கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - மீனம்

பிலவ வருடம் 2021-2022

எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும் அதில் நன்கு சிந்தித்து செயல்படும் மீன ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசியில் புதனும்


இரண்டில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


மூன்றில் ராகுவும், செவ்வாயும்


ஒன்பதில் கேதுவும்


பதினொன்றில் சனியும்


பனிரெண்டில் குருவும் அமர்ந்துள்ளனர். 


குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


பழைய நினைவுகள் மற்றும் நீண்டகால நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். வாக்குகளில் கடினத்தன்மையை குறைத்து கொள்வது நல்லது. அவ்வப்போது பேச்சுக்களில் நகைச்சுவையும், அனுபவ அறிவு வெளிப்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தாய் பற்றிய சிந்தனைகள் மற்றும் கவலைகள் மனதில் தோன்றிய வண்ணமாக இருக்கும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு மற்றும் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வாகனம் மற்றும் வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புத்தி சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகங்களும், ஆதரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் நினைத்த சிறுசிறு ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள்.


பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :


பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகத்தில் உபரி வருமானம் கிடைத்தாலும் வரவுக்கு ஏற்ப செலவுகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நீண்ட கால வைப்பு நிதிகளின் மூலம் லாபங்கள் மேம்படும். எந்தவொரு செயலையும் பதற்றமின்றி செய்வது நல்லது. துரித உணவுகளை குறைத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்து விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் கல்வி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் ஈடுபடுதல் அவசியமாகும். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கடின முயற்சிக்கு பின்பே கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் தனம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.


பெண்களுக்கு :


பெண்கள் எந்தவொரு விஷயத்திலும் உணர்ச்சிக்கு அடிமையாகாமல் பொறுமையாக சிந்தித்து செயல்படுவது எதிர்கால வாழ்க்கைக்கு நன்மையளிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகளும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மை தன்மைகளை அறிந்து செயல்படுதல் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப விபரங்களை பணிபுரியும் இடங்களில் பகிராமல் இருப்பது நல்லது. எதிர்பாராத வெளியூர் பயணங்கள் மற்றும் உத்தியோக மாற்றங்கள் சிலருக்கு ஏற்படும்.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகளும், பணிகளில் பொறுப்புக்களும், அதிகாரங்களும் அதிகரிக்கும். திறமைக்கேற்ப அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள் உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் மனதிற்கு விரும்பிய வகையில் வேலைவாய்ப்புகள் அமையும். சக ஊழியர்களிடம் முன்கோபம் இன்றி செயல்படுவது நல்லது. பணி நிமிர்த்தமான ரகசியங்களை பிறரிடம் பகிராமல் இருப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.


வியாபாரிகளுக்கு :


வியாபார பணிகளில் தனவரவும், சேமிப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் உண்மையுடன் இருப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார அபிவிருத்தி மற்றும் வியாபார ஸ்தல மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொருட்களின் தரம் அறிந்து விற்பனை செய்வது லாபத்தையும், உங்களின் மீதான நம்பிக்கையையும் மேம்படுத்தும். விவசாயம் தொடர்பான பணிகளில் புதிய பயிர் விளைச்சலின்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், பொறுப்புகளும் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்பட்டாலும் உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலுடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். பயணம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். தொண்டர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கட்சி தொடர்பான பணிகளில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.


கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனக்குறைவின்றி செயல்படுதல் நல்லது. எதிர்பார்த்த வரவுகள் இழுபறியான நிலையில் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு தீர்வுகளும், முடிவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வித்தியாசமான மற்றும் நுட்பமான சிந்தனைகள் மூலம் அனைவரின் பாராட்டுகளை பெறுவீர்கள்.


வழிபாடு :


செவ்வாய்க்கிழமைதோறும் வராகி அம்மனை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீக்கி எதிர்பாராத உதவிகளும், முன்னேற்றமான வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.


 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...