Postal Ballots filling Method (sample) ...
தபால்வாக்கு பதிவு செய்யும் முறை வழிமுறை
💐💐💐💐💐💐💐💐💐
தங்களுக்கு வழங்கப்பட்ட தபால்
ஓட்டைப் பிரித்தால்
*கவர்-A,
*கவர்-B,
*உறுதிமொழிப் படிவம்(படிவம்-17)
ஆகிய மூன்று இருக்கும்.
1.உறுதி மொழிப்படிவத்தை (படிவம்-17) பூர்த்தி செய்து கையொப்பம் இட்டு, வாக்கு பதிவிடும் மையத்தில் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் சான்றொப்பம் ( Attestation) பெறவேண்டும்.
2. *கவர் A ன் வெளியே* வாக்குச்சீட்டு வரிசை எண் எழுத வேண்டும்.(எழுதப்பட்டு இருக்கலாம்)
*3.கவர்-A ல் உள்ள வாக்குச் சீட்டை எடுத்து* வாக்குச்சீட்டில் உரிய சின்னத்தில் *பால்பைன்ட் பேனாவில் டிக்✔️ செய்யவேண்டும்.*
*4. வாக்குச் சீட்டை மட்டும்* கவர் Aல் வைத்து ஒட்ட வேண்டும்.
*5. கவர் B யில்,* உறுதிமொழி படிவம் (படிவம்17), கவர் A ஆகிய இரண்டையும் வைத்து ஒட்டி *கவருக்கு வெளியே உங்கள் கையொப்பம் இடவேண்டும்*
6. தங்கள் சட்டமன்றத்திற்கு என வைக்கப்பட்ட பெட்டியில் ஒட்டி வைத்த *கவர் B யை போட வேண்டும்.*
*நமது வாக்கு நமது உரிமை*
தபால் வாக்கு போடும்போது பெரும்பாலானோர் கவர் A-யில் தொடர் எண்ணில் அவர்களது வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணை எழுதி விடுகின்றனர். இது தவறு...
நமக்கு கொடுக்கப்பட்ட (வாக்குச் சீட்டில் பின்புறம் உள்ள நான்கு இலக்க எண்ணைத்தான் எழுத வேண்டும். )
>>> தபால் வாக்குச்சீட்டு நிரப்பும் முறை (மாதிரி)...