கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை...

 24 கேள்விகளுக்கு இணையதளத்தில் தினமும் பதில் அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது .

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது , 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து வருகிறது . பள்ளிக்கு வரும் மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் . வகுப்பறையில் சமூக இடைவெளி கடைபிடித்து , முகக்கவசம் உள்ளிட்ட அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . தற்போது , பள்ளி தலைமை ஆசிரியர்கள் EMIS ( 0.034 Version ) ஆப் பதிவிறக்கம் செய்து  EMIS Attendance app updated Version ஆப்பில் மாணவர்களுக்கு நன்மை தரும் சூழல் குறித்த 24 கேள்விகளுக்கு உரிய பதிலை அனைத்து வேலைநாட்களிலும் தவறாது பதிவு செய்ய வேண்டும் . 

தினமும் பள்ளி வேலை நாட்களில் மேற்கண்ட விவரங்களை பள்ளி கல்வி செயலரின் நேரடி கவனத்தின் கீழ் ,கண்காணிக்கப்படுவதால் , பதிவு செய்யாத பள்ளிகள் கண்டறிய நேரிட்டால் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரே அதற்கான முழு பொறுப்பாவார்.  எனவே மேற்கண்ட பணிகளை கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் . அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொறுப்பு ) , ஆசிரியர் , பயிற்றுனர்கள் அவரவர் குறுவள மையங்களுக்குட்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் தினமும் இப்பணியை 100 சதவீதம் முடித்துள்ளதை உறுதி செய்ய வலியுறுத்தப்படுகிறது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...