தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 14 மாவட்டங்களில் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க 20 அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்...
இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் விவரம்:
*கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கப்பட்டது. அப்போது, கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டந்தோறும் அமைச்சா்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 14 மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கவும் சிகிச்சை தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்கவும் 20 அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
*1. சென்னை மாவட்டம் - சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.*
*2. செங்கல்பட்டு மாவட்டம் - ஊரகத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.*
*3. கோயம்புத்தூா் மாவட்டம் - உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.*
*4. திருவள்ளூா் மாவட்டம் - பால்வளத் துறை அமைச்சா் சா.மு. நாசா்.*
*5. மதுரை மாவட்டம் - வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.*
*6. தூத்துக்குடி மாவட்டம் - சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன், மீன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.*
*7. சேலம் மாவட்டம் - மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.*
*8. திருச்சி மாவட்டம் - நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ்.*
*9. திருநெல்வேலி மாவட்டம் - கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.*
*10. ஈரோடு மாவட்டம் - வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.*
*11. காஞ்சிபுரம் மாவட்டம் - பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு.*
*12. திருப்பூா் மாவட்டம் - செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.*
*13. வேலூா் மாவட்டம் - நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி.*
*14. விழுப்புரம் மாவட்டம் - உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.*