கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC புதிய அறிவிப்பு – PSTM சான்றிதழ் பற்றிய விளக்கம்...


 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்த விளக்கம் மற்றும் PSTM சான்றிதழ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


TNPSC அறிவிப்பு:

TNPSC தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள சட்ட விதிகள், அரசாணை, தேர்வாணைய நடைமுறைகள் என பலவற்றில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் ஜனவரி 30ம் தேதி முதல் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது பணியில் இருந்து கொண்டு TNPSC தேர்வெழுதும் தேர்வர்கள் ‘தடையின்மை சான்றிதழை’ சமர்ப்பிக்க அல்லது பதிவேற்றம் செய்ய தவறினால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


மாநிலத்தின் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்களுக்கான விதிகளின் கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் வழியில் படித்ததற்கான (PSTM – Person Studied in Tamil Medium) உரிமை கோரும் விண்ணப்பதாரர் அதற்கான சான்று ஆவணமாக, நிர்ணயம் செய்யப்பட்ட கல்வித்தகுதி வரை அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் மட்டுமே பயின்றதற்கான சான்றிதழை கட்டாயமாக பதிவேற்றம் / சமர்ப்பிக்க வேண்டும்.


உதாரணமாக ஒரு படிப்புக்கு பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியாக இருப்பின், விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். ஒரு படிப்புக்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக இருந்தால், விண்ணப்பதாரர் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு என மூன்றும் தமிழ் வழியில் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

>>> PSTM சான்றிதழ் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Nobel Prizeஐ வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை

  நோபல் பரிசை வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை Venezuela warns of action if Maria Corina goes to Norw...