கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 14.03.2021(ஞாயிறு)...

 


🌹அன்பும் மகிழ்ச்சியும் விலை மதிப்பில்லாதது.

அதை கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் மட்டுமே அதன் மதிப்பு தெரியும்.!

🌹🌹யாரிடமும் எப்போதும் எதையும் எதிர் பார்க்க வேண்டாம்.ஏனென்றால்

எதிர்பார்ப்புகள் அதிக வலியை கொடுக்கும்.!!

🌹🌹🌹உண்மையான அன்புக்கு போலி உறவும்,

போலியான அன்பிற்கு உண்மையான உறவும்

கிடைப்பதால்தான் 

அன்பு இன்றும் யாரோ ஒருவரிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறது.

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒திமுக தேர்தல் அறிக்கை, 2021 வெளியிடப்பட்டுள்ளது.


👉த.நா. அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்திலும், கடந்த ஜனவரி மதுரை த.நா.அரசு ஊழியர் சங்க  மாநாட்டிலும் திமுக தலைவர் உறுதியளித்தவாறு புதிய ஓய்வூதியத்திட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👉மேலும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், 

👉உயர்கல்விக்கு பயில்வோருக்கு அண்ணா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, கடந்த ஆட்சியில் ரத்துசெய்யப்பட்ட ஊக்க ஊதியம் மீண்டும் வழங்கப்படும், என்றும்  

👉பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர்கள் குடும்ப நல நிதி ரூ.5 இலட்சமாக உயர்த்தப்படும்,  

👉இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சினை தீர்க்கப்படும்,

👉தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்க நிர்வாகத்தீர்ப்பாயம் (Administrative Tribunal) அமைக்கப்படும்,

👉பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள் மீது 17ஆ பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆசிரியருக்கு பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்க ஆவண செய்யப்படும்.

👉அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம், கூடுதல் பலனளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒G.O. 2D. NO. 24 Dt: February 26, 2021 - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சட்ட்மன்ற விதி 110 – இன் கீழான அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு மேலன 80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ.14,73,80,605-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியீடு.

🍒🍒ஆகஸ்ட் 1-ஆம் தேதி நீட் தேர்வு -  11 மொழிகளில் ஆகஸ்ட் 1-ஆம்  தேதி நீட் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

🍒🍒+2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 

16.04.2021 முதல் 23.04.2021 வரை நடத்தப்பட உள்ளது. -அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

🍒🍒நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் BE மற்றும் B.Tech பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை -  அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில்  (AICTE) அறிவிப்பு.

🍒🍒கணினி ஆசிரியர்கள் பிரச்னை தீர்க்க 3 ஆண்டுக்கு பின் குழு அமைக்க தமிழக அரசுக்கு  மத்திய அரசு ஆலோசனை.

🍒🍒புதுச்சேரியில் 1ம் முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் : 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அறிவிப்பு.

🍒🍒10% இட ஒதுக்கீடு அமல்படுத்த கூடாது- உயர்நீதிமன்றம் உத்தரவு.  தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முன்னேறிய வகுப்புக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அண்ணாபல்கலைக்கழகம் அமல்படுத்த கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு.

🍒🍒பாட வல்லுநர் தொகுப்பு உருவாக்குதல் - ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பி வைக்கக் கோரி SCERT இணை இயக்குநர் உத்தரவு . ஒரு வகுப்பிற்கு ஒரு பாடத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் பெயர் பட்டியல் அனுப்ப உத்தரவு.

🍒🍒இன்று தேர்தல் பயிற்சிக்கு செல்பவர்கள் தங்களுடைய Voter id xerox மற்றும் தேர்தல் பயிற்சி ஆணையின் xerox கொண்டு செல்லவும்.

🍒🍒இது வெறும் தேர்தல் அறிக்கையல்ல தமிழகத்தை திருத்தி எழுதுவதற்கான தீர்வுப்பெட்டகம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம்-மகளிருக்கு  இலவசப்பேருந்து பயணம்- சிலிண்டருக்கு ரூ.100 மானியம்- தமிழகத்து வேலைகள் தமிழக இளைஞருக்கே-பள்ளிகளில் பால் வழங்கப்படும்- -கல்விக்கடன் ரத்து.. இப்படி எழுச்சிமிகு வாக்குறுதிகளை தாங்கி வந்துள்ளது கழகத்தின் தேர்தல் அறிக்கை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை தான் தேர்தலில் கதாநாயகனாக இருக்கும். இம்முறை தலைவர் 

மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்துள்ள ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியும் தனித்தனி கதாநாயகன்களாக வெளிப்பட்டுள்ளன. இது வெறும் தேர்தல் அறிக்கையல்ல தமிழகத்தை திருத்தி எழுதுவதற்கான தீர்வுப்பெட்டகம். நன்றி எனவும் கூறினார்.

🍒🍒தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

🍒🍒உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்

அண்ணா கூறியதை மேற்கோள் காட்டி சீட் கிடைக்காத திமுகவினருக்கு அக்கட்சியினருக்கு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

🍒🍒தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க தந்திரம், சதி, சூழ்ச்சிகளை செய்வார்கள் 

அதிகார பலம் கொண்டவர்கள் திமுகவை எளிதாக வெற்றி பெற விடமாட்டார்கள். 

தேர்தலில் தந்திரங்கள், சதிகள், சூழ்ச்சிகளை முறியடிக்க திமுகவினரின் உழைப்பு, ஒத்துழைப்பு தேவை.

தமிழகம் முழுவதும் கலைஞரே வேட்பாளர் 

விருப்ப மனு அளித்த அனைவரையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என கடலளவு ஆசை இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே 

தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.

🍒🍒நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால்

கல்வியும் மருத்துவமும் இலவசமாக

வழங்கப்படும்; சேலத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சீமான் அறிவிப்பு

🍒🍒அமெரிக்க சுதந்திர தினமான வரும் ஜூலை 4-ஆம் தேதிக்குள் கரோனா நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

🍒🍒சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

🍒🍒திபெத்தின் பிரம்மபுத்ரா நதியில் சர்ச்சைக்குரிய நீர்மின் திட்டம் உள்பட 60 திட்டங்களுக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

🍒🍒பொது சுகாதார நெறிமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் கனட மருத்துவர் போனி தெரிவித்துள்ளார்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹திமுக தேர்தல் அறிக்கையில் முக்கியமானவை


👉மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்

👉இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் படி பணி நியமனம்

👉சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழயர்களாக நியமனம் செய்யப்படுவர் 

- திமுக அறிக்கை

👉ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

👉அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதிக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும்

👉நியாய விலைக் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை

- திமுக தேர்தல் அறிக்கை

👉வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்

👉பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்

👉உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்

👉கூட்டுறவு நகை கடன் 5பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி

- திமுக தேர்தல் அறிக்கை

👉பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும். 

திமுகதேர்தல்அறிக்கை2021

👉அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப் ( TAB) வழங்கப்படும்.

-திமுக தேர்தல் அறிக்கை.

👉ஒவ்வொரு மாதம் மின் கணக்கீடு செய்யப்படுமென மின்கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம். ஏற்கனவே 2016 திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்

👉பெட்ரோல் விலை லிட்டருக்கு ரு.5ம், டீசல் விலை ரூ.4ம் குறைக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

👉கூட்டுறவு வங்களில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் 

👉மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கூட்டுறவுக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்

-திமுக தேர்தல் அறிக்கை

👉மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ.24000 ஆக உயர்த்தப்படும் 

-மு.க.ஸ்டாலின்

👉அனைத்து ரேஷன் (அரிசி) அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்படும்.

- திமுக தேர்தல் அறிக்கை

👉100 நாள் வேலை 150 நாளாக 

உயர்த்தப்படும்  

- திமுக தேர்தல் 

அறிக்கை

👉திருச்சி, சேலம், கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்படும்

மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்

குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்

-திமுக தேர்தல் அறிக்கை                          

👉கரூர், ஒசூர், வேலூர், 

ராமநாதபுரத்தில் ஏர்போர்ட் அமைக்கப்படும் 

- திமுக தேர்தல் அறிக்கை

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns