கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - மீனம்
பிலவ வருடம் 2021-2022
எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும் அதில் நன்கு சிந்தித்து செயல்படும் மீன ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசியில் புதனும்
இரண்டில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
மூன்றில் ராகுவும், செவ்வாயும்
ஒன்பதில் கேதுவும்
பதினொன்றில் சனியும்
பனிரெண்டில் குருவும் அமர்ந்துள்ளனர்.
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
பழைய நினைவுகள் மற்றும் நீண்டகால நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். வாக்குகளில் கடினத்தன்மையை குறைத்து கொள்வது நல்லது. அவ்வப்போது பேச்சுக்களில் நகைச்சுவையும், அனுபவ அறிவு வெளிப்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தாய் பற்றிய சிந்தனைகள் மற்றும் கவலைகள் மனதில் தோன்றிய வண்ணமாக இருக்கும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு மற்றும் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வாகனம் மற்றும் வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புத்தி சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகங்களும், ஆதரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் நினைத்த சிறுசிறு ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகத்தில் உபரி வருமானம் கிடைத்தாலும் வரவுக்கு ஏற்ப செலவுகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நீண்ட கால வைப்பு நிதிகளின் மூலம் லாபங்கள் மேம்படும். எந்தவொரு செயலையும் பதற்றமின்றி செய்வது நல்லது. துரித உணவுகளை குறைத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்து விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் கல்வி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் ஈடுபடுதல் அவசியமாகும். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கடின முயற்சிக்கு பின்பே கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் தனம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.
பெண்களுக்கு :
பெண்கள் எந்தவொரு விஷயத்திலும் உணர்ச்சிக்கு அடிமையாகாமல் பொறுமையாக சிந்தித்து செயல்படுவது எதிர்கால வாழ்க்கைக்கு நன்மையளிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகளும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மை தன்மைகளை அறிந்து செயல்படுதல் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப விபரங்களை பணிபுரியும் இடங்களில் பகிராமல் இருப்பது நல்லது. எதிர்பாராத வெளியூர் பயணங்கள் மற்றும் உத்தியோக மாற்றங்கள் சிலருக்கு ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகளும், பணிகளில் பொறுப்புக்களும், அதிகாரங்களும் அதிகரிக்கும். திறமைக்கேற்ப அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள் உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் மனதிற்கு விரும்பிய வகையில் வேலைவாய்ப்புகள் அமையும். சக ஊழியர்களிடம் முன்கோபம் இன்றி செயல்படுவது நல்லது. பணி நிமிர்த்தமான ரகசியங்களை பிறரிடம் பகிராமல் இருப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் தனவரவும், சேமிப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் உண்மையுடன் இருப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார அபிவிருத்தி மற்றும் வியாபார ஸ்தல மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொருட்களின் தரம் அறிந்து விற்பனை செய்வது லாபத்தையும், உங்களின் மீதான நம்பிக்கையையும் மேம்படுத்தும். விவசாயம் தொடர்பான பணிகளில் புதிய பயிர் விளைச்சலின்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், பொறுப்புகளும் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்பட்டாலும் உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலுடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். பயணம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். தொண்டர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கட்சி தொடர்பான பணிகளில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனக்குறைவின்றி செயல்படுதல் நல்லது. எதிர்பார்த்த வரவுகள் இழுபறியான நிலையில் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு தீர்வுகளும், முடிவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வித்தியாசமான மற்றும் நுட்பமான சிந்தனைகள் மூலம் அனைவரின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் வராகி அம்மனை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீக்கி எதிர்பாராத உதவிகளும், முன்னேற்றமான வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - கும்பம்
பிலவ வருடம் 2021-2022
பொறுமையும், நிதானமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசியில் குருவும்
இரண்டில் புதனும்
மூன்றில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
நான்கில் ராகுவும், செவ்வாயும்
பதினொன்றில் கேதுவும்
பனிரெண்டில் சனியும் அமர்ந்துள்ளனர்.
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் உயரும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. விவேகமான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். எதிர்பாராத பயணங்கள் மற்றும் செலவுகளின் மூலம் அவ்வப்போது நெருக்கடியான சூழ்நிலைகள் காணப்படும். புத்திரர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
பொருளாதாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். எதிர்காலம் தொடர்பான சேமிப்புகள் மற்றும் தனவரவுகள் அதிகரிக்கும். இழுபறியில் இருந்துவந்த செயல்களை செய்து முடித்து நற்பலனை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாகன பயணங்களில் மிதவேகத்தை கடைபிடிப்பது மிக நன்று. விலை உயர்ந்த எலக்ட்ரிக் பொருட்களை பயன்படுத்தும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகளில் கலந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் தன்மைகளை அறிந்து அவர்களுடன் பழகுவது மேன்மையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனவலிமையும் மேம்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் மூலமாக லாபங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உபரி வருமானங்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்கள் மற்றும் இடமாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், மாற்றங்களும் ஏற்படும். வங்கி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்திருந்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயரதிகாரிகளை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டங்களும் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு பல துறை பற்றிய அறிமுகங்கள் உண்டாகும். மேலும், வியாபாரத்தில் நுட்பங்களையும் அறிந்து கொள்வீர்கள். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். கட்டிடம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகளில் பெரியவர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு முடிவு செய்வது நன்மையை ஏற்படுத்தும். அழகு சாதனப்பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வேகத்தைவிட விவேகம் அவசியம் என்பதை புரிந்து சூழ்நிலைக்கேற்ப கருத்துக்கள் மற்றும் வாக்குறுதிகளை அளிப்து உங்களின் மீதான நம்பிக்கையையும், உறுதியையும் மேம்படுத்தும். அரசு தொடர்பான அதிகாரிகளிடத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். கட்சி தொடர்பான உயரதிகாரிகளிடத்தில் தேவையற்ற விவாதங்கள் மற்றும் மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வசதி வாய்ப்புகள் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு பிறக்கும்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - மகரம்
பிலவ வருடம் 2021-2022
மற்றவர்களின் மனம் அறிந்து செயல்பட்டு தனது காரியத்தை வெற்றியாக்கி கொள்ளும் மகர ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசியில் ராசியின் அதிபதியான சனியும்
இரண்டில் குருவும்
மூன்றில் புதனும்
நான்கில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
ஐந்தில் ராகுவும், செவ்வாயும்
பதினொன்றில் கேதுவும் அமர்ந்துள்ளனர்.
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட்டால் லாபங்கள் ஏற்படும். மூத்த சகோதர வகையில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களிடத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகளால் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். வருவாய் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமத நிலை நீங்கி தெளிவுகளும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். ஜென்ம சனி நடைபெறுவதால் எதிர்பாராத செய்திகளின் மூலம் வரவுக்கேற்ற செலவுகளும் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளும், ஒருவிதமான பதட்டமும் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து எழுதி பார்ப்பது நன்மையை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக நேரத்தை செலவழிப்பதை குறைத்து கொள்ளவும். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அதிக முயற்சிகளின் அடிப்படையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மேல்நிலை கல்வியில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலம் தவறி கிடைக்கும். பொறுமையுடன் முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
பெண்களுக்கு :
பெண்களுக்கு மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால், செயலளவில் அதை கொண்டு வரும்பொழுது காலதாமதமும், கவனக்குறைவினால் சிறுசிறு அவப்பெயர் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்களுக்கும், விரயங்களுக்கும் பின்பே ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பாகப்பிரிவினைகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வீடு மற்றும் சொகுசு வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்களும், அதற்கான கடனுதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் மத்தியில் ஆதரவான சூழ்நிலையும், செல்வாக்கும் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த சம்பள பாக்கிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத புதிய வாய்ப்புகளும், சாதகமான இடமாற்றமும் சிலருக்கு அமையும்.
வியாபாரிகளுக்கு :
இணையம் சார்ந்த வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். கட்டுமான பொருட்கள் மற்றும் கனரக வாகன பொருட்களின் வழியாக லாபங்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான உதவிகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் தேவையற்ற கோபங்களையும், பிடிவாத குணத்தையும் குறைத்து கொள்வது நல்லது. வார்த்தைகளில் கடினத்தன்மை இன்றி பொறுமையுடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாரிசுகள் மூலம் எதிர்பார்த்த ஆதரவு மற்றும் உதவிகள் காலதாமதமாகவே கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்கள் மற்றும் கட்சி தொடர்பான உயரதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புதுவிதமான யோசனைகளும், சிந்தனைகளும் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் மனதில் கவலைகள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை எவரிடத்திலும் பகிராமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். உங்களின் மீதான சிறுசிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தனவரவுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கடின உழைப்புக்கான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும் நீலநிற பூக்களினால் சனீஸ்வரரை வழிபாடு செய்துவர எண்ணத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - தனுசு
பிலவ வருடம் 2021-2022
பெருந்தன்மையான குணமும், விவேகத்துடனும் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசிக்கு இரண்டில் சனியும்
மூன்றில் குருவும்
நான்கில் புதனும்
ஐந்தில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
ஆறில் ராகுவும், செவ்வாயும்
பனிரெண்டில் கேதுவும் அமர்ந்துள்ளனர்.
கிரகப் பார்வைகள்
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களின் எதிர்பாராத ஆதரவுகள் மூலம் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தையின் சொத்துக்களை பராமரிப்பது மற்றும் சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தாழ்வு மனப்பான்மையினால் சில வாய்ப்புகள் தவறுவதற்கான சூழ்நிலைகள் இருப்பதால் எப்பொழுதும் மனதைரியத்துடன் செயல்பட வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனையும், அதன் நிமிர்த்தமமான மனக்கவலைகளும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடத்தில் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் :
நண்பர்களின் ஆதரவு மூலம் தனவரவு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சூழ்நிலைக்கேற்ப கருத்துக்களை மாற்றாமல் நேர்மையுடன் செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும். கால் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.
மாணவர்களுக்கு :
பிற மொழிகளில் திறமையும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படுவது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். இயந்திரம் மற்றும் வாகனம் தொடர்பான துறைகளில் பயில்பவர்களுக்கு திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். உயர்நிலைக்கல்வியில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.
பெண்களுக்கு :
தெளிவான சிந்தனைகளின் மூலம் எதிர்காலத்தை அமைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனை மற்றும் புதிய வீடு வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுயதொழில் புரிவோருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உயரதிகாரிகளுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலின மக்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சிலருக்கு காலதாமதமாக கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வியாபாரிகளுக்கு :
கால்நடை தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபங்கள் மேம்படும். பொன் மற்றும் ஆபரணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் புதிய வியூகங்களை அமைத்து வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். வேலையாட்களிடம் பொறுமையை கையாளுவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் மக்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் அறிந்து அதற்கேற்ப வியூகங்களை அமைத்து வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கருத்துக்களை பகிரும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். புதிய செயல்பாடுகள் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்று தரும். வசதி வாய்ப்புகள் மேம்படும். சாத்தியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளைநிற தாமரை பூக்களினால் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்- விருச்சிகம்
பிலவ வருடம் 2021-2022
போராட்ட குணமும், மனப்பக்குவமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ஜென்ம ராசியில் கேதுவும்
மூன்றில் சனியும்
நான்கில் குருவும்
ஐந்தில் புதனும்
ஆறில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
ஏழில் செவ்வாயும், ராகுவும் அமர்ந்துள்ளனர்.
கிரகப் பார்வைகள்
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
பல துறைகள் பற்றிய விழிப்புணர்வும், அறிவும் கிடைக்கப் பெறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். செய்யும் காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சிறு வருவாய் ஆனாலும் அதை சேமிப்பது எவ்விதம் என்பது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களை பற்றிய வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் மற்றும் குழப்பங்கள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். இதுவரை இருந்துவந்த நெருக்கடிகள் குறைந்து மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவு மற்றும் ஆலோசனைகளின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். தொண்டை வலி தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும்.
மாணவர்களுக்கு :
மாணவ, மாணவியர்கள் கல்வி தொடர்பான பணிகளில் அலட்சியம் இல்லாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதி பார்ப்பது நன்மையை ஏற்படுத்தும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலுக்கு பின்பு ஆதாயம் உண்டாகும்.
பெண்களுக்கு :
பெண்கள் புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது பெரியோர்களிடம் கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. பேச்சுக்களில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகள் மற்றும் இடமாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதத்திற்கு பின்பு சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறுசிறு இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சிறு தொழில் புரிவோருக்கு எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவுகள் மேம்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், மறைமுகமான சில எதிர்ப்புகளும், தடைகளும் ஏற்பட்டு நீங்கும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவுகள் காலதாமதமாக கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும். வேலையில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற ரகசியங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.
வியாபாரிகளுக்கு :
வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அபிவிருத்தியான வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய கிளைகள் தொடங்குவது தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபார ஸ்தலங்களை மாற்றுவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசு மற்றும் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுகமான தடைகளை தகர்த்தெறிவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உயரதிகாரிகளின் மூலம் சில முன்னேற்றமான காரியங்களை செய்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு படைப்புகள் வெளிப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். வேகத்தை விட விவேகத்துடன் கூடிய முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்துவர நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - துலாம்
பிலவ வருடம் 2021-2022
உடன் இருப்பவர்களை எளிதில் புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசிக்கு இரண்டில் கேதுவும்
நான்கில் சனியும்
ஐந்தில் குருவும்
ஆறில் புதனும்
ஏழில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
எட்டில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.
கிரகப் பார்வைகள்
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
மனதில் நேர்மையும், செயல்பாடுகளில் வேகமும் அதிகரிக்கும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளாலும், அனைவரையும் அனுசரித்து செல்லும் குணங்களின் மூலமும் பலரால் விரும்பப்படுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த வம்பு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பத்திரம் மற்றும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனை மற்றும் கட்டிய வீட்டை வாங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அது தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கனரக வாகனம் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் ஏற்படுத்தும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகள் மற்றும் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத வெளியூர் பயணம் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் :
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் சேமிப்பை அதிகப்படுத்த இயலும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகளால் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
மாணவர்களுக்கு :
கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகளும், ஆசிரியர்களின் ஆலோசனைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தாயின் அரவணைப்பும், ஆறுதலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் மனதை காயப்படுத்தும் படியான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உயர்கல்வியில் அலைச்சல்களும், சிறுசிறு குழப்பங்களும் ஏற்பட்டு நீங்கும். சமூக மற்றும் பொருளியல் தொடர்பான கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். வாழ்க்கை துணைவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் மலரும். சிறு மற்றும் குறு தொழில் புரிபவர்கள் கடன் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் கோபமான பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பதன் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பார்த்திருந்த பயணம் தொடர்பான விஷயங்கள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். உபரி வருமானம் கிடைத்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். உங்களின் உழைப்பு மற்றவர்களுக்கு சாதகமாக அமையும். பொறுமையுடன் இருப்பதன் மூலம் செய்த முயற்சிக்கான பலன்கள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்களின் மூலம் உயரதிகாரிகளிடம் காரிய சித்திகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். இணைய வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் லாபங்கள் மேம்படும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிறுதொழில் முனைவோருக்கு ஆதரவான சூழ்நிலைகள் அமையும். நெருப்பு சார்ந்த வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு லாபமும், மேன்மையும் உண்டாகும். விவசாய பணிகளில் கிழங்கு சார்ந்த விளைச்சல்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செயல்பாடுகளின் மூலம் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி நிமிர்த்தமான உயரதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தனவரவும், சேமிப்பும் அதிகரிக்கும் காலக்கட்டங்கள் ஆகும். பயணம் தொடர்பான விஷயங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். செய்கின்ற புதிய முயற்சிகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான, வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். தனவரவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வீடு மற்றும் வாகனம் தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஆதரவு சற்று கால தாமதமாகவே கிடைக்கும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் செவ்வரளி பூக்களினால் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர சுபகாரியம் தொடர்பான செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - கன்னி
பிலவ வருடம் 2021-2022
கவனம் எதில் இருப்பினும் தன் கடமைகளில் எள்ளளவும் தவறாத கன்னி ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசிக்கு மூன்றில் கேதுவும்
ஐந்தில் சனியும்
ஆறில் குருவும்
ஏழில் புதனும்
எட்டில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
ஒன்பதில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.
கிரகப் பார்வைகள்
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பயணம் தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும், செயல்பாடுகளில் துரிதமும் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான பயணங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு தீர்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்களிடம் பேசும்போது பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். அண்டை, அயலாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது பெரியோர்களிடம் கலந்தாலோசித்து எடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
அரசு தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். தந்தைவழி மற்றும் சம வயதினரின் ஆதரவுகள் மூலம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு :
பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான முயற்சிகளின் மூலம் பாராட்டுகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். திருமணமான தம்பதியர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் தேவையற்ற சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற இயலும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் நேர்மையுடன் இருப்பது உங்களுக்கு மேன்மையையும், பாராட்டுகளையும் பெற்று தரும். ஆராய்ச்சி சார்ந்த பணிகள் மற்றும் வெளியூர் தொடர்பான பயணங்களை எதிர்பார்த்தவர்களுக்கு சிறு சிறு அலைச்சல்கள் மூலம் சோர்வு ஏற்பட்டாலும் ஆதரவான பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், எதிர்பாராத இடமாற்றங்களும் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு மூலம் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி செய்து பிறகு முடிவுகளை வெளியிடுவது நல்லது. உயரதிகாரிகளிடம் மற்றவர்களை பற்றி குறை கூறுவதை குறைத்து கொள்ளவும். உபரி வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடனும், சிந்தித்து செயல்படுவதன் மூலமும் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மேலும், தொழில் ஆதாரத்தை நிலைநிறுத்தவும் முடியும். வேலையாட்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பயணம் நிமிர்த்தமான வியாபாரங்களில் அலைச்சல்களும், விரயங்களும் ஏற்படும். மென்பொருள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய மனை மற்றும் வீடு தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட்டால் நன்மையை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கட்சி நிமிர்த்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் புதுவிதமான எண்ணங்களையும். சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் மற்றும் தடைகளை தகர்த்தெறிவீர்கள்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளைநிற பூக்களின் மூலம் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர எதிர்பார்த்திருந்த உதவிகளும், அதிர்ஷ்டங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - சிம்மம்
பிலவ வருடம் 2021-2022
எதிலும் நேர்மையுடனும், விவேகத்துடனும் செயல்படக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசிக்கு நாளில் கேதுவும்
ஆறில் சனியும்
ஏழில் குருவும்
எட்டில் புதனும்
ஒன்பதில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
பத்தில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.
கிரகப் பார்வைகள்
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த சிறு சிறு பயங்களும், பதற்றங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டாலும் சில நேரங்களில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தாய்வழி உறவுகளிடம் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். சொத்து பிரிவினை தொடர்பான விஷயங்களில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாகன பழுது ஏற்பட்டு சிறு சிறு விரயங்கள் ஏற்படும். அலுவலகம் தொடர்பான விஷயங்களை பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் :
உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இனிப்பு மிகுந்த உணவுகளை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செலவு செய்வது சேமிப்பை பாதுகாக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் பிடிவாத குணத்தை விடுத்து பொறுமையுடன் பாடங்களில் கவனத்தை செலுத்துவது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து அவர்களின் நட்புகளை பெறுவது நல்லது. பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விளையாட்டு மற்றும் எழுத்து தொடர்பான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களுக்கு இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.
பெண்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றத்தை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவான பலன்கள் கிடைக்கும். பேசும் வார்த்தைகளால் மன வருத்தங்கள் ஏற்பட இருப்பதினால் பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். திருமணம் மற்றும் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எண்ணங்கள் மற்றும் கற்பனைகளில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றமும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோகம் நிமிர்த்தமான சிறு தூரப் பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சக ஊழியர்களிடத்தில் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு தொழில் அபிவிருத்தி நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் லாபங்கள் மேம்படும். வியாபாரத்தில் நுட்பமான விஷயங்களை செயல்படுத்தும் பொழுது தகுந்த ஆலோசனை பெற்று முயற்சிகளை மேற்கொள்வது நன்மையளிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆவணங்களை பெற்று கொடுக்க வேண்டும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து, அனுசரித்து வேலைகளை வாங்குவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான அணுகுமுறைகளும், வாய்ப்புகளும் கிடைக்கும். நேர்மையுடன் செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நன்மதிப்பையும், நம்பிக்கையையும் மேம்படுத்த முடியும். தொண்டர்கள் மற்றும் சக மக்களுடைய ஆதரவுகளை காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். கட்சி நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த பதவி கிடைக்கப் பெற்ற பின் செய்திகளை வெளிப்படுத்துவது நல்லது. சிறு வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் உங்களை பற்றிய எண்ணங்களில் மாற்றம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தன வருவாய் மற்றும் சேமிப்புகள் அதிகப்படுத்தும் காலக்கட்டங்கள் இதுவாகும். முயற்சிக்கான பலன்கள் சாதகமாக அமையும். வேகத்தைவிட விவேகத்துடன் செயல்படுவது பாராட்டுகளை பெற்று தரும். முயற்சிக்கேற்ப அங்கீகாரங்களை கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகங்களும், புதுவிதமான அனுபவங்களும் கிடைக்கும்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெயில் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர கணவன்-மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - கடகம்
பிலவ வருடம் 2021-2022
அனைவரிடத்திலும் அன்பும், கற்பனை திறனும், எதையும் சிந்தித்து செயலாற்றும் திறன் கொண்ட கடக ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசிக்கு ஐந்தில் கேதுவும்
ஏழில் சனியும்
எட்டில் குருவும்
ஒன்பதில் புதனும்
பத்தில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
பதினொன்றில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.
கிரகப் பார்வைகள்
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
வாக்கு சாதுர்யத்தின் மூலம் பல காரியங்களை சாதித்துக் கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்களும், செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களில் வித்தியாசங்களும் ஏற்படும். இளைய உடன்பிறப்புகளிடம் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும். ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு அமையும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவும், அறிமுகங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மனதை குழப்பி கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவான பதில்கள் கிடைக்கும். நீண்டநாள் சேமிப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களிடத்தில் கோபத்தினை விடுத்து பொறுமையுடன் செயல்பட்டால் காரியசித்தி ஏற்படும். வீடு மற்றும் மனை தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
குடும்ப உறுப்பினர்களின் உதவி மற்றும் புதிய நபர்களின் ஆதரவுகள் மூலம் தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். பேச்சுக்களில் கோபமின்றி பொறுமையுடன் இருப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் எதிர்பாராத ஒத்துழைப்புகள் மூலம் மேன்மை உண்டாகும். புதிய வேலை மற்றும் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உபரி வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சார்ந்து இருந்துவந்த பிரச்சனைகள் எதிர்பாராத விதத்தில் அகலும். எதிர்பாலின மக்களிடத்தில் தேவையற்ற விஷயங்களை பகிர்வதை குறைத்து கொள்ளவும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து எழுதி பார்ப்பது மேன்மையை ஏற்படுத்தும். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஆர்வங்களை குறைத்து கொள்வது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்குண்டான அனுபவங்களும், பலன்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கவனக்குறைவுகள் மூலம் அவ்வப்போது அவப்பெயர் ஏற்பட்டு மறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை மற்றும் காலதாமதங்கள் அகலும். சிலருக்கு அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணமான பெண்கள் குழந்தை விஷயத்தில் சற்று பெரியோர்களின் ஆலோசனை மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின்படி நடப்பது நல்லது.
வியாபாரிகளுக்கு :
வாகனம் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபங்களும், புதிய வாய்ப்புகளும் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் கூட்டத்தில் உரையாடும் பொழுது கோபத்தை விடுத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. அரசியல் சார்ந்த முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மேன்மையை ஏற்படுத்தும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சோர்வும், அவ்வப்போது விரக்தியும் ஏற்பட்டு மறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் தூக்கமின்மையும், ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகளும் ஏற்பட்டு மறையும். ஆகவே, உணவு சார்ந்த விஷயங்களிலும், தூக்கத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதை குறைத்து கொள்வது நல்லது. முயற்சிக்கு உண்டான ஊதியமும், அங்கீகாரமும் காலதாமதமாகவே கிடைக்கும். சம்பள விஷயத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. மூத்த கலைஞர்களிடம் விதண்டாவாதங்களை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். செய்யும் முயற்சிகளில் முழு ஈடுபாட்டோடு செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் சிவப்பு நிறப்பூக்கள் மூலம் ராகவேந்திரரை வணங்கி வர எண்ணங்களில் தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - மிதுனம்
பிலவ வருடம் 2021-2022
சூழ்நிலைக்கேற்ப காரியத்தை செய்து முடிக்கும் திறமை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசிக்கு ஆறாம் இடத்தில் கேதுவும்
எட்டாம் இடத்தில் சனியும்
ஒன்பதாம் இடத்தில் குருவும்
பத்தாம் இடத்தில் புதனும்
பதினொன்றாம் இடத்தில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்
பனிரெண்டாம் இடத்தில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.
கிரகப் பார்வைகள்
குரு
c 5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
குருவின் பார்வை அனைத்து ராசிக்கும் கிடைக்கப் பெற்று இருப்பதினால் மனதில் நினைத்த காரியங்கள் யாவற்றையும் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிறுதூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுதும், பெரியவர்களிடத்தில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போதும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். அஷ;டம சனி நடைபெற்று கொண்டிருப்பதனால் செய்யும் பணிகளில் அலட்சியம் இல்லாமல் கவனத்தோடு இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். தந்தைவழி உறவினர்களை எதிர்பார்த்து சில காரியங்களை செய்யும் பொழுது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதார மேன்மைகள் உண்டாகும். திட்டமிட்ட செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வாரிசுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து சுபிட்சம் மலரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வாகன பயணங்களில் வேகத்தைவிட விவேகத்தை கடைபிடிப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். சிறு வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் அதில் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கையும், பாராட்டுகளும் அதிகரிக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கிறதே என்று கவலைப்படாமல் முழு கவனத்தோடு ஈடுபட்டால் செய்யும் வேலைக்கு உண்டான பலன்கள் உரிய காலத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள், பயம் முதலியவை நீங்கி தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பல விஷயங்களை பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். தனவரவுகள் மேன்மையடையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. சிறுதொழில் செய்வது பற்றிய சிந்தனை உள்ளவர்களுக்கு அதற்குண்டான உதவிகளும், வாய்ப்புகளும் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான சுபவிரயங்கள் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். இதுவரை தொழிலில் தேங்கியிருந்த பொருட்களை விற்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய வியூகங்களை அமைப்பீர்கள். தொழில் அபிவிருத்தி தொடர்பான செயல்பாடுகளில் நிபுணர்களின் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது. வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப சந்தை விளம்பரங்களின் மூலம் மேன்மைகள் உண்டாகும். இணையம், வர்த்தகம் சார்ந்த வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளின் மூலம் லாபங்கள் மேம்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மேல்நிலைகல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் தெளிவு ஏற்படும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்கங்கள் நீங்கி தெளிவுடன் செயல்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கட்சி நிமிர்த்தமான உயரதிகாரிகளின் ஆலோசனைகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிர்பாராத கட்சி நிமிர்த்தமான பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் முன்கோபத்தை விடுத்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தேவையான இடங்களில் குறைந்த அளவு பேசுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க கால அவகாசம் அதிகமாகும். பயணங்கள் செல்வது தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
வழிபாடு :
புதன்கிழமைதோறும் துளசி இலைகளினால் சயனகோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை வழிபாடு செய்துவர முயற்சி மற்றும் உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - ரிஷபம்
பிலவ வருடம் 2021-2022
தன்னலம் கருதாது மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் மனம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசியில் செவ்வாயும், ராகுவும்
ஏழில் கேதுவும்
ஒன்பதில் சனியும்
பத்தில் குருவும்
பதினொன்றில் புதனும்
பனிரெண்டில் சூரியனும், சந்திரனும், சுக்கிரனும் அமர்ந்துள்ளனர்.
கிரகப் பார்வைகள்
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
நண்பர்கள் வழியில் மேன்மையான உதவிகளும், ஆதரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அறிமுகமில்லா புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதில் மாற்றத்தையும், பழக்கவழக்கங்களில் வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் யாவும் நீங்கி ஒற்றுமை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கான தருணங்கள் உண்டாகும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த விஷயங்கள் யாவும் கைகூடும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் நெருக்கடிகள் குறையும். தொழில் நிமிர்த்தமாக புதிய முதலீடுகளில் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகள் வேலையாட்கள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சில இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சில ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபார ஸ்தலங்களை மாற்றுவதற்கான வாய்ப்புகளும், அபிவிருத்திக்கான சூழ்நிலைகளும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை பற்றிய புரிதலும் உண்டாகும். புதிய நுட்பம் தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தும் பொழுது தகுந்த பயிற்சிகளை பெற்று மேற்கொள்வது நல்லது. வேலை நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகளும், ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதத்திலும் இருக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபடும் பொழுது சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தொழிற்கல்வி தொடர்பான விஷயங்களில் சிறு சிறு குழப்பங்களும், தாமதங்களும் ஏற்பட்டு நீங்கும்.
பெண்களுக்கு :
பெண்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அழகு சாதன பொருட்களின் மீது ஆர்வங்கள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் எதிர்பாராத தருணத்தில் வெளியூர் பயணங்கள் சென்று ருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். கட்சி நிமிர்த்தமான உயரதிகாரிகள் மூலம் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சாதகமான பலன்களும் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவதற்கான புதிய வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகள், பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளை குறைக்க உதவும். வித்தியாசமான புதிய முயற்சிகளுக்கு தாமதமான அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற ரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.
வழிபாடு :
புதன்கிழமைதோறும் துளசியை கொண்டு பெருமாளை வழிபாடு செய்துவர குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையும், சிந்தனையும், தெளிவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - மேஷம்
பிலவ வருடம் 2021-2022
தனக்கு பிடித்த விதத்தில் சுதந்திரமாக செயல்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே!!
பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரக அமைப்புகள் :
ராசியில் சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்
இரண்டில் செவ்வாயும், ராகுவும்
எட்டில் கேதுவும்
பத்தில் சனியும்
பதினொன்றில் குருவும்
பனிரெண்டில் புதனும் அமர்ந்துள்ளனர்.
கிரகப் பார்வைகள்
குரு
5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்
சனி
3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்
செவ்வாய்
4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு
பலன்கள் :
எந்தவொரு செயலிலும் வேகமின்றி விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் லாபத்தை பெற முடியும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களையும், எண்ணங்களையும் அறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேற காலதாமதமும், அலைச்சலும் ஏற்படும். மனதில் தாய் பற்றிய சிந்தனைகள் மற்றும் பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் படிப்படியாக குறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு வீடுகளை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். கனரக வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கை துணைவரை அமைத்து கொள்வதற்கான பொன்னான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் எதிர்பாராத ஒரு சமயத்தில் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கி மனதில் இருக்கக்கூடிய எண்ணங்கள் நிறைவேறும்.
பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் இழுபறிகள் அகலும். எதிர்பாராத சில நேரங்களில் மாற்றமான வாய்ப்புகளால் மேன்மை உண்டாகும். சம வயதினர் மற்றும் அறிமுகமில்லாத புதிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடத்தில் விருப்பு, வெறுப்புகளின்றி விட்டு கொடுத்து செல்வது நல்லது. வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுப்பது பொருளாதார மேன்மைக்கு வழிவகுக்கும். எதிர்பாராத அலைச்சல்கள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கடின முயற்சிகளுக்கு பின்பே சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும்.
பெண்களுக்கு :
உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் அவர்களின் கலந்துரையாடல்களில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. நவீன தொழில்நுட்பம் தொடர்பான பொருட்களை கையாளுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். தந்தை வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நாள் சேமிப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் புகழ் சொற்களுக்கு செவி சாய்க்காமல் நிதானத்துடன் முடிவெடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கட்சி தொடர்பான உயரதிகாரிகளின் ஆதரவுகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது உங்கள் மீது இருக்கக்கூடிய நன்மதிப்பை மேம்படுத்தும். கட்சி தொடர்பான செயல்பாடுகளில் சொந்த பணத்தை செலவிடும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய தொழில்நுட்பம் மற்றும் வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வதன் மூலம் நன்மதிப்பை பெற முடியும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் படிப்படியாக குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஈடுபடும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். அவ்வப்போது உங்களின் மீதான சிறுசிறு வதந்திகள் தோன்றி மறையும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை வெள்ளைநிற பூக்களினால் பூஜை செய்து வழிபாடு செய்துவர நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருக்கக்கூடிய விஷயங்களுக்கு தீர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
23-12-2024 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...