கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நிதித்துறை ஒப்புதல் கிடைக்குமா? - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு...

நிதித்துறை ஒப்புதல் அளிக்க, இம்மாத இறுதி வரை மட்டுமே அவகாசம் உள்ளதால், ஊக்க ஊதியம் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு, உயர் கல்வி கற்ற ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் உயர்கல்வி படித்தால், ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என, கடந்தாண்டு, மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், அரசாணை வெளியிடுவதற்கு முன், உயர்கல்வி படித்தவர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற தமிழக அரசு, ஊக்க ஊதியம் பெற தகுதியுள்ளோர், நிதித்துறை ஒப்புதல் பெற்று, பணிப்பலன் அனுபவிக்கலாம் என, கடந்தாண்டு, அக்., மாதம் அறிவித்தது. அதில், மார்ச் 31க்குள், நிதித்துறை ஒப்புதல் பெற வேண்டுமென அவகாசம் அளித்தது. உடனே, ஊக்கத்தொகை பெற தகுதியுள்ளோர் பட்டியல் திரட்டப்பட்டது. கோவை மாவட்டத்தில், 450க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தகுதி பெற்றிருந்தனர். நடப்பாண்டு நிதியாண்டு முடிய இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. தற்போது வரை, நிதித்துறை ஒப்புதல் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வேல்ராஜ் கூறுகையில்,''நிதித்துறை ஒப்புதல் பெறுவதற்கான அவகாசம் இம்மாத இறுதியில் முடிகிறது. தேர்தல் ஆயத்த பணி நடக்கும் இச்சமயத்தில், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்,'' என்றார்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...