கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (15-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

புதுவிதமான இடத்திற்கு சென்று வருவீர்கள். தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


பரணி : வாய்ப்புகள் ஏற்படும்.


கிருத்திகை : தடைகள் அகலும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

தொழிலில் செல்வாக்கு உயரும். சுயதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடலில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணியில் அங்கீகாரம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். திருமண வரன்கள் கைகூடும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : செல்வாக்கு உயரும்.


ரோகிணி : ஆசைகள் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : இடர்பாடுகள் நீங்கும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். கவனக்குறைவால் பிறரிடம் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


திருவாதிரை : சாதகமான நாள்.


புனர்பூசம் : கவலைகள் குறையும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

வேலை தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழில் திறமைகள் வெளிப்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். நீர்வழி தொழில்களின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.


பூசம் : லாபம் உண்டாகும்.


ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

சுரங்கம் தொடர்பான பணியில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். மனதில் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு மறையும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் இறக்கமான சூழல் அமையும். மாணவர்கள் போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும்போது விழிப்புணர்வுடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : கவனம் தேவை.


பூரம் : பொறுமை வேண்டும்.


உத்திரம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

புத்திரர்களின் செயல்பாடுகளினால் பெருமை உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


அஸ்தம் : ஆதாயம் உண்டாகும்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். செயல்படும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். ஆன்மிக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : இழுபறிகள் அகலும்.


சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.


விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

தாய்வழி உறவுகளால் ஆதரவான சூழல் ஏற்படும். எடுத்த பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : ஆதரவான நாள்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

நண்பர்களின் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. செய்யும் செயல்களில் திருப்திகரமான சூழல் அமையும். பணியில் இருந்தவந்த மந்தத்தன்மை நீங்கும். உடன் பணிபுரியும் ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முடிவுகளால் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.


பூராடம் : திருப்திகரமான நாள்.


உத்திராடம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்தான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். முன்னேறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.


திருவோணம் : மனக்கசப்புகள் குறையும்.


அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தேவையற்ற செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். கலை சார்ந்த அறிவு மேம்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழிலை விரிவுப்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


சதயம் : அறிவு மேம்படும்.


பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 15, 2021


மாசி 03 - திங்கள்

உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இறைவழிபாடுகளால் மனம் தெளிவுப்பெறும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். மனதில் சுதந்திர மனப்பான்மை அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : அனுகூலமான நாள்.


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...