12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா அல்லது முக்கியப் பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே, அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பொதுத்தேர்வுகளை ரத்து செய்யாமல், தற்போதைய நடைமுறையிலேயே தேர்வு நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், தமிழக அரசு தனது கருத்துகளை அனுப்பியுள்ளது. அதில், கொரோனா கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.