கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவு...

 டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரையில் கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 7,437 நபர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக இரவு நேர ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிறகு எதற்கும் யாரும் வெளியே நடமாடக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் காவல்துறையினர் இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக கண்காணித்து 10 மணிக்கு மேல்  பயணங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக காலவரையின்றி மூடுவதாக தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை பதிவிட்டுள்ள அவர்; தொடர்ச்சியாக தலைநகரில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக கல்வியை வேண்டுமென்றால் பயிற்சி அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...