கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆலோசனை - விரைவில் அறிவிப்பு...?

 

தேர்தல் பயிற்சியால் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கை - தமிழக அரசு தீவிர ஆலோசனை...


தமிழகத்தில் கொரோனா நெருக்கடிக்கு பின்னர் உரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட ஓராண்டு மாணவர்கள் வீட்டிலேயே இருந்து கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சோர்வுற்று கிடந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு புதிய உற்சாகத்தை அளித்தது. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.


ஆண்டு இறுதித் தேர்விற்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதாவது, 9, 10, 11ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே 12ஆம் வகுப்பிற்கு மட்டும் தான் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் 9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


இந்த சூழலில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியானது. அதன்படி, மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 


மேலும் வாரத்தில் 6 நாட்கள் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆலோசித்து வருகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...