கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 27.03.2021 (சனி)...இன்றைய செய்திகள் தொகுப்பு... 27.03.2021 (சனி)...

 


🌹வாய் தவறி விழும் பேச்சுக்கள்.கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.

யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவோம்.!

🌹🌹மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள்.

தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.!!

🌹🌹🌹தன்னுடைய செயலும்,தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியென்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதியை மட்டுமே் நமது ஆயுதமாக வைத்துக் கொள்ளுவோம்.அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.சிந்தித்து செயல்படுவோம். இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகி போகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑April 30 க்குள் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த இயலாது. அரசு தரப்பில் மேல் முறையீடு.

👉அரசின் மேல் முறையீட்டை ஏற்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை councelling-க்கு தடை விதிப்பு.

⛑⛑பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு, வரும், 29ல் துவங்கி, ஏப்., 1ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே மாதம் பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில், பருவத்தேர்வு நடத்தப்படுகிறது 

⛑⛑தொடக்கப்பள்ளி இயக்குநகரத்திற்கு கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்வது குறித்த விவரங்களை ‘சாகன்’ தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இது குறித்த வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுகிறதா என உறுதி செய்யப்பட வேண்டும்”  என உத்தரவிட்டுள்ளார் இயக்குநர். 

⛑⛑ஜே.இ.இ (முதன்மை) 2021 மார்ச் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீடு;13 பேர் 100%

⛑⛑தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

⛑⛑யூபிஎஸ்சி தேர்வில் அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்ற 86 பேரில் 19 பேர் முதன்மைத்தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஆளுமைத்தேர்வில் வெற்றிப்பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது

⛑⛑பெற்றோரின் அச்சத்தைப் போக்க பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை; பள்ளி அளவில் தேர்வு நடத்தலாம்: ஆசிரியர் அமைப்புகள்  யோசனை 

⛑⛑கொரோனா அதிகரித்து வரும் சூழலில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே தனிநபர் நகர்வு, போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

⛑⛑வாக்குப்பதிவுக்கு முந்தைய / பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு.

⛑⛑வாக்குச் சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணி - பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

⛑⛑EMIS இணையதளத்தில் உடல் நலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Health and IT Details) சார்ந்த விவரங்களை பதிவு செய்தல் - கள்ளக்குறிச்சி  முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑⛑தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை

⛑⛑அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள்& அறிவுரைகள் வலியுறுத்துதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் உத்தரவு வெளியீடு.

⛑⛑காங்கிரஸ் மூத்த தலைவர் ப்ரியங்கா, இன்று கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொள்வார் எனச் சொல்லப்பட்ட நிலையில், வருகை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

⛑⛑இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த  இனவிரோத பாஜகவையும் அதனைத் தூக்கிச் சுமந்து வரும் அதிமுகவையும் தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போம்

-சீமான் அறிக்கை

⛑⛑சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது

முதியவர்களிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறப்படுகிறது - 15 தபால் ஓட்டுக்களுக்கு ஒரு குழு நியமனம்

80 வயது மேல் உள்ள முதியவர்களிடம் தபால் 

வாக்கு பெறப்படுகிறது.

⛑⛑அன்றாட கொரோனா பாதிப்பு 2000 வரை தொட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் மாஸ்க் அணிவதை தவிர்க்க கூடாது 

- ராதாகிருஷ்ணன்

⛑⛑திண்டுக்கல் பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவிற்கு, நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி 

- கோயில் நிர்வாகம்

⛑⛑DOUBLE MUTANT கொரோனா இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை 

- ராதாகிருஷ்ணன்.

⛑⛑கொரோனா தொற்று அதிகரித்தால் எங்கும் இயல்பாக சென்று வர முடியாது. 

- பேரிடர் மேலாண்மை ஆணையம்

⛑⛑கரூர் மாவட்டம் குளித்தலை கடை வீதியில் திமுகதலைவர் ஸ்டாலின் நேற்று மதியம் நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

⛑⛑கோவை சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளார் ஜெயராம் புகைப்படம் பதித்த டி.சர்ட், பிளாஸ்டிக் இலை சின்னம், விளம்பரம் பதாகைகள் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்ததை அடுத்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

⛑⛑தமிழகத்தில் 105 தொகுதிகளில் கூடுதல் செலவினங்கள், பணப்பட்டுவாடா,மற்றும் முறைகேடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது

- தலைமைத் தேர்தல் அதிகாரி

⛑⛑எதிர்க்கட்சியினரை மிரட்ட, செயல்பாடுகளை முடக்க ITயை மத்திய அரசு ஏவுகிறது. 

ஆளுங்கட்சி அணியில் உள்ளவர்களை வருமான வரித்துறை கண்டு கொள்ளாதது ஏன்?

ஐடி ரெய்டு மூலம் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது

-CPIM அறிக்கை

⛑⛑ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு; வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தம்.

⛑⛑புதுச்சேரியில் வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜகவினர் பிரச்சாரம் செய்ததாக  அளித்த புகார் மீதான விசாரணை  முடியும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி?

⛑⛑பங்களாதேஷின் இளம் சாதனையாளர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார்.

⛑⛑கரூர் பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உட்பட கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பரப்புரை ஆற்றினார்.

⛑⛑சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.

⛑⛑2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி.

⛑⛑திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார்

⛑⛑பிரதமர் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது என்று மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

👉பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி குறித்து  விமர்சனம் செய்துள்ளார். மம்தா கூறுகையில், தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது. அவரது பிரதமர் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது. சில நேரங்களில் அவர் தன்னை சுவாமி விவேகானந்தர் என்று அழைப்பார். சில சமயங்களில் தனது சொந்த பெயருக்குப் தனது பெயருக்குப் பிறகு மைதானத்தின் பெயர் மாற்றுவார். அவரது மூளையில் ஏதோ தவறு இருக்கிறது.

அவரது ஸ்க்ரூ தளர்வானது போல் தெரிகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

⛑⛑புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நான்தான் முதல்வர் என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் தேவையில்லை என  ரங்கசாமி கூறியுள்ளார். கூட்டணி வெற்றி பெற்றால் நான் முதல்வராவேன் என்று நமசிவாயம் பேசி வருவதற்கு மாறாக ரங்கசாமி பேசியுள்ளார்.

⛑⛑எதற்குமே பயன்படாத ஆட்சியை விரட்டி அடிக்கிற நாள் தான் ஏப்ரல் 6-ம் தேதி என கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வேலை இழந்தவர்களுக்கு பணி வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

⛑⛑அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி விமர்ச்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

இதை எல்லோருமே மனதில் வைத்துக் கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

⛑⛑தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.                                   👉தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவு

⛑⛑தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

⛑⛑அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் 12 வயதுக்குட்பட்டோருக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. 

ஃபைசர் மற்றும் ஜெர்மியின் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் புதிய தடுப்பூசி முதற்கட்ட கள பரிசோதனையை தொடங்கியது. 

புதிய தடுப்பூசியின் சாதக முடிவுகளுக்குப் பின் உலகம் முழுவதும் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஃபைசர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

⛑⛑குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சு வலி காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதி.

⛑⛑வருமானவரி துறை சோதனை ஜனநாயகத்தின் மீது சந்தேகத்தை எழச் செய்கிறது

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்; 

-இந்து குழுமத்தின் முன்னாள் தலைவர் என்.ராம்

⛑⛑அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு ரூ. 10 அபராதம் விதித்து நீதிபதிகள் கண்டனம்

டெண்டர் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு எதிராக வீடியோ வெளியிட தடை கோரி வேலுமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

அரசியல் உள்நோக்கத்துடன் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எஸ்.பி. வேலுமணி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.

⛑⛑தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட முடியாது: ஐகோர்ட் மறுப்பு.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாக புதிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது.

⛑⛑தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட 2- 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்.

⛑⛑NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு.

⛑⛑திமுக வேட்பாளர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு வேண்டுமென்றே திமுக நிர்வாகிகள் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக டெல்லியில் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் புகார் மனு.

⛑⛑கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய தடை இல்லை!: நேசநாடுகளுக்கு தடுப்பூசி தொடர்ந்து வழங்கப்படும்..மத்திய அரசு விளக்கம்.          

⛑⛑முகக்கவசம் அணியாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது; கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...