கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - கும்பம்

பிலவ வருடம் 2021-2022

பொறுமையும், நிதானமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசியில் குருவும்


இரண்டில் புதனும்


மூன்றில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


நான்கில் ராகுவும், செவ்வாயும்


பதினொன்றில் கேதுவும்


பனிரெண்டில் சனியும் அமர்ந்துள்ளனர்.


குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் உயரும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. விவேகமான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். எதிர்பாராத பயணங்கள் மற்றும் செலவுகளின் மூலம் அவ்வப்போது நெருக்கடியான சூழ்நிலைகள் காணப்படும். புத்திரர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.


பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :


பொருளாதாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். எதிர்காலம் தொடர்பான சேமிப்புகள் மற்றும் தனவரவுகள் அதிகரிக்கும். இழுபறியில் இருந்துவந்த செயல்களை செய்து முடித்து நற்பலனை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாகன பயணங்களில் மிதவேகத்தை கடைபிடிப்பது மிக நன்று. விலை உயர்ந்த எலக்ட்ரிக் பொருட்களை பயன்படுத்தும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.


மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகளில் கலந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் தன்மைகளை அறிந்து அவர்களுடன் பழகுவது மேன்மையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


பெண்களுக்கு :


பெண்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனவலிமையும் மேம்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் மூலமாக லாபங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உபரி வருமானங்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்கள் மற்றும் இடமாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், மாற்றங்களும் ஏற்படும். வங்கி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்திருந்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயரதிகாரிகளை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டங்களும் உண்டாகும்.


வியாபாரிகளுக்கு :


வியாபாரிகளுக்கு பல துறை பற்றிய அறிமுகங்கள் உண்டாகும். மேலும், வியாபாரத்தில் நுட்பங்களையும் அறிந்து கொள்வீர்கள். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். கட்டிடம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகளில் பெரியவர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு முடிவு செய்வது நன்மையை ஏற்படுத்தும். அழகு சாதனப்பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வேகத்தைவிட விவேகம் அவசியம் என்பதை புரிந்து சூழ்நிலைக்கேற்ப கருத்துக்கள் மற்றும் வாக்குறுதிகளை அளிப்து உங்களின் மீதான நம்பிக்கையையும், உறுதியையும் மேம்படுத்தும். அரசு தொடர்பான அதிகாரிகளிடத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். கட்சி தொடர்பான உயரதிகாரிகளிடத்தில் தேவையற்ற விவாதங்கள் மற்றும் மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும்.


கலைஞர்களுக்கு :


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வசதி வாய்ப்புகள் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.


வழிபாடு :


சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு பிறக்கும்.


 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...