வைக்கிறது.!

🌹🌹நம்மில் பலர் வாழும் போதே இறந்து விடுகின்றோம்.

புதைக்கத்தான் சில ஆண்டுகள் ஆகின்றது.!!

🌹🌹🌹இவங்க ஏன் இப்படி என்று சிந்திப்பதை விட இவங்க இப்படி தான் என்று மனதில் நினைத்து விட்டு ஒதுங்குவதே சிறப்பான வாழ்க்கை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் - 25.02.2021 வரை நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

📕📘சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 27.02.2021 (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியீடு

📕📘ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து அரசாணை வெளியீடு

📕📘நாளை 25 ஆம் தேதி முதல் தமிழக போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்

📕📘26 உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

📕📘இன்று பிப்ரவரி 24 ம் நாள் "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக'" கொண்டாட மாநில திட்டஇயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘அரசாணை எண் 25 -நாள் 8.2.2021- ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் - ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் உபரியாக கண்டறியப்பட்ட இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிப்படுகின்றன

📕📘அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 7 இலட்சத்திருந்து 10 இலட்சமாக உயர்வு

📕📘அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் அரசு ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த மருத்துவ காப்பீட்டுத் தொகை 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு

📕📘ஊதிய உயர்வுடன் இரண்டு குழப்பமான G.O வெளியிட்டதால் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு! அரசாணையை மீண்டும் தெளிவாக வெளியிட வேண்டுகோள்

📕📘தேர்தலில் பணியாற்ற உள்ள கல்வித்துறை   ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பிறந்த தேதி சேகரிப்பு:- அதிகாரிகள்  தகவல்                                                                                               

📕📘பட்டியலின மற்றும் பழங்குடியினமாணவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கக் .  கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

  📕📘ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட முழு நேர தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்த கோரிக்கை

📕📘6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம்! - துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

📕📘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி  - அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கான ஓவியத் திருவிழா -  ஒன்றியம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு சென்னையில் தங்கும் வசதி கிடையாது என்ற திடீர் அறிவிப்பால் மாணவர்கள் பாதிப்பு

📕📘ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு(குறிப்பு -நிபந்தனையுடன்)  திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை வெளியீடு

📕📘B.Ed சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. தொலைதூர கல்வி மூலம் பி.எட் படிப்பை நடத்த யு.ஜி.சி தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகம் அனுமதி அளித்துள்ளது..

இதற்கான வகுப்புகள் மே மாதம் முதல் தொடங்கும். ஆயிரம் பேருக்கு சேர்க்கை நடைபெறும். கூடுதல் விவரங்கள் தேவைப்படுபவர்கள் www.tnou.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம் " என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

📕📘மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

📕📘இரட்டை அல்லது கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவறிக்கையை யுஜிசி இறுதி செய்துள்ளது. எனினும் மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை மீதான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

📕📘5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் 

📕📘பொது தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், ஆறு நாட்களும் வகுப்பு நடத்தி, பாடங்களை முடிக்குமாறு, தலைமை ஆசிரியர்களை, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

📕📘நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே பேச வேண்டும் என மத்திய கல்வி துறை அறிவித்துள்ளது.

📕📘ஜெயலலிதா நினைவிடம் இன்று (பிப்.24ம் தேதி) பொது மக்கள் பார்வையிட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை (பிப்.24ம் தேதி) அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா அங்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்.                                                                   

📕📘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிப்.26-ம் தேதி முதல் 5-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தை பிப்.26-ல் விழுப்புரத்தில் ஸ்டாலின் தொடங்குகிறார்.

📕📘செவிமடுக்காத அதிமுக அரசிடம் போராடாதீர்கள்!.. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட்

டிவிட்டரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; 

போராடும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் அவர்களைக் கைது செய்வதா?, தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என நாடகமாடும் தமிழக அரசு மறுபக்கம் கைது கொடுமையை அரங்கேற்றுகிறது. செவிமடுக்காத அதிமுக அரசிடம் போராடாதீர்கள்; திமுக அரசு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எனவும் உறுதி அளித்தார்.                                                                                                

📕📘ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு சட்டசபைக்கு வருவோம்: 

துரைமுருகன் திமுக

📕📘தமிழக அரசின் கடன்தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்காதது ஏமாற்றம் தருகிறது.

டிடிவி தினகரன்

📕📘பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.*10.9% தொழில் வளர்ச்சி 4.6% ஆக சரிந்துள்ளதாகவும், 5 மடங்கு கடன் வாங்கி அதிமுக ஆட்சி நடத்த உள்ளது என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்

📕📘தமிழ்நாட்டைச் சீரழித்த முதல்வர் பழனிச்சாமி அரசின் வீழ்ச்சி எடப்பாடியில் இருந்து தொடங்குகிறது! 

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்" பயணத்தில் அதிக மனுக்கள் குவிந்த தொகுதி அதுதான்

தனக்கு வாக்களித்த மக்களையே கண்டுகொள்ளாத அவருக்கு கொள்ளையடிக்கவும், கொத்தடிமையாக இருக்கவும் மட்டுமே தெரியும்

திமுக தலைவர் ஸ்டாலின்

📕📘அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சுயாட்சி செய்யவும் தெரியாது, கூட்டாட்சித் தத்துவமும் புரியாது" - மு.க.ஸ்டாலின்

📕📘பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் தமிழகத்திலும் பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் முகக்கவசத்தை அணியவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தல்                 

📕📘வருகிற ஜூன் 21 வரை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு பிரிட்டன் அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் 

📕📘அமமுக உடன் கூட்டணி அமைக்க தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை. அதிமுக பேச்சுவார்த்தை அழைக்காத நிலையில் அமமுகவுடன் கூட்டணி இறுதி செய்ய முடிவு என தகவல்.

📕📘முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏப். 18ம் தேதி நடைபெறுகிறது

நேற்று முதல் மார்ச் 15 வரை ஆன்லைன் மூலம் முதுகலை நீட் தேர்வுக்கு விண்ணப்பம்.

📕📘இந்த ஆண்டின் BRICS உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த சீனா ஆதரவு 

மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருவார் என எதிர்பார்ப்பு.

📕📘இடைக்கால பட்ஜெட் தாக்கல் - திமுக எம்.எல்.ஏ துரை முருகன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் கடும் அமளி.

📕📘தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம்  குடும்பங்களுக்கு குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் மற்றும் குடும்ப தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் நிரந்தர இயலாமைக்கு 2 லட்சம் ரூபாயும் காப்பீட்டு தொகையாக வழங்கப்படும் 

- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

📕📘கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்கப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது 

- ஓ. பன்னீர்செல்வம்

📕📘2021-22ம் ஆண்டில் உயர்கல்வித்துறைக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு - ஓ.பி.எஸ்

📕📘சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு -செலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கு ரூ.1953.98 கோடி ஒதுக்கீடு

📕📘அத்திக்கடவு-அவினாசி திட்டம் வருகிற டிசம்பர் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்ப்பு -இடைக்கால பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல்

📕📘தமிழக வரலாற்றில் கடன் வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அதிமுக அரசுதான் - மு.க.ஸ்டாலின்

📕மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்.

திருப்பதியில் உள்ள SV Medical Science நிறுவன Dean ஆக உள்ள மங்கு, விரைவில் மதுரை எய்ம்ஸின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

📕📘கோவைக்கு 25ம் தேதி பிற்பகல் பிரதமர் மோடி வருகை முன்னிட்டு பொதுக்கூட்டம் மேடை மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அரசு நிகழ்ச்சி மற்றும் பாஜக பொதுக்கூட்டம் நிகழ்வுகளில் பங்குபெற வருகிறார் பிரதமர்

📕📘நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 2.02% ஆக இருக்கும்

வருவாய் 18% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. 

- நிதித்துறை செயலர் கிருஷ்ணன்

📕📘தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 25ம் தேதி முதல்  27ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும்.

- சபாநாயகர் தனபால்

📕📘தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் - நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்

📕📘புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த  நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை; குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு என தகவல்.

📕📘தே.மு.தி.க, பா.ம.க கூட்டணியில் எந்த முரண்பாடுகளும் இல்லை - ஜி.கே.மணி விளக்கம்

📕📘புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

📕📘புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க முயற்சி

கிரண்பேடிக்கும் தமிழிசைக்கும் வித்தியாசமில்லை

- நாராயணசாமி

📕📘கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள்  கையில் மெழுகுவர்த்தி ஏந்தி காத்திருப்பு போராட்டம். பணிநிரந்தரம் செய்வதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை அவர் பிறந்தநாளில் அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தல்.

📕📘GST வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வர GST கவுன்சிலுக்கு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

GST கவுன்சில் விரைவில் எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.

- மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். (ANI நேர்காணலில்)

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...