கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி வழங்குகிறது மின்சார வாரியம்...


 வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எடுத்த, 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்;

இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும். இதைத் தவிர்க்க வெளியூர் செல்வோர், வெளியூரில் வசிப்போர், தங்களுக்கான மின் கட்டணத்தை, உத்தேச அடிப்படையில், முன்கூட்டியே செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்படும் கட்டணத்திற்கு, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும், ஆண்டு வட்டியை, மின் வாரியம் வழங்குகிறது.அதன்படி, வரும் நிதியாண்டில், 2.70 சதவீதம் வட்டி வழங்க, மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது, அடுத்த மாதத்துடன் முடியும் நடப்பு நிதியாண்டிற்கு, 3.25 சதவீதம் என்றளவில் உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...