கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Circular லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Circular லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நேரில் வருகையில்லா முறையில் ஆவணப்பதிவு செய்தல் - பதிவுத்துறை தலைவரின் கூடுதல் தெளிவுரை நாள்:16-09-2026 வெளியீடு



நேரில் வருகையில்லா முறையில் ஆவணப்பதிவு செய்தல் (Presenceless Registration) - பதிவுத்துறை தலைவரின் கூடுதல் தெளிவுரை நாள்:16-09-2026 வெளியீடு


பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம்

சென்னை


சுற்றறிக்கை


ந.க.எண்.9644/சிஎஸ்1/2026 நாள்:16-09-26


ஐயா/அம்மையீர்,


பொருள்:


பதிவுத்துறை STAR 3.0 Anywhere Registration மனைப்பிரிவின் முதல் மனை, மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் விற்பனை உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (Deposit of Title Deeds) மற்றும் இரசீது ஆவணம் நேரில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில்(Presenceless Registration) பதிவு செய்தல் கூடுதல் தெளிவுரை வழங்குதல் - தொடர்பாக.


பார்வை:


1. பதிவுத்துறைத் தலைவர் கடித எண். 14210/சி1/2020. நாள்.23.09.2022 மற்றும் Tamil Nadu Online Registration Rules, 2022.


2. பதிவுத்துறைத் தலைவர் கடித எண். 6830/1/2020, நாள் : .15.09.2022.


3. பதிவுத்துறைத் தலைவர் கடித எண். 22482/1/2022, நாள் :  02.02.2023.


4. பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை :23225/1/2024, நாள் : 11.01.2025.


5. அரசாணை (நிலை) στσστ.69, வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் (J2) துறை. நாள் : 07.07.2026.


6. பதிவுத்துறைத் 6:17581/2013/2026, தலைவர் சுற்றறிக்கை நாள் : 18.08.2026.


7. மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களால் 07.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு.


8. அரசாணை (நிலை) எண்.129, வணிகவரி மற்றும் பதிவுத்துறை (J2) துறை, நாள் 11.09.2026.


9. பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை எண்:9644/1/2026, நாள் : 12.09.2026.


10. பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை எண்:18223/1/2013-4, நாள் : 13.11.2013. 


பார்வையில் கண்ட அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கை வழி நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு தொடர்பாக போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பதிவுத்துறை உயர் அலுவலர்கள், சார்பதிவாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், நில விற்பனையாளர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழ்க்கண்ட கூடுதல் தெளிவுரைகள் வழங்கப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Census 2027 Phase II Training : அட்டவணை அறிவிப்பு

 


Census 2027 Phase II Training : மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி அட்டவணை அறிவிப்பு :  மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை


2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2ஆம் கட்டம் (Population Enumeration): கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குப் பயிற்சி அறிவிப்பு


Census phase 2 கணக்கெடுப்பாளார் , மேற்பார்வையாளர் பயிற்சி 21.12.2026 முதல் 15.01. 2027 க்குள் வழங்கப்பட வேண்டும்.

பயிற்சி 3 நாட்கள்.



மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் மற்றும் ஆணையரின் சுற்றறிக்கை 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு



Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director


கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு 02.09.2026 முதல் தொடங்குகிறது - இணை இயக்குநரின் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Maths and Science Talent Test 2026 | Circular



கணிதத் திறன் தேர்வு மற்றும் அறிவியல் திறன் தேர்வு 2026 தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய சுற்றறிக்கை


Maths and Science Talent Test 2026 | Circular 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு பிற பணி (OD) அனுமதித்து தேனி CEO சுற்றறிக்கை

 


மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு பிற பணி (On Duty) அனுமதித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கை


Census OD


முதன்மைக் கல்வி அலுவலகம்,

தேனி:- 04.08.2026


சுற்றறிக்கை


அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை 01.08.2026 முதல் 31.08.2026 வரை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் முற்பகல் அல்லது பிற்பகல் (அரை நாள்) பிறப்பணியில் (OD) அனுமதி வழங்கி, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் ஆசிரியர்களை சுழற்சி முறையில் விடுவித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை எவ்வித தொய்வும் இன்றி மேற்கொள்ளவும், இதற்கென தனி இயக்கக பதிவேடு (Movement Register) பள்ளியளவில் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறித்து பராமரிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.



Census 2027 பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு?

 


Census 2027 பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்க வேண்டும்? - உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை


மக்கள் தொகை கணக்கெடுப்புப் Census 2027 பணியில் யாரையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

1. கர்ப்பிணிப் பெண்கள் 

2. கடுமையான நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 

3. கடுமையான மாற்றுத்திறனாளிகள் 

4. பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்கள் 

5. குறிப்பிட்ட சமூக / மத சமூகங்கள் மீது சார்புடையவர்கள்.

மத்திய அரசின் சுற்றறிக்கை Circular 19 Census 2027

☝️☝️☝️

பத்தி 7, பக்கம் 4...


 While choosing the Census personnel, adequate number of female enumerators and supervisors may be selected. However, pregnant ladies,persons with severe chronic ailments, persons with severe disabilities, persons below matriculate, persons biased towards specific social/ religious communities, etc. may be avoided to the extent possible as appointing them for field-work would be difficult/counter-productive.


மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​போதுமான எண்ணிக்கையில் பெண் கணக்கெடுப்பாளர்களும் மேற்பார்வையாளர்களும் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள், கடுமையான நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான மாற்றுத்திறனாளிகள், பத்தாம் வகுப்புக்குக் கீழ் தேர்ச்சி பெற்றவர்கள், குறிப்பிட்ட சமூக/மத சமூகங்கள் மீது சார்புடையவர்கள் போன்றோரை களப்பணிக்கு நியமிப்பது கடினமானதாகவும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்பதால், அவர்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



No.9/25/2026-CD(CEN)

Ministry of Home Affairs, Government of India

OFFICE OF THE REGISTRAR GENERAL, INDIA

Janganana Bhawan, Tower-A, Census Division,

2/A, Man Singh Road, New Delhi-110011.

Dated: April 20th, 2026

CENSUS OF INDIA 2027- CIRCULAR No.19


Subject: Preparation of District Census Plan.

As you are aware Census 2027 is the 16th Census in the series from 1872 and 8th Census since independence. The intention of conducting Census during the year 2027 has already been notified in the Gazette of India.

2. Population Census is the largest administrative and statistical exercise in the country.Like the previous Censuses, the Census 2027 is being conducted in two phases, namely Phase I-House Listing and Housing Census popularly known as HLO during six months from April to September, 2026 in a period of 30 days as per the convenience of the State Governments and UT administrations along with option of Self-enumeration of 15 days period just before the 30 days period of house-to-house houselisting work. This phase besides providing an unambiguous frame for the 2nd phase i.e. Population Enumeration,would also provide very useful data on housing conditions, amenities available to the households and assets possessed by them. Questions of the Phase I of the Census have been notified in January, 2026. Phase II-Population Enumeration (PE) will be conducted during February 2027 (UT of Ladakh and snow-bound non-synchronous areas of UT of Jammu and Kashmir and States of Uttarakhand and Himachal Pradesh, Phase II will be conducted during September 2026). In phase II, information on demographic, socio-economic, education, migration, fertility ete, will be collected from each individual.

3. To facilitate improvement in quality and faster release of Census data, a number of initiatives have been adopted for Census 2027 as mentioned below:

(a) Digital approach for data collection: The data collection in the Census 2027 is planned to be done by digital means. An enumerator has to collect and submit data directly through Mobile App, using her/ his smart phone and syne the same directly on census web server. In addition to this, an online provision for self-enumeration through Self Enumeration portal (SE portal) has been made for the households, who would like to fill the census schedule on their own. For this one has to login on the SE portal with his mobile no. and OTP for filling the requisite information on Census schedule.

(b) The Census Management & Monitoring System (CMMS) portal is being used for management and monitoring of various Census activities like allocation of work to Census functionaries including Enumerators and Supervisors, management of training for Census oficials, progress of work in the field by each enumerator, autogeneration of Census Records/Abstracts, etc.;

(c)The creation and demarcation of House Listing Blocks (HLBs) and formation of Supervisory Circles (SCs) will be carried out through HLB Creators (HLBC) web mapping applications.

(d) A Code Directory for all descriptive type questions will remain available in the mobile app.;



TRB - TNTET Paper I மற்றும் Paper - II தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள் - CEO சுற்றறிக்கை

 


 TRB - TNTET Paper I மற்றும் Paper - II தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள் - CEO சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



முதன்மைக் கல்வி அலுவலகம்

கரூர்


ந.க.எண்.3605/ஆ5/2026 , நாள். 01.07.2026


சுற்றறிக்கை

பொருள்:

பள்ளிக்கல்வித்துறை - கரூர் மாவட்டம் TRB-TNTET Paper I மற்றும் Paper - II தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள் - தொடர்பாக.


பார்வை


ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் அவர்களின் 23.06.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்.


எதிர்வரும் 04.07.2026 மற்றும் 05.07.2026 அன்று நடைபெற உள்ள TRB-TNTET Paper-I மற்றும் Paper II தேர்வுகள் எழுத உள்ள ஆசிரியர்களுக்கு மேற்காண் பார்வையில் கண்ட இணை இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் தெரிவிக்கப்படுகிறது.


எனவே, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியிலிருந்து மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ள ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகளை அவசியம் தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


1. ஆசிரியர்கள் தேர்வு வாரிய இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Hall Ticket-ஐ தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


2. Aadhar. Passport, PAN Card. Driving Licence இவற்றில் ஏதாவது ஒரு original அடையாள அட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


3. இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


4. இரண்டு BLACK BALL POINT- பேனாக்களை (கருப்பு மை பந்துமுனைப் பேனா) தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


5. காலை 08.30 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கீடு செய்த தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும்.


6. Hall Ticket-ல் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை நன்கு படித்து அதன்படி செயல்பட வேண்டும்.


7. OMR தாளில் எக்காரணம் கொண்டும் Whitener பயன்படுத்தக் கூடாது.


8. Hall Ticket- இல் உள்ள சரியான Roll Number- ஐ OMR தாளில் எழுத வேண்டும்.


9. Gate Closing Time காலை 9.30-க்குப் பிறகு செல்லும் தேர்வர்கள் எவருக்கும் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி கட்டாயம் கிடையாது.


எனவே. உரிய நேரத்திற்குள் அவசியம் சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


"தேர்வெழுதும் அனைவரும் வெற்றி பெற நல்வாழ்த்துகள்"


முதன்மைக் கல்வி அலுவலர்.

கரூர்


பெறுநர்:


1. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் (உரிய வழியாக)


2. தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்


அனைத்து வகைப் பள்ளிகள். கரூர் மாவட்டம்.


நகல்


1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) கரூர்.


2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கரூர்


3. மாவட்டக் கல்வி அலுவகர் (தனியார் பள்ளிகள்) கரூச்


4. உதவித் திட்ட அலுவலர். (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கரூர் மாவட்டம்.


5. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கரூர் மாவட்டம். நகல்


சென்னை-06, ஆசிரியர் தேர்வு வாரியம், இணை இயக்குநர் அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.


நகல்


கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.


TET Passed Teachers விவரங்கள் கோரி CEO சுற்றறிக்கை



ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET)  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விவரங்கள் கோரி CEO சுற்றறிக்கை


ந.க.எண்    3570 /அ3/2026, நாள் 10.06.2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,

அனைத்து அரசு /  நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப்  பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று (10.06.2026) இரு படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

1. அதில் Sec.Gr.Teacher / Spl.Tr.and PET Service Details என்ற படிவத்தில் தற்போது அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் (இசை,ஓவியம்,தையல்) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Passed Teachers only) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மட்டும் கலம் 1 முதல் 26 வரை கோரியுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 12..6.2026க்குள் ceotrichya3@gmail.com அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

2. அடுத்தப்படியாக இரண்டாம் படிவத்தில் தற்போது அரசு/நகராட்சி உநிப/மேநிப பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மட்டும் கலம் 1 முதல் 23 வரை கோரியுள்ள விவரங்களை பூரத்தி செய்து 13.6.2026 க்கு ceotrichya3@gmail.com அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

Note: TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் (TET Not qualified or Not Passed) விவரங்களை இப்படிவத்தில் கொண்டுவரவேண்டாம்.

மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு இப்படிவத்தில் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட நகல் மற்றும், சார்ந்த ஆசிரியரின் படிவத்தில் பூர்த்தி செய்துள்ள  விவரங்களுக்கு உரிய SR கருத்துரு நகல் ,TET தேர்ச்சி பெற்ற சான்றிதழ்    தங்கள் அலுவலகப் பிரிவு எழுத்தர்/தனி நபர்  மூலம் 12.06.2026 மாலை 5.00 மணிக்குள் எவ்வித தாமதமுமின்றி,  முதன்மைக் கல்வி அலுவலகம், A3 பிரிவு எழுத்தரிடம் நேரில் வந்து ஒப்படைத்திட தெரிவிக்கப்படுகிறது.





180 உடற்கல்வி ஆசிரியர்கள் SMC மூலம் நியமனம்



சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 180 உடற்கல்வி ஆசிரியர்கள் (PET) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை


க.து.ந.க.எண்.D1/ சிறப்பு/2025


பெருநகர சென்னை மாநகராட்சி,

கல்வித்துறை.

நாள். 14.05.2026


சுற்றறிக்கை


பொருள்:


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை சென்னை தொடக்க, நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக SMC உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்தல் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரை கோருதல் -தொடர்பாக.


பார்வை:


மாண்புமிகு மேயர் அவர்களின் 2026-2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பு எண். 2


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக அடிப்படையில் (ஜூன் முதல் மார்ச் வரை 10 மாதங்களுக்கு மட்டும்) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


வ.எண்     பள்ளிகள்     பணியிடங்கள்  கல்வித்தகுதி   சம்பளம்


1   சென்னை தொடக்கப்பள்ளிகள்     101   C.P.Ed/B.P.Ed    ரூ. 18,000


2     சென்னை நடுநிலைப்பள்ளிகள்      29     B.P.Ed/M.P.Ed    ரூ. 20,000


3 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்    50    B.P.Ed/M.P.Ed   ரூ. 25,000


மொத்தம்    180


எனவே, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களின் விவரங்களுடன் கூடிய பரிந்துரையை உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடம் உடனடியாக சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கல்வி அலுவலர்


பெறுநர்:


1 இணை ஆணையர்(கல்வி) அவர்களுக்கு பணிந்து சமர்பிக்கப்படுகிறது.


2 அனைத்து உதவி கல்வி அலுவலர்கள்


3. அனைத்து சென்னை தொடக்க நடுநிலை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்



தேர்தல் பயிற்சி வகுப்பில் (Election Class) ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள DEO Circular

 

 தேர்தல் பயிற்சி வகுப்பில் (Election Class) ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




தேர்தல் பயிற்சி வகுப்பு திண்டுக்கல் மாவட்டம் (Election class)


மாவட்டக் கல்வி அலுவலகம்

(தொடக்கக் கல்வி)

திண்டுக்கல்


சுற்றறிக்கை


ந.க.எண்.3451/அ1/2026 நாள். .04.2026


23.04.2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 28.03.2026 அன்று நடைபெற்ற வகுப்பில் சில ஆசிரியர்கள் காலதாமதமாக வகுப்பிற்கு சென்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் பெறப்பட்டுள்ளது. எனவே, 11.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தல் வகுப்பில், தேர்தல் பணி நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உரிய நேரத்தில் (9.30மு.ப முதல் 5.30.பி.ப வரை) கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.



TET உண்மைத் தன்மை - நுழைவுச் சீட்டு அவசியமில்லை - TRB தெளிவுரை கடிதம்

 

 

TET உண்மைத் தன்மை - நுழைவுச் சீட்டு அவசியமில்லை - TRB தெளிவுரை கடிதம்


TET - 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது -  உண்மைத் தன்மை குறித்த TRB தெளிவுரை கடிதம்.


TRB Clarification Regarding TET Genuineness


ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது உண்மைத் தன்மை குறித்து தெளிவுரை வழங்குதல் சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம்.


ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் உண்மைத் தன்மை தேர்வெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் வழங்குவது சார்ந்து கீழ்க்கண்ட செயல்முறைகள் ஏற்கனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


JACTTO GEO சார்பில் நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருவோருக்கான அவசர சுற்றறிக்கை

 

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருவோருக்கான அவசர சுற்றறிக்கை


Urgent circular for those attending the Thank You Conference to be held on behalf of JACTTO GEO to express their gratitude to the Honorable Chief Minister of Tamil Nadu.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இன்று (டிசம்பர் 11) விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது - தலைமைச் செயலாளர்

 


இன்று (டிசம்பர் 11) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


 CPS ஒழிப்பு இயக்கம் அமைப்பினர் இன்று (டிசம்பர் 11) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை


📕📘  *CPS ஒழிப்பு  இயக்கம்* சார்பில் *வியாழக்கிழமை  11.12.2025* அன்று *ஒரு நாள் வேலைநிறுத்தம்


📕📘 *ஜாக்டோ ஜியோ* சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற *சனிக்கிழமை (13.12.25)* அன்று உரிமை மீட்பு  உண்ணாவிரத  போராட்டம்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz






2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificate சமர்ப்பிக்க உத்தரவு

 

 

2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்று சமர்ப்பிக்க உத்தரவு


உண்மைத் தன்மை சான்று முக்கிய உத்தரவு - 2025 டிசம்பர்க்குள் அனைவரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் & D.T.Ed., சான்றிதழ்களின் உண்மைத்தன்மை Genuineness Certificate பெற‌வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




இன்று (நவம்பர் 18) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது - தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை


இன்று (நவம்பர் 18) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


 ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று (நவம்பர் 18) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz






> *ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்.*

1. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எம்.பி.முருகையன் கூற்றுப்படி, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

3. இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

4. அதேபோல, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ.18) முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:

6. சில அரசு ஊழியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீஸ் அளித்துள்ளன.

7. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்ட விதிகளின்படி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் உள்பட எந்த ஒரு வடிவில் போராட்டம் நடத்தினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

8. தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

9. மருத்துவக் காரணம் இன்றி விடுப்பு எடுத்தால் அல்லது போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

10. தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.



MOST IMMEDIATE

Human Resources Management (J) Department, Secretariat, Chennai-600 009.

Letter No.6499/J2/2025-2, dated 17.11.2025


From

Thiru. N. Muruganandam, I.A.S., Chief Secretary to Government.


To

All Additional Chief Secretaries / Principal Secretaries / Secretaries to Government,

Departments of Secretariat, Chennai - 600 009.

All Heads of Departments (Through Administrative Departments of Secretariat

All District Collectors.


Sir / Madam,

Sub : Service Associations - Proposed to palcipate in ’One day Strlke’ on 18.11.2025 (Tuesday) by certain recognised and unrecognized associations — Participation of State Government Employees / Teachers — Instructions — Issued.


Ref : Government Letter No.105654/K2/91-1, Personnel and Administrative Reforms Department, dated 18.12.1991.


I am directed to state that information has been received that certain recognised and unrecognized Associations have proposed to participate in ’One day Strike’ on 18.11.2025 (Tuesday) pressing certain demands.

1. In this regard, I am directed to invite your attention to the earlier instructions issued by the Government in the reference cited and to point out that a ’strike or threat of strike' or participation by Government Servants in strike or demonstration or any other form of agitation, affecting lhe normal Nnctioning of the Government offices. amounts to violation of rules 20, 22 and 22-A of the Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973.

2. I am, therefore, directed to instruct you to impress on the Government staff members of your department that they should not indulge in violation of the provisions of the Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973 lest disciplinary action will be taken against them. If any of the Government Servants have not attended office, consequent of fheir participation in the proposed ’One day Strike’ on 18.11.2025 (Tuesday) or any other day organised by recognized and unrecognized Service Associations of the Teachers and Government Employees, their period of absence has to be considered as unauthorized and they are not entitled to the pay and allowances on the basis of the principle *No Work - No Pay’, as per the instructions issued in the Government letter In the reference cited. The part time employees, those on daily wages and on consolidated pay, will be liable to bs discharged from service.

3. I am, therefore, directed to instruct that besides ensuring I:hat no Government Servant violates the Tamil Nadu Government Servants’ Conduct Rufes,1973, disciplinary action should also be taken promptly for unauthorized absence from duty by the employees. In thls connection, it Is also informed that application for ‘Ca9ual Leave' or any other leaye olher than medical leave shall not be allowed on the day of strike.

4. I am also instruct you to watch the position and report the facts about tote violation of the Tamil Nadu Government Servants' Conduct Rules,1973, in this regard by any of the Government Servants' in your department on 18.11.2025 (Tuesday) or any other day.

5. In this connection, all the Heads of Departments are instructed to send a report on the attendance position in respect of the staff working in the offices under their administrative control to the Government in Secretariat Department concerned, in the proforma given below and also through the Google spread sheet link for Heads of the Departments - htip://tiny.cc/osmu001 by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday). Further, the Departments of Secretariat are requested to confirm the Heads of Departments under your administrative control befbre sending the Google spread sheet link. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the email Id: parjsar@tn.gov.in by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday) without fail.

6. All the District Collectors are Instructed to send attendance particulars in respect of staff working in the Offices under their administrative control to Government through the Office of the Commissioner of Revenue Administration in the proforma given below and also through the Google spread sheet link for all Coflectorates - http./tiny.cc/rsmu001 by 10.15 a.m. of 18.11.2025 (Tuesday). A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15a.m. on GB.11.2025 (Tuesday) without fail.

7. The Secretariat departments are instructed to send the attendance deBils of Officers / StaW in their department and consolidated details in respect of Heads of tha Dapartmants, separately, in the proforma givan below and also through the Google spread sheet Ilnk for Secretariat - http://tiny.cc/ismu001 by 1 1.00 a.m. on 18.11.2025 (Tuesday) to the Human Resources Management {J) Department. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15 a.in. on 18.11.2025 (Tuesday) without fail.


Proforma



* Working strength is the actual personnel available as on date.

8. This shall be treated as ’Most Immediate’.



Yours faithfully,

for Chief Secretary to Government.




ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவு

 

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificateஐ 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றிதழை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



B.Ed., கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோருக்கு 6 மாத கால பயிற்சி : DEO சுற்றறிக்கை




B.Ed., கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோருக்கு 6 மாத கால பயிற்சி  : பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



B.Ed., கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு NIOS வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி - DEO சுற்றறிக்கை பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Kalanjiyam News * களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.