பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து தனியார் மயமாக்கப்படும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பொதுத்துறை வங்கி தனியார் மயமாக்கப்படும் எனவும், எல்.ஐ.சி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பங்குச் சந்தைகள் மூலம் எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு வசம் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவினை பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய வாகனங்களை திரும்பப் பெறும் கொள்கை அறிமுகம் செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கை மூலம் பழைய மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டை தடுத்து, அதன் மூலம் காற்று மாசை குறைக்க இந்த புதிய திட்டம் வழிவகுக்கும் என கூறியுள்ளார்.
மேலும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 74% ஆக உயர்த்தப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.