மின்சார வாரியத்தின் புதிய இணையதள முகவரி
www.tnpdcl.org
New website address of Tamilnadu Electricity Board
மின்சார வாரியத்தின் புதிய இணையதள முகவரி
www.tnpdcl.org
New website address of Tamilnadu Electricity Board
சட்டப்பேரவை நிகழ்வுகள்:
மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நிதித்துறையின் அனுமதியை கோரி உள்ளோம். அந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில், தேவைக்கேற்ப காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு மின் கட்டணத் திருத்தம் - யார் யாருக்கு எவ்வளவு ரூபாய் உயரும்? - மின்சார வாரியம் தகவல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மின்சார வாரியம் EB தொடர்பான புகார்களை வீட்டில் இருந்தே தெரிவிக்க மின்சார வாரியம் வலைதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது...
தமிழ்நாடு முழுவதும் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின்சாரம் வழங்கி வருகிறது.
அதுமட்டுமன்றி மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களையும் கண்காணித்து வருகிறது.
இதுவரை நேரில் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மின்சார வாரியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மின்சார கட்டணம், புதிய மின்சார இணைப்பு, ஏற்கனவே இருக்கும் மின் இணைப்பின் பெயரை மாற்றுவது, தற்காலிக மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு என அனைத்து வகையான சேவைகளையும் பொதுமக்கள் இந்த வலைதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பது, அதற்கான தொகையை செலுத்துவது மட்டுமன்றி நமது விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதையும் இந்த மூலம் அறிந்துக்கொள்ளலாம், எனவே மின்சார வாரியம் குறித்த தகவல்கள் அல்லது புகார் அளிக்க https://nsc.tnebltd.gov.in/nsconline/index.xhtml லிங்கை கிளிக் செய்து வலைத்தளத்தை பயன்படுத்தலாம்.
மாதம் ரூ.8000 ஊதியத்தில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மின்சார வாரியத்தில் தொழில் பழகுநர் பணி...
TANGEDCO - HRD - Engagement of Diploma Engineers as Apprentices in TANGEDCO / TANTRANSCO for the year 2023-24-Administrative approval - Accorded..
TANGEDCO - HRD - 2023-24ஆம் ஆண்டிற்கான TANGEDCO / TANTRANSCO இல் டிப்ளோமா பொறியாளர்களை பயிற்சியாளர்களாக ஈடுபடுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஒப்புக்கொள்ளப்பட்டது...
>>> TANGEDCO - நிர்வாக ஒப்புதல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் - Introduction of electricity bill payment facility through SMS...
🚨 மின்கட்டணம் செலுத்த அவகாசம்
💡மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜன.2ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்
💡 மின்கட்டணத்துடன் 18-ம் தேதி அபராதத் தொகை செலுத்தியிருந்தால் அடுத்த மாத மின் கட்டணத்துடன் சரி செய்யப்படும்
💡 இச்சலுகை வீடு, வணிக நிறுவனம், தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நுறுவனங்களுக்கும் பொருந்தும்
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
மழைக்காலங்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் (Electricity safety measures to advise their school students during rainy season)...
💡 மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள். மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்!
💡 சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்!
💡 தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்!
💡 ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க கூடாது!
💡 மின்வயர் இணைப்புகளைத் திறந்த நிலையில் இல்லாமல் (Insulation Tape) இன்சுலேசன் டேப் சுற்றி வெளிப்புற மின் காப்பு செய்ய வேண்டும்!
💡 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்!
💡 மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில் உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்… என எடுத்துரைத்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.
மின்வெட்டு, புதிய மின் இணைப்புகள், பில்லிங் சிக்கல்கள், பழைய மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைப் பதிவு செய்ய மின்னகம் ஹெல்ப்லைன் எண் : 9498794987 (Minnagam Helpline Number : 9498794987 to register various complaints like power cut, new power connections, billing issues, replacement of old poles etc.)...
உங்களது வீடுகளிலோ.. கடைகளிலோ.. இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் Fuse போய் விடும். அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும். அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....?
பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும்.. அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்...
அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்...
இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்...
தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் 9498794987 என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும்...
தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்...
அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும். அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள்...
இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்... இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை...
மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : TN EB CUSTOMER CARE : 9498794987
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) நுகர்வோரின் பல்வேறு மின்சார புகார்களைப் பதிவு செய்ய 'மின்னகம்' என்ற சேவை அழைப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது.
1912க்கு பதிலாக 9498794987 என்ற பிரத்யேக ஹெல்ப்லைனை TANGEDCO அறிமுகப்படுத்தியுள்ளது, இது புதிய சேவை எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இதில் மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோர் மின்வெட்டு, புதிய மின் இணைப்புகள், பில்லிங் சிக்கல்கள், பழைய மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைப் பதிவு செய்யலாம்.
மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள். முன்பு மின்தடை குறித்து மட்டுமே நுகர்வோர் புகார் அளிக்க முடியும். பிரத்யேக சேவை அழைப்பு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அண்ணாசாலையில் உள்ள TANGEDCO தலைமையகத்தில். மூன்று ஷிப்டுகளில் 24 மணி நேரமும் செயல்படும் சேவை அழைப்பு மையத்தில் 195 டெலிபோன் ஆபரேட்டர்களும், ஒவ்வொரு ஷிப்டிலும் 65 ஆபரேட்டர்கள் அழைப்புகளை நிர்வகிப்பார்கள் என்று ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. CC-MAC கணினிமயமாக்கப்பட்ட நெட்வொர்க்கில் பணிபுரியும் தானியங்கி அழைப்பு மையம், வாட்ஸ்அப் மூலம் புகார் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவலை அனுப்பும், மேலும் புகார்கள் சரி செய்யப்பட்ட பிறகு நுகர்வோருக்கு குறுந்தகவல் சேவை (SMS) மூலம் திருத்தம் குறித்து தெரிவிக்கப்படும்.
The Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) has launched 'Minnagam', a service call centre to register various electricity complaints by the consumers.
Tangedco has introduced a dedicated helpline bearing 9498794987 replacing 1912, which has been integrated with the new service number, wherein consumers throughout the State could register various complaints including power failure, new electricity connections, billing issues, replacement of old electricity poles, and any other issues related to electricity. Previously consumers could give complaints only regarding power disruptions.
The dedicated service call centre was inaugurated by Chief Minister M.K. Stalin at Tangedco's headquarters on Anna Salai recently.
A press release said the service call centre functioning round-the-clock in three shifts would have 195 telephone operators with each shift having 65 operators to manage the calls.
The automated call centre working on the CC-MAC computerised network would send information to the local officials concerned once a complaint gets registered through WhatsApp and after the complaints are rectified the consumer would be informed of the rectification through a Short Messaging Service (SMS).
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மின்மாற்றிகளில் மீட்டர் பொருத்தும் திட்டம் (For the first time in India, a project to install meters on transformers in Tamil Nadu)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தற்போது பரவி வரும் மோசடி செய்திகளைத் தவிர்க்க நுகர்வோருக்கு மின்சார வாரியம் அறிவுரை (Advising Consumers to avoid the fraudulent messages in circulation - TANGEDCO - If u get a SMS "Dear Consumer Your Electricity Connection Will Be Disconnected By Today Night At 09:30PM Because Of Last Pending Bill Kindly Contact: xxxxxxxxxx" Be Alert, its SPAM SMShing. IGNORE,DONT Reply or Contact or send OTP to given mobile)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வலைதள முகவரி (Website address to check if Aadhaar number is linked with Electricity Board connection number)...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம் (New website to link Aadhaar with electricity connection)...
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த பணிக்காக மின் வாரியம் கூடுதலாக தனி இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆதார் எண்ணை இணைக்க மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
இதுதவிர www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் இணைக்கலாம்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.
இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.
1. மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?
ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு நீங்களே நேரில் சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.
2. இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?
Step 1 : ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவும்.
Step 2 : உங்கள் மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட பிறகு, உங்களின் ஆதார் கார்டையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.
Step 3 : நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும். உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதையடுத்து ஒப்புகை ரசீது வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
3. நான் வாடகை வீட்டில் உள்ளேன். என் ஆதாரை நான் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?
வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ளவரே பதிவு செய்துகொள்ள முடியும்.
4. யாரெல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?
வீடு, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
5. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?
இல்லை. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.
6. வாடகைதாரர் மாறும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?
வாடகைதாரர் மாறும்போது, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைக்கலாம்.
7. நான் 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?
உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும். அதனால், எந்தப் பாதிப்பும் இல்லை.
8. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?
ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை; ஆனால் மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
9. ஆதார் எண்ணை இணைத்தால்தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?
ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க அதிக நுகர்வோர் முயற்சித்ததால், சர்வர் முடங்கியது. இதையடுத்து, 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
10. என் தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர் இறந்துவிட்டார். நான் எப்படி ஆதாரை இணைப்பது?
மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், யார் பெயரில் மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். உங்களுடைய பெயரில் நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால், உங்களுடைய ஆதார் கார்டை பதிவேற்றம் செய்தால் போதும்.
11. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?
கட்டாயம் ரத்து செய்யப்படபடாது. அப்படி யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
12. ஆதாரை எவ்வளவு நாளில் இணைக்க வேண்டும்?
ஆதாரை இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், கட்டாயம் இணைக்க வேண்டும்.
13. எங்களிடம் இணையதள வசதி இல்லை. நான் எப்படி இணைப்பது?
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.
சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% சதவீதம் குறைப்பு - நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை - செய்தி வெளியீடு எண்: 1978, நாள்: 09-11-2022 (10% percentage reduction in electricity charges for small, micro and medium enterprises - Tamil Nadu Government action in response to the request of the enterprises - Press Release No: 1978, Date: 09-11-2022)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ள புதிய மின்சார கட்டண உயர்வு...
தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருந்தது. இதன்காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது.
புதிய மின் கட்டணம் எவ்வளவு?
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் கடன் பாக்கி எவ்வளவு?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை தொகை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் பேசினார். அப்போது, “தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
மின் கட்டணங்களில் மாற்றம்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்துள்ளார். பயன்படுத்தும் யூனிட் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியது:
தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம். இருந்தாலும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
முழு விவரம்:
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 - 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.298 கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.
“ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு” என்ற திட்டம் அமல்படுத்தப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கெனவே கடும் கடன் சுமையில் உள்ள மின்சார வாரியம், மேலும் சிரமத்தை சந்திக்கும். ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு உத்தேச பட்டியல் அளிக்கப்பட்டு, அவர்களது ஒப்புதலுக்குப் பிறகே கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27 முதல் ரூ.565 வரை உயரும் மின் கட்டணம் உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த மின்சார கட்டணம் எப்படி, எவ்வாறு உயர்த்தப்படவுள்ளது என்பதன் முழு விவரம்:
தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம் ) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலை இல்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதியான நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள்.
குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு முதலியவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
2 மாதங்களுக்கு 101-200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.27.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.72.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.297.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 600 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.155 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 700 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.395 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.565 உயர்த்த பரிசீலனை
முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம்
எனினும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது
கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ₹12,647 கோடி உயர்ந்துள்ளது - மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது
42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி
200 யூனிட் வரை மின் உபயோகிப்பாளர்களுக்கு கூடுதலாக ரூ.27.50 செலுத்த வேண்டியிருக்கும். - மின்சாரத்துறை அமைச்சர்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது.
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன - அமைச்சர் செந்தில்பாலாஜி.
100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும்
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம்.
மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை - அமைச்சர் செந்தில்பாலாஜி.
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம்.
கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்.
ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டம்.
குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி.
முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம்
எனினும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டுக்கு எந்த மாற்றமும் இல்லை; 200 வரை பயன்படுத்துபவர்களுக்கு ₹27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம்...
மாதம் 300- 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் ₹147.50 அதிகரிக்க பரிசீலனை - அமைச்சர் செந்தில் பாலாஜி
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2025 - School Morning Prayer Activities 76வது குடியரசு தின வாழ்த்துகள்... திருக்குறள்: பால்: ...