கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊக்க ஊதிய உயர்வுக்கான நிதித்துறை ஒப்புதல் எப்போது கிடைக்கும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு...


கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதிக்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அல்லது முன் ஊதிய உயர்வு கிடையாது என அரசு பணியாளர் துறை அரசாணை (அரசாணை எண்.37 நாள்: 10.03.2020) மூலம் அறிவித்தது.


அதேசமயம் 10-3-2020 க்கு முன் உயர்கல்வி தேர்ச்சி அல்லது துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்று நிர்வாக காரணங்கள் அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கையினால் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள்  இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நிதித் துறை ஒப்புதல் பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெற்று கொள்ளலாம் ( அரசாணை எண்:116 நாள்:15-10-2020) என அரசு அறிவித்திருந்தது. இதன்காரணமாக கல்வித் துறையில் கடந்த நவம்பர் மாதம்  சுற்றறிக்கை அனுப்பி 10-3-2020 க்கு முன் உயர் கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுள்ளவர்கள்  பட்டியல் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெறப்பட்டு நிதித்துறை ஒப்புதல் பெற அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.


ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கு இம்மாதம்  31ஆம் தேதியே கடைசி நாளாகும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும்,


 இதுவரை நிதித் துறை ஒப்புதல் பட்டியல் கிடைக்கப் பெறாததாலும் எப்போது நிதித்துறை ஒப்புதல் கிடைக்கும் என ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...