கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - ரிஷபம்

பிலவ வருடம் 2021-2022

தன்னலம் கருதாது மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் மனம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசியில் செவ்வாயும், ராகுவும்


ஏழில் கேதுவும் 


ஒன்பதில் சனியும் 


பத்தில் குருவும் 


பதினொன்றில் புதனும்


பனிரெண்டில் சூரியனும், சந்திரனும், சுக்கிரனும் அமர்ந்துள்ளனர்.


கிரகப் பார்வைகள்

குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


நண்பர்கள் வழியில் மேன்மையான உதவிகளும், ஆதரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அறிமுகமில்லா புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதில் மாற்றத்தையும், பழக்கவழக்கங்களில் வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் யாவும் நீங்கி ஒற்றுமை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கான தருணங்கள் உண்டாகும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த விஷயங்கள் யாவும் கைகூடும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :


பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் நெருக்கடிகள் குறையும். தொழில் நிமிர்த்தமாக புதிய முதலீடுகளில் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.


வியாபாரிகளுக்கு :


வியாபாரிகள் வேலையாட்கள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சில இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சில ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபார ஸ்தலங்களை மாற்றுவதற்கான வாய்ப்புகளும், அபிவிருத்திக்கான சூழ்நிலைகளும் உண்டாகும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை பற்றிய புரிதலும் உண்டாகும். புதிய நுட்பம் தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தும் பொழுது தகுந்த பயிற்சிகளை பெற்று மேற்கொள்வது நல்லது. வேலை நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். 


மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகளும், ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதத்திலும் இருக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபடும் பொழுது சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தொழிற்கல்வி தொடர்பான விஷயங்களில் சிறு சிறு குழப்பங்களும், தாமதங்களும் ஏற்பட்டு நீங்கும்.


பெண்களுக்கு :


பெண்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அழகு சாதன பொருட்களின் மீது ஆர்வங்கள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் எதிர்பாராத தருணத்தில் வெளியூர் பயணங்கள் சென்று ருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். கட்சி நிமிர்த்தமான உயரதிகாரிகள் மூலம் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சாதகமான பலன்களும் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படும்.


கலைஞர்களுக்கு :


கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவதற்கான புதிய வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகள், பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளை குறைக்க உதவும். வித்தியாசமான புதிய முயற்சிகளுக்கு தாமதமான அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற ரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.


வழிபாடு :


புதன்கிழமைதோறும் துளசியை கொண்டு பெருமாளை வழிபாடு செய்துவர குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையும், சிந்தனையும், தெளிவும் கிடைக்கப் பெறுவீர்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPSC IFS Recruitment 2025

UPSC IFS Recruitment 2025  வேலைவாய்ப்புகள் - Job Notification  ✅ காலி இடங்கள்: 150 Indian Forest Service Examination 2025 Posts  ✅ கல்வி தகு...