கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - மேஷம்

பிலவ வருடம் 2021-2022

தனக்கு பிடித்த விதத்தில் சுதந்திரமாக செயல்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசியில் சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்


இரண்டில் செவ்வாயும், ராகுவும்


எட்டில் கேதுவும்


பத்தில் சனியும்


பதினொன்றில் குருவும்


பனிரெண்டில் புதனும் அமர்ந்துள்ளனர்.


கிரகப் பார்வைகள்

குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


எந்தவொரு செயலிலும் வேகமின்றி விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் லாபத்தை பெற முடியும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களையும், எண்ணங்களையும் அறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேற காலதாமதமும், அலைச்சலும் ஏற்படும். மனதில் தாய் பற்றிய சிந்தனைகள் மற்றும் பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் படிப்படியாக குறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு வீடுகளை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். கனரக வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கை துணைவரை அமைத்து கொள்வதற்கான பொன்னான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் எதிர்பாராத ஒரு சமயத்தில் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கி மனதில் இருக்கக்கூடிய எண்ணங்கள் நிறைவேறும்.


பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :


பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் இழுபறிகள் அகலும். எதிர்பாராத சில நேரங்களில் மாற்றமான வாய்ப்புகளால் மேன்மை உண்டாகும். சம வயதினர் மற்றும் அறிமுகமில்லாத புதிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடத்தில் விருப்பு, வெறுப்புகளின்றி விட்டு கொடுத்து செல்வது நல்லது. வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுப்பது பொருளாதார மேன்மைக்கு வழிவகுக்கும். எதிர்பாராத அலைச்சல்கள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும்.


மாணவர்களுக்கு :


மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கடின முயற்சிகளுக்கு பின்பே சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும்.


பெண்களுக்கு :


உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் அவர்களின் கலந்துரையாடல்களில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. நவீன தொழில்நுட்பம் தொடர்பான பொருட்களை கையாளுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். தந்தை வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நாள் சேமிப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


வியாபாரிகளுக்கு :


ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் புகழ் சொற்களுக்கு செவி சாய்க்காமல் நிதானத்துடன் முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கட்சி தொடர்பான உயரதிகாரிகளின் ஆதரவுகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது உங்கள் மீது இருக்கக்கூடிய நன்மதிப்பை மேம்படுத்தும். கட்சி தொடர்பான செயல்பாடுகளில் சொந்த பணத்தை செலவிடும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய தொழில்நுட்பம் மற்றும் வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


கலைஞர்களுக்கு :


கலைத்துறையில் இருப்பவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வதன் மூலம் நன்மதிப்பை பெற முடியும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் படிப்படியாக குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஈடுபடும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். அவ்வப்போது உங்களின் மீதான சிறுசிறு வதந்திகள் தோன்றி மறையும்.


வழிபாடு :


செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை வெள்ளைநிற பூக்களினால் பூஜை செய்து வழிபாடு செய்துவர நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருக்கக்கூடிய விஷயங்களுக்கு தீர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...