கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 10.04.2021 (சனி)...

 


🌹விட்டுக் கொடுப்பதற்கும் 

விட்டுச் செல்வதற்கும் 

ஒரே ஒரு வித்தயாசம்தான்

உறவுகளை இழந்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள் 

உறவுகளே தேவையில்லை என்று நினைப்பவர்கள் விட்டுச் செல்கிறார்கள்.!

🌹🌹உயிர் இருக்கு ஆனால் நிம்மதி இல்லை,

வாழ்க்கை இருக்கு ஆனால் அர்த்தம் இல்லை.!!

🌹🌹🌹எவ்வளவு தான் உறவுகளுக்காக நாம் அனுசரித்து வாழ்ந்தாலும் சில தருணங்களில் நாம் நமக்காக வாழ்ந்திருக்கலாம் என்ற விரக்தியை நம் உறவுகளே நமக்கு புகுத்திவிடுகிறார்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘கொரானா தொற்று பாதிக்கப்பட்ட  அரசு ஊழியர் கொரானா+  எனில் அவர் குணமாகும் வரையிலான நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பாகும் என்பதற்கான அரசாணை...

📕📘ஆன்லைன் கல்வியில் சாதனை: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு.

📕📘12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 16 முதல் செய்முறைத் தேர்வு தொடக்கம் : தேர்வுகள் துறை ஆணை வெளியீடு

📕📘தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான தேர்வில் 98.5 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில், மறு தேர்வு நடத்தக்கோரி தாக்கலான மனுவுக்கு பள்ளிக்கல்வி செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📕📘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டில் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு  (ஏப்ரல் 8-ம் தேதி) தொடங்கியுள்ளது. இதற்கு கே.வி. இணையதளத்தில் உள்ள சேர்க்கை விதிமுறைகளைப் படித்துவிட்டு, பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம்.

📕📘10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் விருப்பம் - நாளிதழ் செய்தி

📕📘பிளஸ் 2 மாணவர்களுக்கு,நேற்று முதல் ஆய்வக பயிற்சி வகுப்புகள் துவங்கின.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 3ல் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன; மே, 21 வரை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

📕📘மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வு 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியம் 10, 12 வகுப்புக்கான அனைத்து பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை சிபிஎஸ்அகாடெமிக் cbseacademic.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

📕📘அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் - நாளிதழ் செய்தி

📕📘இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் விரும்பிய மதத்திற்கு மாற உரிமை உண்டு.

கட்டாய மதமாற்றத்திற்கு தடைகோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து.

📕📘இதய நோயாளிகளில் 30% நீரிழிவு பிரச்சினையுள்ளவர்கள்: ஆய்வில் தகவல்.                                                                    

📕📘இன்று நடக்கிறது 'நாட்டா' தேர்வு                                                                                  

 📕📘போக்குவரத்து ஆவணங்களை ஜூன் 30 வரை புதுப்பிக்கலாம்.

📕📘ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை அந்தந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா - தமிழக அரசு

📕📘கொரோனாவால் மனச்சோர்வு, மறதி நோய் ஆபத்து" - எச்சரிக்கும் நிபுணர்கள்.

📕📘12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என தகவல்.

📕📘3 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்பாடு பகுதி என ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

6 பேருக்கு தொற்று இருந்தால் பேனரும் வைக்கப்படும்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

📕📘இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் மறைவு.

99 வயதான பிலிப், உடல் நலக்குறைவால் 

உயிரிழப்பு.

வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக, ராணி எலிசபெத் தகவல்.

📕📘சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை கடைகள் திங்கட்கிழமை வரை வழக்கம் போல் செயல்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

டி.ஆர்.ஓ.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, உள்ளிருப்பு போராட்டத்தை வியாபாரிகள் வாபஸ் பெற்றனர். திங்கட்கிழமை மீண்டும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்

📕📘நான் வங்கத்து பெண் புலி ; 

பாஜகவுக்கு வளைந்து கொடுக்கமாட்டேன் 

மம்தா பானர்ஜி

📕📘நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை  ஒன்பது கோடியை தாண்டியுள்ளது.

📕📘41 மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும்.

நடப்பு ஆண்டில், UG படிப்புகளுக்கு மட்டுமே பொது நுழைவுத் தேர்வு.

PG, Ph.D., படிப்புகளில் சேர தனித்தனியாகவே எழுத வேண்டும்.

உயர்தர திறனறித் தேர்வாக 3 மணி நேரம் நடத்தப்படும்.

📕📘சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் FASTag முறை  இருக்க வேண்டும் 

-உயர்நீதிமன்றம்

📕📘தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜுவ்ரஞ்சன், டிஜிபி திரிபாதி, உள்ளிட்ட தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் திடீரென நேற்று காலை டெல்லி பயணம்                                                                                       

 📕📘ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட மக்களுக்கு நேற்று முதல் அனுமதி.

📕📘கோவையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் 

- கோவை மாநகராட்சி

📕📘அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

சூரப்பா நாளை பணி ஓய்வு பெறும் நிலையில், அடுத்த 15 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்படும்.

சூரப்பா எங்கு சென்றாலும், விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும்.

-விசாரணை ஆணையம் தகவல்.

📕📘தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்.

📕📘சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு.

📕📘அரக்கோணம் இரட்டை கொலை, தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு.

காவல்துறை விசாரணை நேர்மையாகவும், நடுநிலையாகவும் இருக்கும் .குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் உரிய தண்டனை பெற்று தரப்படும் 

-ஐஜி சங்கர்

📕📘கொரனா பரவலை தடுக்க விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி அவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை நாள் ஒன்றுக்கு பத்து லட்ச ரூபாய் இருக்க வேண்டும் என்ற இலக்கையும் நிர்ணயித்துள்ளது.

📕📘சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் தலா ₹500 அபராதம் 

- சென்னை மாநகராட்சி

📕📘கொரோனா காரணமாக அரசின் கட்டுப்பாடுகளால், மண்டபம் புக்கிங் செய்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கிறார்கள், கல்யாண மண்டபங்களை சார்ந்து பணிபுரியும் 20 லட்சம் பேர் வருவாய் இழப்பால் பாதிக்கும் சூழ்நிலை

- அனைத்து கல்யாண மண்டபங்கள் உரிமையாளர் சங்கம்

📕📘தமிழகத்தில்  வன்னியர் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

📕📘அரக்கோணம் அருகே தேர்தல் மோதல் இருவரது கொலையில் முடிந்திருப்பது வேதனை அளிக்கிறது.

புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை நிலைநாட்டிட காவல்துறைத் தலைவர் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

📕📘கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📕📘கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை சரிசெய்து, தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வலியுறுத்தி ராகுல்காந்தி எம்.பி பிரதமருக்குக் கடிதம்.

📕📘தற்போதய கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்

- தமிழக அரசு

📕📘சென்னையில் 600-க்கும் மேற்பட்ட பகுதிகளை கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

📕📘உத்தரகாண்டில் உள்ள 51 கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பு.

- ஆளும் மாநில பாஜக அரசு அதிரடி அறிவிப்பு.

📕📘புதுச்சேரியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் 

- துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு.

📕📘டெல்லியில் அனைத்து பள்ளிகளையும் மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவு.

கொரோனா தொற்று அதிகரிப்பால் டெல்லி அரசு நடவடிக்கை.

📕📘அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு என்.எஸ்.சந்தோஷ் குமார் புதிய துணைவேந்தராக நியமனம்.

கால்நடை பல்கலை., காந்திகிராம் பல்கலை., துணைவேந்தர் நியமனத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் ஓர் நியமனம்.

-ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு.

📕📘தமிழகத்தில் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு

- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

📕📘திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை விற்பனை கிடையாது.

சில்லறை விற்பனை கடைகள் ஜி கார்னர் பகுதிக்கு மாற்றம் 

வியாபாரிகள்,  பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் 

-திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...