கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 112, நாள்: 16-01-2022 (Holidays for 10th, 11th and 12th Standard students till January 31 due to the spread of Corona epidemic - Government of Tamil Nadu Press Release)...
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 112, நாள்: 16-01-2022 (Holidays for 10th, 11th and 12th Standard students till January 31 due to the spread of Corona epidemic - Government of Tamil Nadu Press Release)...
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு (25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள்) - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி ( 9 days Half yearly holiday for Schools - from Saturday 25.12.2021 to 02.01.2022 Sunday - confirmed by the Minister of School Education in Nellai review meeting)...
25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி ( 9 days Half yearly holiday for Schools - from Saturday 25.12.2021 to 02.01.2022 Sunday - confirmed by the Minister of School Education in Nellai review meeting)...
தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.25) முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் பள்ளி கட்டிடம் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான பள்ளியை இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை அமைச்சர் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “நாளை மறுநாள் முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரையாண்டு விடுமுறை இல்லை - டிசம்பர் 20 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை திருப்புதல் தேர்வு(No Half Yearly Examinations Holiday - Revision Exam announced from 20th to 30th December)...
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஒன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் பருவமழை பாதிப்பால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் பாடத்திட்டத்தை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டம் நடத்த அவகாசம் தரும் வகையில், இந்தாண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பள்ளிகல்வித்துறை வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளன. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பரவும் தகவலால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு என்பது மிகவும் காலதாமதமாக தொடங்கப்பட்டது. குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து சற்று தாமதமாக எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுழற்சி முறையில் படிப்படியாக அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட்டன. திங்கள் முதல் சனி வரை ஆறு நாட்களுக்கு பள்ளிகள் வேலைநாட்களாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாகவும் பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை கூட நடத்தி முடிக்க முடியாத நிலைதான் தற்போது அனைத்து பள்ளிகளிலும் இருக்கிறது.
எனவே இந்த பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டியதன் காரணமாகவும் ஏற்கனவே இந்த ஆண்டு, காலாண்டு அரையாண்டு தேர்வு நடத்தப்படாததன் காரணமாக அரையாண்டு தேர்வு விடுமுறையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது
வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக அரையாண்டு தேர்வு விடுமுறை என்பது தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும்.
இந்த அரையாண்டு விடுமுறைக்கு மாணவர்கள் காத்திருந்தனர். வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையுடன் இணைந்து, 10 நாள் வரை அரையாண்டு தேர்வு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், நடப்பு கல்வியாண்டில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சனிக்கிழமைகளில் வருவதால் அன்று மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பரவும் தகவலால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை - பள்ளிக்கல்வித் துறை
💥 மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை...
💥மே இறுதி வாரத்தில் பள்ளிக்கு வருகை புரிந்து அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து அறிவிப்பு தனியே வெளியாகும்...
💥ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பெற்றோரின் அலைபேசி வாட்ஸ் அப் மற்றும் பிற டிஜிட்டல் வழிகளில் மாணவர்களுக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்...
- பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 0063/ பிடி1/ இ1/ 2021, நாள்: 28-04-2021...
>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 0063/ பிடி1/ இ1/ 2021, நாள்: 28-04-2021...
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் பணி - கல்வித் துறை அதிகாரிகள் தகவல் - ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் பணி...
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கொரோனா பரவலால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன . மேலும் தவிர்த்த பிற வகுப்புகள் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன நோய் பரவல் சூழல் சரியான பின்னர் +2வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செய்முறை தேர்வுகள் முடிந்த பின் மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆசிரியர்கள் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்நிலையில் தோற்று வராமல் தீவிரம் கருதி விடுமுறை வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சுழற்சி முறையில் பணி இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக துறை செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனவே அரசு தரப்பில் உரிய அறிவிப்பு வெளியாகும் வரை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட இதர பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் நோய் பாதிப்பில் உள்ளவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலகிப் பெற்றுக் கொள்ளலாம் அதே சமயம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவு...
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரையில் கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 7,437 நபர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு நேர ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிறகு எதற்கும் யாரும் வெளியே நடமாடக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் காவல்துறையினர் இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக கண்காணித்து 10 மணிக்கு மேல் பயணங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக காலவரையின்றி மூடுவதாக தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை பதிவிட்டுள்ள அவர்; தொடர்ச்சியாக தலைநகரில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக கல்வியை வேண்டுமென்றால் பயிற்சி அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
9,10,11- ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை? கல்வித்துறை விளக்கம்...
தமிழகத்தில் 9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடா்ந்து நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்து மாதங்களுக்கும் மேல் மூடப்பட்டிருந்த அரசு, தனியாா் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டு, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிளஸ் 2 வகுப்பைத் தவிா்த்து பிற வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்களுக்கான வகுப்புகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் கற்றல்-கற்பித்தல் பணிகளை வழக்கம்போல் மேற்கொண்டு வருகின்றனா். 9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை.
இது குறித்து பரவும் தகவல்களை மாணவா்கள், பெற்றோா் நம்ப வேண்டாம். இந்த வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடப்பகுதிகளை திறம்பட நடத்துவது அவசியம். அதனால் பள்ளிகளில் வகுப்புகள் தொடா்ந்து நடைபெறும் என்றனா்.
அரசு உதவிபெறும் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - மேலும் அதிகரிக்க வாய்ப்பு...
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனாவால் மேலும் 36 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாபேட்டை மேல்நிலைப் பள்ளியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 20 மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 36 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை மேற்கொண்ட 200 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அவரை அடுத்து அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ ஆய்வாளர்கள், அம்மாப்பேட்டை ரெட் கிராஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதையடுத்து பள்ளி இருக்கும் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 20 பேரில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 4 பேர் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே அரசுப்பள்ளியில் மேலும் 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று - 7 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு...
மன்னார்குடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகள் 5 பேருக்கு கடந்த 6-ம் தேதி கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு வந்து சென்ற இந்த மாணவிகள் அனைவரும் சிதிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, பள்ளியில் பயிலும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 300 பேருக்கு கடந்த 8-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேலும் 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள்ளது நேற்று தெரியவந்தது.
இதையடுத்து, 11 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால், அப்பள்ளியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
27-01-2025 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் குறள் எண்:956 அதிகாரம...