கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கட்டணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன அலைபேசி கட்டணம் ஜூலை 3 முதல் உயர்கிறது - 12% முதல் 25% வரை உயர்த்துவதாக அறிவிப்பு - ரூ.2999 திட்டம் ரூ.3599 ஆக உயர்வு...


 ரிலையன்ஸ் ஜியோ நிறுவன அலைபேசி கட்டணம் ஜூலை 3 முதல் உயர்கிறது - 12% முதல் 25% வரை உயர்த்துவதாக அறிவிப்பு - ரூ.2999 திட்டம் ரூ.3599 ஆக உயர்வு...



>>> Click Here to Download Reliance Jio Tariff from July 3, 2024...



செல்போன் கட்டணத்தை உயர்த்தியது Jio நிறுவனம்

* நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12-25 % உயர்த்தியது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்

* ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189 ஆக அதிகரித்துள்ளது ஜியோ நிறுவனம்



*

ஜுலை 3 ஆம் தேதி முதல் அமல்...


ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயர்கிறது


செல்போன் கட்டணத்தை 12% முதல் 25% வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிப்பு


ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.189 ஆகவும்; ரூ.399 கட்டணம் ரூ.449 ஆகவும் அதிகரிப்பு; 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349 ஆக அதிகரிப்பு


புதிய கட்டண உயர்வு ஜூலை 3ஆம் தேதி முதல் அமலாவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Note:

- Unlimited 5G data will be available on all 2GB/day and above plans.

The new plans wil be made effective on 3rd July 2024 and can be opted from all existing touchpoints and channels.


NEW SERVICES:

Building on Jio's core principle of leveraging the power of technology to deliver the best value and services to its users, Jio Platforms Limited is introducing two new applications:

1. JioSafe - Quantum-secure communication app for calling, messaging, file transfer and more (priced at Rs 199 per month)

2. JioTranslate - Al-powered multi-lingual communication app for translating voice call, voice message, text and image (priced at Rs 99 per month).

Jio users will get both these applications (worth Rs 298/month) absolutely free for a year.


01.04.2024 முதல் உயர்த்தப்படவுள்ள SBI Debit Card வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் விவரம்...

 


01.04.2024 முதல் உயர்த்தப்படவுள்ள எஸ்.பி.ஐ. டெபிட் கார்டு வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் விவரம்...


SBI - REVISION IN ANNUAL MAINTAINANCE CHARGES RELATED TO DEBIT CARDS: CHANGES PROPOSED FROM 01.04.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) - தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 01-07-2023 முதல் மாற்றியமைக்கப்பட்ட நுகர்வோரால் செலுத்தப்பட வேண்டிய மின் கட்டண விவரம் (Revised tariff rates as in the TNERC order No. SMT No. 6 of 2023, Dated 30-06 2023 - Tamil Nadu Generation of Electricity and Distribution Corporation - Tamil Nadu Electricity Regulatory Commission modified with effect from 01-07-2023 details of electricity charges payable by consumers)...


>>> தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) - தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 01-07-2023 முதல் மாற்றியமைக்கப்பட்ட நுகர்வோரால் செலுத்தப்பட வேண்டிய மின் கட்டண விவரம் (Revised tariff rates as in the TNERC order No. SMT No. 6 of 2023, Dated 30-06 2023 - Tamil Nadu Generation of Electricity and Distribution Corporation - Tamil Nadu Electricity Regulatory Commission modified with effect from 01-07-2023 details of electricity charges payable by consumers)...


Tariff details


>>> Tariff order...


>>>  Non Tariff related Miscellaneous Charges (LT&HT)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் / மாநிலத் தேர்வு வாரியங்களில் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய செலுத்த வேண்டிய கட்டணங்கள் - வங்கி வரைவோலை எடுக்க / விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரங்கள் (Genuiness Certificate Fees in All Indian Universities / State Examination Boards & Address Details to Apply & Bank Demand Draft)...

 

 

>>> அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் / மாநிலத் தேர்வு வாரியங்களில் கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிய செலுத்த வேண்டிய கட்டணங்கள் -  வங்கி வரைவோலை எடுக்க / விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரங்கள் (Genuiness Certificate Fees in All Indian Universities / State Examination Boards & Address Details to Apply & Bank Demand Draft)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

10.09.2022 முதல் நடைமுறைக்கு வரும் TNEB - திருத்தப்பட்ட கட்டண விகிதங்கள் (TANGEDCO - Revised Tariff Rates with Effect from 10.09.2022)...

 


>>> 10.09.2022 முதல் நடைமுறைக்கு வரும் TNEB - திருத்தப்பட்ட கட்டண விகிதங்கள் (TNEB - Revised Tariff Rates with Effect from 10.09.2022)...


தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ள புதிய மின்சார கட்டண உயர்வு...


தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருந்தது. இதன்காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது. 


புதிய மின் கட்டணம் எவ்வளவு?

தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி  முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல்  300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மின் பயன்பாடுகூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு):
200 யூனிட்55 ரூபாய்
300 யூனிட்145 ரூபாய்
400 யூனிட்295 ரூபாய்
500 யூனிட்310 ரூபாய்
600 யூனிட்550 ரூபாய்
700 யூனிட்595 ரூபாய்
800 யூனிட்790 ரூபாய்
900 யூனிட்1,130 ரூபாய்


இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் கடன் பாக்கி எவ்வளவு?


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை தொகை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் பேசினார். அப்போது, “தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.



அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்குதல் - அரசாணை (நிலை) எண்:221, நாள்: 15-11-2021 வெளியீடு (Government pays all fees to students enrolled in engineering colleges on the basis of 7.5% reservation for studying in government schools - G.O. (Ms) No: 221, Date: 15-11-2021 Published)...



 அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்குதல் - அரசாணை (நிலை) எண்:221, நாள்: 15-11-2021 வெளியீடு (Government pays all fees to students enrolled in engineering colleges on the basis of 7.5% reservation for studying in government schools - G.O. (Ms) No: 221, Date: 15-11-2021 Published)...


>>> அரசாணை (நிலை) எண்:221, நாள்: 15-11-2021...


"அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு("The Government of Tamilnadu will accept all the tuition, accommodation and consultation fees of students studying in Government schools who fall under the 7.5% reservation!" - Announcement by Chief Minister MK Stalin) >>> செய்தி வெளியீடு எண்: 747, நாள்: 20-09-2021...

 


"அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு("The Government of Tamilnadu will accept all the tuition, accommodation and consultation fees of students studying in Government schools who fall under the 7.5% reservation!" - Announcement by Chief Minister MK Stalin)...


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டில் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை ஆணைகளை முதல்வர் வழங்கினார்...




நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் – உயர்நீதிமன்றம்...

 


* பள்ளி கட்டணம் - கொரோனாவால் வருவாய் இழந்தவர்களிடம் 75%


* 6 தவணைகளில் செலுத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


 நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு இல்லாத அரசு ஊழியர்களிடம் 85 சதவீத கட்டணமும், வருவாய் இழந்து தவித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தையும் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  தொற்றால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தமிழகத்தில் அரசு எடுத்த  நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றால்  பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.


 இந்நிலையில், ஊரடங்கு காரணமாக  மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து  கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை முறையே 40, 35 சதவீதம்  என்று இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.  இந்த  வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு  வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் சேவியர் அருள்ராஜ், சிலம்பண்ணன், இ.விஜய் ஆனந்த், எம்.புருஷோத்தமன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அரசு வக்கீல் ஆ.செல்வேந்திரன், சிபிஎஸ்இ தரப்பில் நாகராஜன் ஆஜராகினர்.


அப்போது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘பள்ளிகள் 85 சதவீத  கட்டணத்தை வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டணம்  செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண  சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்றார்.  தமிழக  அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘ஐகோர்ட்  பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடப்பு (2021-22) கல்வியாண்டிலும்  2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க  அனுமதியளித்து ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது. தமிழகத்தை பொறுத்தவரை  கட்டண நிர்ணய குழு அளித்த பரிந்துரைகளையே அரசு பரிசீலிக்கும். கட்டண நிர்ணய  குழுவில் உள்ள காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்’ என்று  உறுதியளித்தார். அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு  நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என்று வாதிட்டார். 


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு அடையாத ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வணிகம் செய்பவர்களிடம் கடந்த 2019-20ம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 85 சதவீதத்தை தனியார் சுயநிதி பள்ளிகள் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.


கடைசி தவணையை பெற்றோர்கள் 2022 பிப்ரவரி 1ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களிடம் 2019-20ம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும். இந்த தவணையின் கடைசி தவணை 2022 பிப்ரவரி 1ம் தேதிக்கு முன்பு செலுத்தப்பட வேண்டும். வேலை இழப்பு போன்ற காரணங்களால் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கட்டண சலுகை குறித்து கோரிக்கை வைக்கலாம். 2020-21ம் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்களிடம் அந்த தொகையை தவணை அடிப்படையில் பள்ளிகள் வசூலித்துக்கொள்ளலாம்.


ஒட்டுமொத்த கட்டணத்தையும் ஏற்கனவே செலுத்தியவர்கள் அந்த கட்டணத்தை திரும்ப கோர முடியாது. கட்டணத்தை கட்டாத மாணவர்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகங்கள் தடுக்க கூடாது. கட்டணத்தை காரணம் காட்டி அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றோ, தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்றோ தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் பள்ளிகள் மாணவர்களுக்கு கூடுதல் கட்டண சலுகை வழங்குவதற்காக எந்த முறையையும் கையாளலாம்.


பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் கல்வி கட்டணம் தொடர்பாக ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுக்கலாம். மாணவர்களை எந்த சூழ்நிலையிலும் 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. இதை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் அந்த மாணவர்களுக்கு அரசு பள்ளியிலோ, மாநகராட்சி பள்ளியிலோ, ஊராட்சி பள்ளியிலோ இடம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணத்தை மாநில அரசு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.


சிபிஎஸ்இ பள்ளிகள் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் வசூல் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் 4 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். கட்டண நிர்ணயத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் பள்ளி நிர்வாகங்கள் கட்டண நிர்ணய குழுவை அணுகி தீர்வு பெறலாம்.  பள்ளியிலிருந்து விலக விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த மாணவர்கள் புதிதாக சேரவுள்ள பள்ளிகள் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் கட்டாயம் என்று கூறாமல் சேர்க்கை வழங்க வேண்டும். பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழுவில் காலியாக உள்ள பணியாளர் இடங்களை நிரப்பி குழு முழு அளவில் செயல்பட மாநில அரசு 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகள் குறித்து பள்ளிகளுக்கு தெரியப்படுத்துவதற்கான புதிய சுற்றறிக்கையை தமிழக அரசு 2 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

கட்டணத்தை கட்டாத மாணவர்களை நேரடியாகவோ,  ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பதையோ பள்ளி நிர்வாகங்கள்  தடுக்க கூடாது. கட்டணத்தை காரணம் காட்டி அந்த மாணவர்களை தேர்வு எழுத  அனுமதிக்கவில்லை என்றோ, தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி  வைத்துள்ளனர் என்றோ தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வித்துறை  அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முழுவதிலும் உள்ள B.Ed., கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்த அறிவிப்பு...



 தமிழகம் முழுவதிலும் உள்ள B.Ed கல்லூரிகளில் 30 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் கல்லூரிகளில் 26ஆம் தேதி முதல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கடந்த வாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் இயங்கி வரும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது என தெரிவித்தார்.


அதற்கான விண்ணப்பங்கள் 26-02-2021 முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார். அதேபோல பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை நடக்க உள்ளதை அடுத்து இன்று முதல் அதற்கும் விண்ணப்பங்கள் பெறப்படுவது தொடங்கியுள்ளது. இந்த வகை மாணவர்கள் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


மேலும் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையிலும் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் B.Ed கல்லூரிகளில் கட்டணமாக ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்க கூடாது என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில கல்லூரிகளில் அதையும் மீறி சில அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இது குறித்து ஆலோசித்து ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) கீழ் ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் குறித்த அரசாணை (G.O.Ms.No.:104, Dated: 09-07-2021) வெளியீடு...மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1674/இ1/2021, நாள்: 12-07-2021 மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 71/இ1/2021, நாள்: 15-07-2021...



◆இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) கீழ் ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் குறித்த அரசாணை (G.O.Ms.No.:104, Dated: 09-07-2021) வெளியீடு...

 ◆மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1674/இ1/2021, நாள்: 12-07-2021 மற்றும் 

 ◆மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 71/இ1/2021, நாள்: 15-07-2021...




>>> Click here to Download G.O.Ms.No.:104, Dated: 09-07-2021 & Matriculation Director Proceedings...


அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்?- ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு...



 அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.


அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது விண்ணப்ப கட்டணமாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கலாம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு ரூ.100 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, அரசுப்பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆய்வு செய்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.


தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையர்...

 


தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், கடந்த ஆண்டு முதல் கல்வி டிவி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயில அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


இதேபோன்று, தனியார் பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வருகை புரிந்து, மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. ஏனெனில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.


இந்த சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதால், 70 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. ஆனால், பல தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். 35% கட்டணத்தை பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் வசூல் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது...

 ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது...


அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.


தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும் பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம்.


இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.


வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.





தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்...

 தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...



 தமிழ்நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் -19 சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 251, நாள்: 22-05-2021...




தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி...

 தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கணக்கெடுத்து குறித்துக் கொள்வார். வீட்டில் வைத்திருக்கும் அட்டையிலும் எழுதிக் கொடுப்பார். அதனடிப்படையில் நுகர்வோர் மின்கட்டணத்தை நேராக அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்துவார்கள்.


 


மே மாதம் கணக்கீடு செய்ய அதிகாரிகள் வரவில்லை என்றால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், ஒருவேளை 2019 மே மாதத்திற்குப் பிறகு மின் இணைப்பு பெற்றிருந்தால் கடந்த மார்ச் மாதத்திற்கான தொகையை கட்டலாம் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்திருந்தது.


 


இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம். மின்மீட்டரில் உள்ள அளவை போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, ஆன்லைனில் பணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...